இந்த டிப்ஸ் மட்டும் நீங்க தெரிஞ்சு வெச்சுகிட்டா, உங்க வீட்ல காய்ந்துபோன எலுமிச்சம் பழங்களை தூக்கி குப்பையில் போடவே மாட்டீங்க!

lemon

நம்முடைய வீட்டில் கட்டாயமாக தேவைக்கு அதிகமாகவே எலுமிச்சம் பழங்கள் இருக்கும். குறிப்பாக விலை குறைவாக இருக்கும் போது, எலுமிச்சம் பழங்களை வாங்கி காயவைத்து அதை நம்மில், பெரும்பாலானோர் குப்பையில் போட தான் செய்வோம். இனி அந்த தவறை யாரும் செய்ய வேண்டாம். காய்ந்த அந்த எலுமிச்சம் பழங்களை வைத்து உபயோகமாக என்ன செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எலுமிச்சம் பழம் காய்ந்தே போனாலும் சரி, அதற்கு இருக்கும் சக்தி குறைய வாய்ப்பே இல்லை.

lemon1

காய்ந்த எலுமிச்சை பழங்களை இரண்டாக வெட்டி, அதில் இருக்கும் சாரை சுத்தமாக பிடித்து விடுங்கள். அதன் பின்பு இந்த தோலை ஒரு டிஷ்யூ பேப்பரில் அல்லது, வெள்ளை நிற பேப்பரிலோ வைத்து மடித்து, உங்கள் வீட்டு அலமாரிகளில் அடுக்கி வைத்திருக்கும் பொருட்களுக்கு இடையே இடையே வைத்து விடுங்கள். குறிப்பாக புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் அலமாரிகள், துணிகள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரி மற்ற தேவையில்லாத ஜாமான்கள் வைத்திருக்கும் அலமாரி என்று எல்லா இடங்களிலும் இந்த காய்ந்த எலுமிச்சை பழத் தோலின் வாசம் வீசும் வரை, குட்டி குட்டியான பூச்சிகளின் தொல்லை, கரப்பான் பூச்சி தொல்லை, மூட்டை பூச்சி தொல்லை வருவதற்கு வாய்ப்பே இல்லை. சமையலறையில் இந்த தோலை வைத்தால் எறும்புகள் வருவதற்குக் கூட வாய்ப்பு குறைவு.

அடுத்தபடியாக பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறுடன், இந்த எலுமிச்சம் பழத் தோல்களை தொட்டு உங்களுடைய கை முட்டி, கால் முட்டி, கழுத்துப்பகுதி, பாதம், கணுக்கால் முட்டி, கால் விரல்களின் இடுக்குகள், வெடிப்பு உள்ள பகுதிகள் என்று எல்லா இடத்திலும் இலேசாக மசாஜ் செய்து, காய்ந்த எலுமிச்சை பழ தோலை வைத்து தேய்த்து குளித்து விடுங்கள். குளிக்கும்போது இப்படி செய்தால் உங்களுடைய சருமத்தில் சொரசொரப்பாக இருக்கும் இடங்களில் உள்ள தேவையற்ற அழுக்குகள் நீங்கிவிடும்.

lemon2

அடுத்தபடியாக ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சமாக பாத்திரம் தேய்க்கும் லிக்விட் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி கலக்கிவிட்டு, அந்த சோப்பு தண்ணீரோடு இந்த எலுமிச்சை பழத் துண்டுகளை போட்டு ஊறவைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை தொட்டு பாத்திரம் தேய்த்தால் பாத்திரம் பளபளக்கும். அதிகப்படியான எண்ணெய்ப் பிசுக்கு படிந்த பாத்திரங்களில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு சீக்கிரமே போய்விடும். உங்களது கைகளும் பாதுகாப்பாக இருக்கும்.

- Advertisement -

இந்த லிக்விடை பயன்படுத்தி அசைவம் சமைத்த பாத்திரங்களை தேய்த்தாலும், அந்தப் பாத்திரத்தில் அசைவத்தின் வாடை சுத்தமாக நீங்கி விடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

cheppal

அடுத்தபடியாக நம் வீட்டில் ஸ்கிரீன் துணி, மிதியடி, சமையலறை பிடி துணி இப்படி மிகவும் அழுக்காகும் துணிகளை துவைக்கும் போது ஊற வைக்கும் சோப்புத் தண்ணீர் இருக்கும் அல்லவா? அந்த சோப்புத் தண்ணீரில் இந்த எலுமிச்சம் பழ தோலை மட்டும் போட்டாலும் சரி, அல்லது எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அப்படியே போட்டாலும் சரி அந்தத் துணிகளில் இருக்கும் அழுக்கு முழுமையாக நீங்கும்.

shoo

முக்கியமாக வீட்டில் கொசுக்கள் அதிகமாக சேரும் இடம் செருப்புகள் ஷூ வைக்கும் ஸ்டாண்டில் தான். அந்தச் ஸ்டாண்டிலும் காய்ந்த எலுமிச்சை பழத் துண்டுகளை போட்டு வைக்கலாம். காய்ந்த எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி உங்களுடைய ஷூ வுக்கு உள்ளேயும் ஒவ்வொரு துண்டுகள் வைத்தால், அந்த ஷூ எப்போதும் நல்ல நறுமணத்தோடு இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.