அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் கோயில் சிறப்புகள்

கோயில்கள் அனைத்துமே இறைவனின் அருளையும், அவரின் ஆசிகளையும் பெறுவதற்காக நமது முன்னோர்களால் விஞ்ஞான முறைப்படி கட்டப்பட்டதாகும். பெரும்பாலான கோயில்களை மனிதர்கள் அவர்களாகவே கட்டினாலும், ஒரு சில கோயில்கள் இறைவனின் விருப்பத்தால் மனிதர்கள் கட்டியவையாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கோயில் தான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயிலாக இருக்கும் “ஈச்சனாரி விநாயகர் கோயில்”. இக்கோயிலின் சிறப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Vinayagar

அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் கோயில் வரலாறு

சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது ஈச்சனாரி விநாயகர் கோயில். இக்கோயிலின் பிரதான தெய்வமாக விநாயகப்பெருமான் இருக்கிறார். முற்காலத்தில் மேலை சிதம்பரம் எனப்படும் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு 5 ஆதி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரை நகரிலிருந்து வண்டியில் கட்டி சென்று கொண்டிருந்த போது, தற்போது இக்கோயில் இருக்கும் இடத்திலேயே வண்டியின் அச்சு முறிந்து விநாயகர் விக்ரகம் இங்கேயே அமர்ந்துவிட்டதாகவும், மக்கள் அனைவரும் எவ்வளவு முயன்றும் விநாயகர் சிலையை இங்கிருந்து அப்புறப்படுத்த முடியாமல் சோர்ந்தனர்.

காஞ்சி சங்கர மடாதிபதியான சங்கராச்சாரியாரின் அருள்வாக்கு படி இந்த விநாயகர் விக்ரகம் இங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அக்கோயிலே தற்போதிருக்கும் ஈச்சனாரி விநாயகர் கோயிலாக இருக்கிறது.

அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் கோயில் சிறப்புகள்

ஈச்சனாரி விநாயகர் ஆலயம் கோவை மாவட்டத்தின் புகழ் பெற்ற ஒரு கோயிலாக இருக்கிறது. அஸ்வினி முதல் ரேவதி வரை இருக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் 27 விதமான அலங்காரங்கள் செய்து மேற்கொள்ளும் நட்சத்திர அலங்கார பூஜை இக்கோயிலுக்கே உரிய ஒரு விஷேஷ அம்சமாக இருக்கிறது. இந்த திருக்கோயிலின் தினப்படி ஒரு நாளைய பூஜைக்கு தேவைப்படும் பால், சந்தனம், குங்குமம், மலர், பன்னீர் மற்றும் அன்றைய தினத்திற்கான மின் கட்டணத்திற்கான அத்தனை செலவுகளும் கட்டளைதாரர்கள் எனப்படும் பக்தர்களே ஏற்கின்றனர்.

- Advertisement -

தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எத்தகைய காரியங்களையும் தொடங்கும் முன்பு இந்த விநாயகரை வழிபட்டு தொடங்குவதால், அக்காரியங்கள் தடைகள், தாமதங்களின்றி வெற்றி பெறுவதாக இக்கோயிலுக்கு வந்து பலனடைந்த பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் தங்களின் குழந்தைகள் கல்வி, கலைகளில் உயர்ந்த நிலைகளை அடையவும், தொழில் மற்றும் வியாபாரங்களில் மிகுந்த லாபங்கள் உண்டாகவும், வேலைகளில் பதவி உயர்வு கிடைக்கவும் வேண்டும் பக்தர்களுக்கு அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுவதாகவும் கூறுகினர் இங்கு வழக்கமாக வந்து வழிபடும் பக்தர்கள்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சிதறு தேங்காய் உடைத்தல், கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாற்றுதல், பாலபிஷேகம் செய்தல் போன்றவற்றின் மூலம் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிகளுக்கான நன்கொடை அளிப்பது, கோயிலில் அன்னதானம் வழங்கல் ஆகியவற்றின் மூலமும் விநாயகருக்கு தங்களின் நன்றியை செலுத்துகின்றனர்.

கோயில் அமைவிடம்

ஈச்சனாரி அருள்மிகு விநாயகர் கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஈச்சனாரி என்கிற ஊரில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு செல்ல கோவை நகரிலிருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கிறது.

கோயில் முகவரி

அருள்மிகு விநாயகர் திருக்கோயில்
ஈச்சனாரி
கோயம்புத்தூர் – 641021

தொலைபேசி எண்

422 – 2672000

422 – 2677700

இதையும் படிக்கலாமே:
இரும்பை அருள்மிகு மாகாளேஸ்வரர் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Eachanari vinayagar temple history in Tamil. It is also called as Eachanari vinayagar koil in Tamil or Kovai eachanari vinayagar kovil in Tamil or Eachanari vinayagar temple in Tamil or Eachanari kovil.