எதிரிகளை வெல்ல சுலபமான துர்க்கை வழிபாடு

durga-compressed

இந்த உலகத்தில் எவ்வளவுதான் நல்லவராக வாழ்ந்து வந்தாலும், அவர்களுக்கு எதிரிகள் என்று நிச்சயம் யாராவது ஒருவர் கண்டிப்பாக இருப்பார்கள். எதிரிகளே இல்லாத மனிதன் இந்த பூமியில் வாழ முடியாது. எதிரிகள் வெளியில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலருக்கு வீட்டில் உள்ளவர்களே எதிரிகளாக இருப்பார்கள். உங்களின் எதிரிகள் வீட்டிற்குள் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, அல்லது வெளியில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை நீங்கள் சுலபமாக வெல்லவும், உங்கள் எதிரிகள் உங்களுக்கான முன்னேற்றத்தை தடுக்காமல் இருக்கவும் ஒரு சிறந்த சுலபமான வழிபாடு உள்ளது. பொதுவாக எதிரிகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்வதற்கு அம்பாள் வழிபாடானது மிகவும் சிறந்தது.

durga

ஏனென்றால் அந்த அம்பாலானவள் காளியாகவும், துர்க்கையாகவும், மகிஷாசுரமர்தினியாகவும் இப்படி பல அவதாரங்கள் எடுத்து தீமை செய்தவர்களை வதம் செய்தவள். அந்த அம்பாளை தூய்மையான மனதுடன் நினைத்து துதித்து, நல்ல காரியங்களுக்காக வழிபடும்போது நம்மையும் எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள முடியும் என்று கூறுகிறது நம் முன்னோர்களின் கூற்று.

அம்பாளை எப்படி வழிபட்டால் நம் எதிரிகளுடைய தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் என்பதைப்பற்றி இந்த பதிவில் காண்போமா.

துர்க்கை அம்மனை மனதில் நினைத்து செய்யும் வழிபாடு

durgai amman

- Advertisement -

செம்பினாலோ அல்லது பித்தளையினாலோ செய்யப்பட்ட ஒரு சொம்பினை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுள் பச்சரிசியை முழுமையாக நிரப்பி விட வேண்டும். உங்கள் சக்திக்கு தகுந்தவாறு சூலாயுதத்தை கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். வெள்ளியிலும் இருக்கலாம் அல்லது சாதாரண பித்தளையால் செய்யப்பட்ட சூலாயுதமாகவும் இருக்கலாம். சூலாயுதத்திலும், சொம்பிலும் சந்தனமும், குங்குமமும் வைத்துக்கொள்ள வேண்டும். அரிசியின் மேல், சூலாயுதத்தை நிற்க வைத்து விட வேண்டும். அடுத்ததாக ஒரு சிகப்புக் கயிறை எடுத்துக்கொண்டு அதில் ஐந்து முடிச்சுகளை போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது தாயத்து கட்டும் கயிற்றில் ஐந்து முடிச்சுகள் வரிசையாக இருக்கும் அல்லவா அதை போன்றது. இந்த முடிச்சுகள் போடும் சமயத்தில் நம் மனதில் அம்பாளின் பெயரை உச்சரித்துக் கொள்ள வேண்டும். முடிச்சுகள் இட்ட அந்த சிகப்புக் கயிறை சூலாயுதத்தை சுற்றி கட்டி விட வேண்டும். அர்ச்சனை செய்வதற்கு தேவையான அரளி பூக்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் காலைவேளையில் அந்த சூலாயுதத்திற்கு இந்த அரளிப்பூவை போட்டு ‘ஓம் துர்க்காயை நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து வரவேண்டும். இந்த மந்திரத்தை நீங்கள் எத்தனை முறை உச்சரிக்கிறீர்களோ, அந்த அளவிற்கு அம்பாளின் பாதுகாப்பு வட்டமானது உங்களை சுற்றி எப்பொழுதும் இருந்து வரும். குறைந்த பட்சம் 108 முறை உச்சரிப்பது சிறந்த பலனைக் கொடுக்கும். சூலாயுதத்திற்க்கு  நைவேத்தியமாக தினம்தோறும் வெல்லம் படைத்து வரவேண்டும். தீப தூப ஆராதனையுடன் கற்பூர ஆரத்தி செய்து உங்கள் பூஜையை முடித்து கொள்ளலாம்.

உங்களை வீழ்த்துவதற்காக உங்களின் எதிரிகள் எப்படிப்பட்ட சூழ்ச்சியை செய்தாலும் அது உங்களை வந்து தாக்காது. அந்த அம்மனை நினைத்து நம் மனதில் நம்பிக்கையோடு செய்யப்படும் இந்த வழிபாடானது எக்காரணத்தைக் கொண்டும் கெட்ட விஷயங்களுக்கு துணை போகாது. நல்லதை மனதில் நினைத்துக்கொண்டு முழுமனதோடு பிரார்த்தனை செய்பவர்களுக்கு பலானது வெகுவிரைவில் கிடைத்துவிடும். இந்தப் பூஜையின் மூலம் காரியத்தடை நீங்கும். மன உறுதி கிடைக்கும். வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்கும். சகல சவுபாக்கியங்களும் பெற்று வாழ்வதற்கு இந்த பூஜை ஒரு நல்ல வழிகாட்டியாக அமையும்.

இதையும் படிக்கலாமே
பழனி இடும்பன் கோவில் வரலாறு

English Overview:
Here we have Durgai vazhipadu in Tamil. Durga prayer in Tamil. Durga prarthanai in Tamil. Durga deviyai vazhipadum murai in Tamil. Durga devi vazhipadu.