மோர் குழம்பு சமைக்கும் பொழுது நாம் செய்யும் தவறு என்ன? மோர் திரிந்து விடாமல், காய்கறிகள் இல்லாமல் ஒரே ஒரு வெங்காயத்தை மட்டும் வைத்து 10 நிமிடத்தில் அட்டகாசமான மோர் குழம்பு செய்வது எப்படி?

curd-mor-kuzhambu
- Advertisement -

மோர் குழம்பு செய்வது என்பது மிக மிக எளிதான ஒரு விஷயம் தான். அதையும் சிலர் சொதப்பி விடுவது தான் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. மோர் குழம்பு செய்யும் பொழுது பெரும்பாலும் மோர் திரிந்து விடுவது உண்டு. குறிப்பாக புதிதாக மோர் குழம்பு செய்பவர்கள் கட்டாயம் மோரை திரித்து விடுவார்கள். அது போல் சுவையுடன் கூடிய மோர் குழம்பு காய்கறிகள் இல்லாமல் பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது? என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

plain-mor-kuzhambu

மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
புளித்த தயிர் – 1/2 லிட்டர்,
துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி – 1 துண்டு,

- Advertisement -

சீரகம் – 1 ஸ்பூன்,
பெருங்காயம் – 1/4 ஸ்பூன்,
வர மிளகாய் – 2,
வெங்காயம் – 1 அல்லது சின்ன வெங்காயம் – 10,
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்,

mor-kuzhambu0

கடுகு – 1/2 ஸ்பூன்,
வெந்தயம் – 1/2 ஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
மல்லித்தழை – சிறிது,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவிற்கு.

- Advertisement -

மோர் குழம்பு செய்முறை விளக்கம்:
மோர் குழம்பு செய்யும் பொழுது புளித்த மோர் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அப்போது தான் மோர்க் குழம்பு கூடுதல் சுவையுடன் இருக்கும். மோரை அப்படியே சேர்க்காமல் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது நன்கு கடைந்து நைசாக எடுத்துக் கொள்ளுங்கள். துவரம் பருப்பை ஒரு முறை அலசி விட்டு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். துவரம் பருப்பை ஊற வைத்து அரைக்கும் பொழுது தான் குழம்பு கெட்டிப்படும்.

morukulambu

மிக்ஸி ஜாரில் துவரம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய்கள், ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சித் துண்டு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயம் எடுத்துக் கொண்டால் குட்டி குட்டியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் எடுத்துக் கொண்டால் தோலுரித்து அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நறுக்கியும் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

mor-kuzhambu0

இப்போது அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து பொரித்து விடுங்கள். பின்னர் வெந்தயம் சேர்த்து கருக விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெந்தயம் கருகி போனால் குழம்பு மொத்தமாக கெட்டுப் போய்விடும். பின்னர் கறிவேப்பிலை நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

mor-kuzhambu2

வெங்காயம் வதங்கியதும் அதில் தேவையான அளவிற்கு பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை ஊற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த கலவையை ஊற்றிய பிறகு உடனே கெட்டியாகிவிடும். எனவே சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். இதன் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைப்பது அவசியமாகும். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

plain-mor-kuzhambu2

இப்போது அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். நெருப்பைக் கூட்டி வைத்து கொண்டு மோரை ஊற்றினால் கட்டாயம் மோர்க்குழம்பு திரிந்துவிடும். எனவே அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு மோர் சேர்த்து கிளறி கொள்ளுங்கள். மோர் நுரை பொங்கி வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். மோர்க் குழம்பு ரசம் போன்று தான் செய்ய வேண்டும். அதிகம் கொதிக்கவும் கூடாது, கொதிக்காமல் இருக்கவும் கூடாது. பின்னர் நறுக்கி வைத்துள்ள மல்லித்தழை போட்டு இறக்கினால் சுவையான சூடான கமகமன்னு மோர் குழம்பு தயாராகி விட்டிருக்கும்.

- Advertisement -