2 பொருள் இருந்தா போதும் 15 நிமிடத்தில் சாஃப்டான ஆப்ப மாவு அரைத்து விடலாம்! எளிதான ஆப்பம் சுவையாக சுடுவது எப்படி?

- Advertisement -

ஆப்பம் என்றாலே ரொம்பவே கடினமான ஒரு விஷயம் அல்ல! 2 பொருட்களை வைத்து சூப்பரான மெத்தென்ற ஆப்பம் தோசைக் கல்லிலேயே தயாரித்து சுடச்சுட தேங்காய் பால் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள், அதனுடைய ருசியே அபாரமாக இருக்கும். ஆப்ப மாவு சுலபமாக எப்படி அரைப்பது ? மெத்தென்ற மிருதுவான ஆப்பம் மற்றும் சுவையான தேங்காய் பால் செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆப்ப மாவு செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 2 கப், சாதம் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

ஆப்பம் மாவு செய்முறை விளக்கம்:
முதலில் ஆப்பம் செய்வதற்கு 2 கப் அளவிற்கு இட்லி அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். இட்லி அரிசிக்கு பதிலாக சாதாரண சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் அரிசியையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அரிசியை நன்கு களைந்து சுத்தம் செய்து 3 லிருந்து 4 மணி நேரம் கண்டிப்பாக நன்கு ஊற வைக்க வேண்டும்.

நான்கு மணி நேரத்திற்கு பிறகு ஊற வைத்த அரிசியை நன்கு வடிகட்டி ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு கப் அளவிற்கு வடித்த சாதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மாவிற்கு தேவையான தண்ணீர் ஜில்லென்று இருந்தால் மிக்ஸி சூடாகாமல் இருக்கும் எனவே ஐஸ் வாட்டர் பயன்படுத்தி மாவை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த மாவை எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இரவு முழுவதும் நன்கு ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

பின்னர் மறுநாள் காலையில் பொங்கிய மாவை லேசாக கலந்துவிட்டு கொள்ளுங்கள். ரொம்பவும் வேகமாக கலக்க வேண்டியதில்லை. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி கொள்ளுங்கள். பின்னர் மிதமான தீயில் வைத்து ரெண்டு கரண்டி மாவை ஊற்றி தடிமனாக பரப்புங்கள். பின்னர் மூடி வைத்து இரண்டு நிமிடத்தில் திறந்து பார்த்தால் மெத்து மெத்தென வெள்ளையான சுவையான ஆப்பம் தயாராகி இருக்கும். இதற்கு சைட் டிஷ் தேங்காய் பால் ரொம்பவே சுலபமாக பத்து நிமிடத்திலேயே தயாரித்து விடலாம்.

தேங்காய் பால் செய்முறை விளக்கம்:
தேங்காய் பால் தயாரிக்க முதலில் அரை மூடி தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது துண்டுகளாக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரையுங்கள். அரைத்த இந்த தேங்காய் துருவலுடன் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு நைஸாக அரையுங்கள். பின்னர் அரைத்த இந்த விழுதை பிழிந்து எடுத்தால் முதல் தேங்காய்ப் பால் கிடைக்கும். பிறகு மீண்டும் தேங்காய் சக்கைகளை போட்டு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு நன்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள், அவ்வளவுதான். இந்த சக்கையை தூக்கி எறிந்து விட்டு, தேங்காய் பாலுடன் அரை ஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூள் மற்றும் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். இந்த ஆப்பத்துடன் தேங்காய் பால் இப்படி சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள், செம டேஸ்டாக இருக்கும்.

- Advertisement -