இட்லி மாவு அரைப்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்கா? அப்படியே மாவு ஆட்டி எடுத்தாலும், சூப்பர் இட்லி வருவதில்லை! ஈஸியான இந்த டிப்ஸ் யூஸ் பண்ணி மாவு அரைச்சு பாருங்க.

idli-mavu1

அடிக்கடி நம்முடைய வீட்டில் செய்யும் காலை டிபன் இட்லி, தோசை. சில பேர் வீட்டில் இரவு நேரத்திலும் இட்லி தோசை சாப்பிடும் பழக்கம் இருக்கும். இந்த இட்லி தோசையை செய்வதற்கு சுலபமாக மாவு எப்படி அரைப்பது. அதே சமயத்தில் அந்த மாவு சூப்பராகவும் இருக்க வேண்டும். அந்த மாவில் கடைசி வரை இட்லி ஊற்றவேண்டும். அடி மாவில் இட்லி ஊற்றினால், அது கட்டாயம் கல்லு போலதான் இருக்கும். தோசையும் சரியாக வராது. இந்த டிப்ஸை யூஸ் பண்ணி மாவை அரைச்சு பாருங்க, அடி மாவிலும் கூட சாஃப்டான இட்லி கிடைக்கும்.

idli-mavu

இட்லி என்றால் சில பேருக்கு வெள்ளை நிறத்தில் மல்லிகைப்பூ மாதிரி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், கொஞ்சம் வெந்தயத்தை அதிகமாக சேர்த்து தான் இந்த டிப்ஸ் பாலோ பண்ண போறோம். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! உங்களுக்கு பிடிச்சிருந்தா இதேபோல சுலபமான முறையில் மாவை அரைச்சு வச்சுக்கலாம்.

குறிப்பாக வேலைக்கு போகும் பெண்களுக்கு இந்த டிப்ஸ் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். முதலில் இட்லி அரிசியை 4 – கப் அளவு எடுத்துக் கொண்டால், 1 – கப் அளவு உளுந்தம்பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். இதற்கு 1 டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயம் தேவைப்படும். இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக போட்டு, நான்கு முறை அலசி கழுவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி ஊறவைக்கவேண்டும்.

vendayam

இந்த அரிசி பருப்பு வெந்தயமும் சேர்ந்து 8 மணி நேரம் வரை ஊற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றாக ஊறிய இந்த கலவையை கிரைண்டரில் போட்டு ஆட்ட தொடங்கலாம். அரிசி ஊறவைத்த தண்ணீரையே மாவில் ஊற்றி அரைத்தால், நன்றாக மாவு புளித்து வரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அரிசி உளுந்து வெந்தயம் ஒன்றாக சேர்த்து மாவை ஆட்டுவதால் நேரம் அதிகமாக மிச்சமாகும்.

- Advertisement -

மாவு நறநறவென்று ரவை பதத்தில் எல்லாம் அரைக்க தேவையில்லை. முப்பதிலிருந்து, நாற்பது நிமிடத்திற்குள் மாவு நைசாக மொழுமொழுவென்று அரைந்த பின்பு, மாவை கிரைண்டரிலிருந்து வழித்து பெரிய பாத்திரத்தில் போட்டு, கல் உப்பு போட்டு உங்கள் கைகளாலேயே கஷ்டப்படாமல் சுலபமாக கரைத்து வைத்து விட்டாலே போதும். தேவைப்படுபவர்கள் மாவை வழிப்பதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பு, மாவுக்கு தேவையான கல் உப்பை சேர்த்து, அரைத்துக் கூட வழித்துக் கொள்ளலாம் தவறொன்றும் கிடையாது.

Idli

கைபோட்டு கிரைக்கவில்லை என்றாலும் இந்த மாவு புளிக்கும். ஏனென்றால் அரிசி ஊறவைத்த தண்ணீரை ஊற்றி தான் இட்லி மாவை ஆட்டி இருக்கின்றோம். இந்த மாவு 6 மணி நேரம் வரை புளிக்க வைத்த உடன் இட்லி செய்வதற்கு தயாராகி இருக்கும். கட்டாயம் இட்லி முழு வெள்ளை நிறத்தில் இருக்காது. வெந்தயம் சேர்ப்பதால் கலர் கொஞ்சம் கம்மியாக தான் இருக்கும்.

idli-mavu

ஆனால், இட்லி சாப்டாக இருக்கும். மாவை கெட்டியான பதத்தில் ஆட்டி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்  இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி, ஒருவாட்டி மாவை அரைச்சு பாருங்க, கடைசி இட்லி மாவு இருக்கும் வரை, இட்லி ஊத்தினா கூட சாஃப்டாக இருக்கும். அடியில அரிசி மாவு மட்டும் தங்கி நிற்கவே நிற்காது.

aval

தேவைப்பட்டால், இட்லி வெள்ளை நிறத்தில் வர வேண்டும் என்று நினைப்பவர்கள், 1/2 ஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்துக் கொண்டு, இரண்டு கைப்பிடி அளவு அவல் போடும் இட்லி மாவை அரைத்து எடுத்துக் கொள்ளலாம். அவலை தனியாக ஊற வைத்து, மாவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அவல் இரண்டு மணி நேரம் வரை ஊறினால் மட்டும் போதும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! பிடித்திருந்தால் மீண்டும் மீண்டும் இப்படியே உங்களுடைய வீட்டில் மாவு ஆட்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
இனி காசு கொடுத்து கடையிலிருந்து கோதுமை மாவு வாங்க வேண்டாம். ரேஷன் கோதுமையே போதும். இந்த 2 பொருட்களை சேர்த்து ரேஷன் கோதுமையை அரைத்து பாருங்கள்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.