ஆயுசுக்கும் உடல் சோர்வு ஏற்படாமல், சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, இரும்பு மனிதர் போல வாழ 1 டம்ளர் இந்த பாலை குடியுங்கள் போதும்.

milk
- Advertisement -

நம்முடைய உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு முதல் காரணம், இன்றைக்கு இருக்கக்கூடிய உணவு பழக்க வழக்க முறைகள் தான். உடல் ஆரோக்கியம் என்பது முழுமை அடைவதே கிடையாது. ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள் நம்மை சுறுசுறுப்பாக இருக்க செய்வது இல்லை. சத்தே இல்லாத வெறும் திப்பி உணவை தான் நாம் உண்டு வருகின்றோம். உடல் சோர்வு, முதுகு வலி, மூட்டுவலி, ரத்த சோகை, உடல் சூடு, மலச்சிக்கல் பிரச்சனை இப்படியாக பல வகையான உடல் உபாதைகளுக்கும் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்க தினம்தோறும் 1 டம்ளர் பாலை இப்படி குடித்தாலே போதும்.

இந்தப் பாலை தயார் செய்ய தேவையான பொருட்கள். காய்ச்சாத பசும்பால் – 2 டம்ளர், உலர்ந்த திராட்சை – 10 லிருந்து 15, சிவப்பு அவல் – 4 ஸ்பூன். முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் 2 டம்ளர் காய்ச்சாத பசும் பாலை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு உலர்திராட்சையையும், சிவப்பு அவலையும் அந்தப் பாலில் சேர்த்து பாலை நன்றாக காய வைத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

- Advertisement -

சூடான பாலில் இந்த இரண்டு பொருட்களும் நன்றாக ஊறட்டும் 5 நிமிடம் ஊரினால் போதும். இறுதியாக 2 ஸ்பூன் அளவு நாட்டுச்சர்க்கரையை இந்த பாலுடன் சேர்த்து கலந்து உலர் திராட்சை அவலுடன் அப்படியே குடித்து விடவேண்டும். காலை ஒரு டம்ளரும், மாலையில் ஒரு டம்ளரும் இப்படி இந்த பாலை குடித்து வரலாம்.

sigappu-aval

பாக்கெட் பாலில் இந்த குறிப்பை பின்பற்றக்கூடாது. உடலுக்கு தேவையான சத்து நிச்சயம் கிடைக்காது. உங்கள் வீட்டு அருகில் பசும்பால் கிடைக்கவில்லை என்றால் தேங்காய்ப்பாலில் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து 1/2 மணி நேரம் வரை ஊற வைத்து சாப்பிடலாம். தேங்காய்ப்பாலை எக்காரணத்தைக் கொண்டும் சூடு செய்து அதிகமாக சாப்பிடக்கூடாது.

- Advertisement -

தேங்காய் பாலை சமைத்து சாப்பிடும்போது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து விடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். காய்ச்சாத தேங்காய்ப்பாலில் தான் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை வெளியேற்ற கூடிய சக்தி உள்ளது.

milk1

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை தினமும் சாப்பிட்டு வரலாம். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரும்பட்சத்தில் உங்களை அறியாமலேயே உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் சோர்வு நீங்கும். குறிப்பாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு இதை கொடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -