உங்களின் துக்கத்தைப் போக்கும் துர்க்கை அம்மனை பற்றி அறியாத 20 அரிய தகவல்கள்! எப்படிப்பட்ட கவலைகளும் தீர துர்காதேவியை இப்படி வழிபடுங்கள்!

durga-devi
- Advertisement -

ராகு கால வேளையில் துர்க்கை அம்மனை வேண்டி வணங்கினால் கிடைக்காத வரங்களே இல்லை என்று கூறலாம். துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவது மிகவும் விசேஷமானது. செவ்வரளி மலர் சாற்றி, சிகப்பு பட்டாடை அணிவித்து ராகு கால நேரத்தில் விரதமிருந்து துர்க்கை அம்மனை துதித்து வருபவர்களுக்கு இன்னல்கள் எதுவும் அண்டாது! எத்தகைய தடைகளும் விலகி சுபகாரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கை. இதைத் தவிர துர்க்கை அம்மனை பற்றிய எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

durga

1. துர்க்கை அம்மன் உடைய பெயரில் ஐந்து அட்சரங்கள் ஒளிந்து உள்ளன. அவற்றில் ‘த்’ என்பது பகைவர்களை ஒழிப்பவள் என்றும், ‘உ’ என்றால் தடைகளை தகர்த்து எரிபவள் என்றும், ‘ர்’ என்றால் பிணிகளைத் தீர்ப்பவள், ‘க்’ என்றால் பாவங்களை நீக்குபவள், ‘ஆ’ என்னும் எழுத்து பயம், எதிரிகள் போன்றவற்றை அழித்து காத்தருள்பவள் என்பது பொருளாகிறது.

- Advertisement -

2. சிறு சிறு பிரார்த்தனைகள் முதல் பெரிய அளவிலான வேண்டுதல்கள் வரை அத்தனையும் துர்க்காதேவி நிறைவேற்றிக் கொடுப்பவள். சாட்சாத் அம்பாளின் வடிவமாக இருக்கும் துர்க்கை அம்மன் மனிதர்களுக்கு தாயைப் போலவே அருள் புரிவாள் ஆவாள்.

durgai amman

3. வம்பு, வழக்குகள், கோர்ட், கேஸ்கள் போன்ற விஷயங்களில் நியாயம் கிடைக்க, பலன்கள் சாதகமாக அமைய துர்கா தேவியை வழிபட்டு வரலாம்.

- Advertisement -

4. மனிதப் பிறவியாக எடுப்பவருக்கு துக்கமும், கவலையும் எப்பொழுதுமே வந்து கொண்டே தான் இருக்கும். இதிலிருந்து விடுபடுவதற்கு துர்கா தேவியை வணங்குவதை தவிர வேறு வழி இல்லை.

5. சிறப்பு வாய்ந்த துர்க்கை அம்மனை போற்றும் விதமாக சப்தசதி என்கிற நூல் எழுநூறு ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது அவற்றை வாசிப்பவர்களுக்கு மனம் ஒருமுகப்படும் ஞானம் பிறக்கும்.

- Advertisement -

6. துர்க்கை அம்மனுக்கு ஏற்ற வேண்டிய எண்ணெய் நல்லெண்ணை ஆகும். துர்க்கை அம்மனை வழிபடும் நாமம் சண்டிகை தேவி உடைய சஹஸ்ரநாமம் ஆகும். ஒவ்வொருமுறை இதனை உச்சரித்துக் கொண்டே அர்ச்சிக்கும் பொழுதும் இனம் புரியாத சக்தி உடலுக்குள் பிறக்கும்.

7. பைரவருக்கு அஷ்டமி வழிபாடு செய்வது போல துர்க்கை அம்மனுக்கும் அஷ்டமி திதியில் சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி அவர்களால் அர்ச்சனை செய்வது உண்டு. அதில் குறிப்பாக செந்தாமரை, ரோஜா, செம்பருத்தி, செவ்வரளி போன்ற புஷ்பங்கள் கொண்டு அர்ச்சித்தால் அதனுடைய பலன்கள் அளப்பரியது.

durga

8. துக்க நிவாரணியாக இருக்கும் துர்கா தேவையை நினைத்து ‘ஓம் துர்க்கா போற்றி’ என்று கூறினால் போதும்! நம் மனதில் இருக்கும் எத்தகைய மாயையும் அகன்றுவிடும். உங்களுடைய மனதில் இனம் புரியாத பல்வேறு கவலைகளுக்கு மருந்தாக இருக்கக் கூடியவர் துர்கா தேவி.

9. துர்க்கை அம்மனுக்கு மகா கௌரி, காத்யாயனி, சைலபுத்ரி, சந்திரகண்டா, கூஷ்மாண்டா, காளராத்ரி, சித்திதார்ரி, சாமுண்டி, ப்ரம்ஹசாரிணி ஆகிய பல்வேறு பெயர்கள் உண்டு. நவதுர்க்கையாக இருக்கும் துர்க்கை அம்மன் நவ கிரக தோஷங்களையும் போக்குபவர் ஆவார்.

10. துர்க்கை அம்மன் சன்னிதியில் அல்லது துர்க்கை அம்மனுக்கு முன்பு புல்லாங்குழல் இசைக்க கூடாது என்கிற சாஸ்திரம் உண்டு.

durga

11. ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மலர்கள் சாற்றுவது முறையாகும். அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது நீலோத்பவம் என்னும் மலராகும். நீலோத்பவம் கொண்டு துர்க்கை அம்மனை அர்ச்சித்து வந்தால் சகல செல்வ வளங்களும் நிச்சயம் உண்டாகும்.

12. துர்க்கை அம்மன் உடைய தீவிரமான பக்தர்களுக்கு இல்லறம் அமையாமல் துறவரம் உண்டாகும்.

13. துர்க்கை அம்மனை வணங்கி வருபவர்களுக்கு தாமரை இலையில் ஒட்டாத தண்ணீர் போல எவ்வித தோஷங்களும், எவ்வித பிரச்சனைகளும் அண்டுவதில்லை.

durga

14. துர்க்கை அம்மனை தொடர்ந்து பூஜித்து வருபவர்களுக்கும், ஒரு வருடத்திற்கும் மேலான பூஜைகள் தொடர்பவர்களுக்கும் முக்தி நிச்சயம் உண்டாகும் என்பது நியதி.

15. துர்க்கை அம்மனுக்கு மனமார பூஜை செய்பவர்களுக்கு பாவங்கள் நீங்கி சொர்க்கலோகம் அடைந்து பின்னர் நற்கதி உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.

16. துர்க்கை அம்மன் உடைய வாகனமாக இருப்பது சிம்மம். துர்க்கை அம்மனுக்கு மயில் தொகை கொண்ட கொடி உண்டு.

durga-ganapathi2

17. மனதில் எவ்வளவு உளைச்சல் இருந்தாலும், சோகம் இருந்தாலும் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

18. துர்க்கை உடைய மந்திரங்களை உச்சரிப்பவர்களுக்கு மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி புது தெளிவு உண்டாகும். முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும்.

blue-durga

19. துர்க்கை அம்மன் பரசுராமருக்கு என்றும் சிரஞ்சீவியாக இருக்கும் வரம் கொடுத்தவள்.

20. குமாரி, கல்யாணி, ரோஹினி, காளிகா, சண்டிகை, சாம்பவி, சுபத்ரா, த்ரிமூ நாலு அஞ்சு ஆறு ஏழுர்த்தி, சண்டிகை, துர்கா ஆகிய ஒன்பது பெயர்களில் துர்கா தேவி நவதுர்கையாக அருள் புரிகிறாள்.

- Advertisement -