ரிச் லெவல் பாதாம் அல்வா கடையில் தான் வாங்கணுமா என்ன? 15 நிமிடத்தில் குறைந்த பொருளில் நாவில் கரையும் பாதாம் ஹல்வா எப்படி செய்வது?

- Advertisement -

பாதாம் அல்வா கடையில் தான் வாங்கி சாப்பிட வேண்டும் என்பது கிடையாது. நம் வீட்டில் பாதாம் இருந்தால் போதும் சட்டுன்னு 15 நிமிடத்தில் குறைந்த பொருட்களை வைத்து ரிச் லெவல் பாதாம் அல்வா செஞ்சிடலாம். ரொம்பவே டேஸ்டாக இருக்கக் கூடிய இந்த பாதாம் அல்வா பொறுமையாக இதே முறையில் நீங்களும் செஞ்சு பாருங்க, உங்களுக்கும் சுவை மிகுந்த ஆரோக்கியமான ஒரு ஸ்வீட் ரெசிபி கிடைக்கும். ரிச் லெவல் பாதாம் அல்வா வீட்டில் சுலபமாக செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

பாதாம் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
பாதாம் – ஒரு கப் (கால் கிலோ), நெய் – 5 ஸ்பூன், ரவை – இரண்டு ஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் – கால் கப், காய்ச்சாத பால் – முக்கால் கப், சர்க்கரை – ஒரு கப், எல்லோ கேசரி கலர் – கால் ஸ்பூன்.

- Advertisement -

பாதாம் அல்வா செய்முறை விளக்கம்:
ஒரு கப் அளவிற்கு பாதாம் எடுத்துக் கொள்ளுங்கள். இது 1/4 கிலோ அளவிற்கு இருக்கும். இந்த 250 கிராம் பாதாம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைத்த தண்ணீர் ஊற்றி ஒரு மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள். 20 நிமிடம் நன்கு அதன் ஆவியிலேயே பாதாம் வேக ஆரம்பிக்கும். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு ஆறவிட்டு விடுங்கள். லேசாக சூடு பொறுக்கும் அளவிற்கு ஆறியதும் நீங்கள் ஒவ்வொரு பாதமாக எடுத்து அதன் மேல் தோலை உரித்து கொள்ள வேண்டும்.

உரித்த பாதம் பருப்புகளுடன் கால் கப் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து நன்கு கெட்டியாக பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் பேன் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு கரையுங்கள். நெய் கரைந்ததும் அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு வெள்ளை ரவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

- Advertisement -

ரவை நிறம் மாறியதும் அதில் நீங்கள் அரைத்து வைத்துள்ள இந்த பாதம் பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். பாதாம் சேர்த்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். சிம்மிலேயே நன்கு கிண்டி விட வேண்டும். பாதாம் கெட்டியானதும் நீங்கள் காய்ச்சாத பால் முக்கால் கப் அளவிற்கு சேர்த்து கலந்து விட வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு பிரட்டி விட்டு கொண்டு இருந்தால், பாலுடன் சேர்த்து பாதாம் பச்சை வாசம் போக நன்கு வெந்து வரும். திரண்டு வெந்து வரும் போது நீங்கள் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை சேர்த்ததும் லேசாக இளக ஆரம்பிக்கும். மீண்டும் ஒரு முறை பிரட்டி விடுங்கள். நன்கு இளகியதும் மீதம் இருக்கும் நெய்யை சேர்த்து கிண்டி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வெள்ளை பூசணிக்காவில் இப்படி ஒரு சூப்பரான தயிர் குழம்பு வைக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? கேரளாவில் இந்த சீக்ரெட் பயன்படுத்தி தான் இந்த குழம்பை வைப்பார்களாம்.

இப்போது அடிப்பிடிக்காமல் அல்வா பதத்திற்கு நன்கு கெட்டியாக திரண்டு வர வேண்டும். அந்த சமயத்தில் நீங்கள் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள மஞ்சள் நிற கேசரி கலர் சேர்த்து நன்கு கிண்டி விட வேண்டும். நான்ஸ்டிக் பேனில் ஒட்டாமல் திரண்டு அல்வா பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள். அதன் மீது பொடித்த பாதாம் பருப்புகளை தூவி சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள், சூப்பரான ஹை லெவல் ரிச் பாதாம் அல்வா ரெசிபி ரெடி! இதே மாதிரி இதே அளவுகளில் நீங்களும் செஞ்சு பாருங்க அருமையான பாதாம் அல்வா ரசித்து ருசித்து சாப்பிடலாம்.

- Advertisement -