துர்க்கை அம்மனை இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு துக்கம் இல்லை! துன்பம் இல்லை! துயரமும் இல்லை.

durgai-amman
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை தீர்க்கக்கூடிய சக்தி குறிப்பாக சொல்லப்போனால், அதிபதியாக சிக்கல்கள் தடைகள் இன்னல்கள் தீர துர்க்கை அம்மன் வழிபாடு மிகவும் நல்லது. இப்போது கலியுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புரியும்படி சொன்னால், அனைவரும் ராகுவின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றோம். போட்டி, பொறாமை, ஏமாற்றம், சிக்கல் இவை அனைத்தும் சூழ்ந்தது தான் இந்த உலகம். ராகுவின் பிடியில் இருந்து தப்பிக்க துர்கை அம்மன் வழிபாட்டை விட சிறந்த வழிபாடு வேறு எதுவுமே கிடையாது.

durga-amma

இதை அறிந்து கொண்ட முன்னோர்கள், இதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்ற வழிபாட்டையே கொண்டு வந்தார்கள். ஆனால், நம்முடைய துயரத்தை நொடிப்பொழுதில் போக்கும், துர்க்கை அம்மனை வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்யலாமா? கூடாதா? என்ற சந்தேகம் இன்றளவும், நம்மில் பல பேருக்கு உள்ளது. தாராளமாக துர்கை அம்மன் திரு உருவப் படத்தை நம் வீட்டில் வைத்து வழிபடுவதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

- Advertisement -

கொஞ்சம் ஆக்ரோஷமாக இருக்கும் துர்க்கை அம்மனை வீட்டில் வைத்துக் கொள்ள, தினம்தோறும் கோபத்துடன் இருக்கும் அம்மனைப் பார்த்து தரிசனம் செய்து வழிபாடு செய்ய உங்களுக்கு பயமாக இருந்தால், சாந்தமாக இருக்கும் துர்க்கை அம்பாளின் திருவுருவப் படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை அன்று துர்க்கை அம்மனுக்கு வீட்டில் இருந்தபடியே மண் அகல் தீபம், நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றலாம்.

arali

அரலி புஷ்பங்களால் துர்கை அம்மனுக்கு அலங்காரம் செய்துவிட்டு, துர்கை அம்மனுக்கு மிகவும் விருப்பமான பேரீச்சம்பழத்தை நிவேதனமாக வைப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும். கூடவே ஒரு டம்ளரில் சுத்தமான தீர்த்தத்தில், ஒரு துளசி இலையைப் போட்டு வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கருப்பு புள்ளிகள் இல்லாத சுத்தமான ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து நான்காக வெட்டி, நான்கு துண்டுகளாக கையில் எடுத்திட கூடாது. நான்கு பாகங்களாக வெட்டி,  அதன் உள்ளே குங்குமத்தை நன்றாகத் தடவி, வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையிலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம். குங்குமம் தடவி தயாராக வைத்திருக்கும் அந்த எலுமிச்சம் பழத்தை உங்களது வலது கையில் எடுத்து, உங்களுடைய தலையை 27 முறை சுற்றிக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழத்தை 27 முறை சுற்றும் போதும், உங்கள் மனதிற்குள் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டத்தை அந்த அம்பாள் தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க வேண்டும்.

lemon

அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக கைகளாலேயே பிரித்து போட்டு விட வேண்டும். வீட்டிற்கு வெளியே சென்றுதான் இப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பூஜை அறையிலேயே ஒரு பாத்திரத்தில் உங்கள் தலையை சுற்றி எலுமிச்சைப் பழத்தை நசுக்கி போட்டு விடுங்கள். அதுவும் உங்கள் கைகளாலேயே.

praying-god1

உங்களை பிடித்த கஷ்டமும் சிக்கலும் அந்த எலுமிச்சை பழத்தோடு போய்விடும். பின்பு ஒரு பாத்திரத்தில் இருக்கும் அந்த எலுமிச்சம் பழத்தை கால் படாத இடத்தில் கொண்டுபோய் போட்டுவிடலாம். அல்லது ஒரு கவரில் கட்டி குப்பைக் கூடையில் போட்டு விடலாம். செவ்வாய்க்கிழமைகளில் இப்படி தொடர்ந்து செய்து வந்தால், வாழ்வின் தீராத இன்னல்கள், சிக்கல்களில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு விரைவாக ஒரு தீர்வினை அந்த துர்கையம்மன் காட்டுவாள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -