துன்பங்கள் தூள்தூளாக துர்கா கணபதி மந்திரம்! அச்சத்தைப் போக்கி, வாழ்க்கையின் உச்சத்தைத் தொட இதை விட சுலபமான மந்திரம் வேறு எதுவுமில்லை.

durga-ganapathi

எதிர்ப்புகள் இல்லாத வாழ்க்கையை கட்டாயம் மனிதர்களால் வாழ முடியாது. அந்த எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என்றால், மன உறுதியும் தைரியமும் நமக்கு அவசியம் தேவைப்படும். வாழ்க்கை என்று வந்துவிட்டாலே, நிச்சயம் அதில் எதிரிகளுடைய தொல்லை, உடல் உபாதைகள், ஏற்ற இறக்கங்கள் இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும். இவை அனைத்தையும் சமாளிக்க, நமக்கு அவசியம் தேவையான ஒன்று, துணிச்சல். நம் வாழ்க்கையில் வரக்கூடிய எதிர்ப்புகளை சமாளிக்கக்கூடிய துணிச்சலை நமக்கு தரக்கூடிய, எதிரிகளை அழித்து துவம்சம் செய்யக்கூடிய, நம் மனதிற்குள் இருக்கக்கூடிய பயம் இன்னும் எதிரியையும் அழிக்கக்கூடிய, துர்கா கணபதி மந்திரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

durga-ganapathi1

நம்முடைய வாழ்க்கையில் எப்போதுமே பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்று இருக்கக்கூடாது. பிறந்ததற்காக இந்த பூமியில், எதை சாதித்தோம்? நமக்கு பின்பு நம் பெயரை சொல்ல வெறும் சந்ததியினர் மட்டும் தானா? சரித்திரங்கள் இருக்க வேண்டாமா? நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக இந்த பூமியில் ஏதாவது ஒரு நல்லதையாவது விதைத்து, விட்டு செல்ல வேண்டுமா? பூமியில் பிறந்தவர்கள் அனைவருமே உலகம் போற்றும் அளவிற்கு சாதனையாளர்களாக மாறும் தகுதி பெற்றுவிட முடியும் என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும் நம்முடைய குறிக்கோளானது எப்போதுமே உயர்வாக தான் இருக்க வேண்டும்.

நீங்கள் இப்போது உங்களது வாழ்க்கையை சாதாரண நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, அல்லது வாழ்க்கையில் ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் சரி, உங்களுடைய வாழ்க்கைத் தரத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தி செல்ல இந்த மந்திரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

durga-ganapathi2

தினம்தோறும் மனதார துர்கா கணபதியை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து வருபவர்களுடைய வாழ்க்கையில், முன்னேற்றம் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு மட்டும் செல்லுமே தவிர, நீங்கள் இருக்கின்ற வாழ்க்கை நிலையிலிருந்து, உங்களுடைய வாழ்க்கைத்தரம் எக்காரணத்தைக் கொண்டும் மோசமான நிலைக்கு செல்லவே செல்லாது. அப்படி சில சரிவுகள், கர்மவினையின் பலனால் ஏற்பட்டாலும், அதை சரி செய்யக் கூடிய சக்தி, இந்த துர்கா கணபதி மந்திரத்திற்கு உண்டு.

- Advertisement -

உங்களுடைய வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை அடைந்து மேலும் மேலும் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி உங்கள் மனதில் உள்ளதா? நீங்கள் இருக்கின்ற நிலையை தாண்டி அடுத்த நிலைக்கு உங்களுடைய வாழ்க்கையை நடத்தி செல்ல பெரிய போராட்டமே நடக்கிறதா! உங்களுக்கான மந்திரம் மட்டும் தான் இது. நீங்கள் தினம்தோறும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். அப்படி இல்லை என்றால், தினம்தோறும் உச்சரிக்க நேரமில்லை என்று சொல்லுபவர்கள் செவ்வாய்க்கிழமையில் மட்டுமாவது 108 முறை உச்சரிக்கவேண்டும் உங்களுக்கான துர்கா கணபதி மந்திரம் இதோ!

thorana-ganapathy1

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும்
துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய
மாத்ரு வத்ஸலாய
மஹா கணபதயே நம!

dancing-ganapathy

வெறும் நான்கே வரி மந்திரம் தான். இவைகள் வெறும் வார்த்தை அல்ல. உங்களுடைய கர்மவினைகளை குறைத்து, வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லக்கூடிய மந்திர சக்தி வாய்ந்த ஊன்றுகோல் என்று கூட சொல்லலாம். இந்த மந்திரத்தின் சக்தியை இன்னும் வேகமாக பெறுவதற்கு சின்ன யுக்தியை கையாளலாம்.

manjal-pillaiyar1

இந்த டிப்ஸ் இந்த மந்திரத்திற்கு மட்டுமல்ல. வேறு எந்த மந்திரத்தை பிரயோகம் செய்யும் போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். வெற்றிலை இருந்தால், அந்த காம்புகளில் இரண்டை கிள்ளி, நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் போது, அதை உங்கள் முன்பாக வைத்து உச்சரித்தால், நீங்கள் உச்சரிக்கும் மந்திரத்திற்கான பலனை விரைவில் அடைய முடியும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.