அட! இத்தனை நாட்களாக இவ்வளவு ஈஸியான, சூப்பரான டிப்ஸ் எல்லாம் தெரியாமலே போயிருச்சே! இப்பவும் இந்த டிப்ஸை தெரிஞ்சுக்க மிஸ் பண்ணிடாதீங்க.

idli

நம்முடைய வீட்டுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான அத்தியாவசியமாகத் தேவைப்படும் 5 குறிப்புகளை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சின்ன சின்ன டிப்ஸ்தான். ஆனால் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் குறிப்புகள். நேரடியாக குறிப்புக்கு செல்லலாம். முதல் டிப்ஸ். உங்களுடைய வீட்டில் இருக்கும் உலர் திராட்சை, சில சமயங்களில், அதாவது குளிர்காலத்தில் தண்ணீர் விட்டு பிசுபிசுவென ஒட்டிக்கொள்ளும் அல்லவா? அந்த திராட்சைகள் எப்போதுமே உணர்ந்தபடி, தனித்தனியாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது? அந்த உலர் திராட்சைகளை ஒரு கிண்ணத்தில் கொட்டி 1/2 ஸ்பூன் அளவு அரிசிமாவு பொடியை போட்டு நன்றாக எல்லா உலர் திராட்சைகளிலும் படும்படி கிளறி, அதன் பின்பு அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக் கொண்டால் எப்போதும் போலவே ஃபிரஷா இருக்கும்.

Dry Grapes benefits in Tamil

இரண்டாவது டிப்ஸ். நம்முடைய வீட்டில் மழைக்காலங்களில் தீப்பெட்டி கட்டாயம் நமுத்து போகும். எரிய வைத்தால் ஐந்து குச்சிக்கு, ஒரு குச்சி தான் எரியும். அந்த தீப் பெட்டிக்குள், தீக்குச்சிகள் இருக்கும் அல்லவா? அதன் உள்ளே சிறிய சாக்பீஸ் துண்டு ஒன்றை போட்டு வையுங்கள். தீக்குச்சிகளுக்கு நடுவே. குச்சிகள் நமத்து போகாமல் எப்போதும் போல பற்ற வைத்த உடனேயே எரியும். தீப்பெட்டியை ஈரக்காத்து படாமல் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு வைப்பது மேலும் நல்லது.

மூன்றாவது டிப்ஸ். நம்முடைய வீட்டில் எல்லாம் கார்ப்பரேஷன் தண்ணீர் வரும். சில சமயங்களில் அது கலங்கலாக வரும். நம் பயன்பாட்டிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இந்த தண்ணீரை தெளிய வைக்க சுலபமான வழி ஒன்று உள்ளது. நாட்டு மருந்து கடைகளில் விற்கும் படிகார கல்லை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கல்லை உடைத்து ஒரு சிறிய துண்டு படிகாரத்தை எடுத்து தண்ணீரில் போட்டுவிட்டால், மூன்றிலிருந்து நான்கு மணி நேரத்தில் அந்த தண்ணீர் நன்றாக தெளிந்து விடும். கலங்கள் அடியில் நின்று விடும். அதன்பின்பு, அந்த தண்ணீரை வடிகட்டி நீங்கள் உங்களுடைய பயன்பாட்டிற்கு தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் தவறொன்றுமில்லை.

chips

நான்காவது டிப்ஸ். நம்முடைய வீட்டில் பஜ்ஜி போடுவதற்கும் வாழைக்காயை சீவும்போது, உருளைக்கிழங்கு சீவும் போது அதில் ஒன்று தடிமனாக வரும். இன்னொன்று மெல்லிசாக வரும். இதற்கு ஒரு சின்ன டிப்ஸ் உள்ளது. நீங்கள் அந்த சிப்ஸ் கட்டையில், சீவும் பிளேட் இருக்கும். சீவும் பிளேடின் முன் பக்கமும், பின் பக்கமும் கொஞ்சம் சமையல் எண்ணையை நன்றாக தடவி விட்டு அதன் பின்பு எந்த ஒரு பொருளை சீவினாலும், அது ஒரே சீராக வரும். எந்த ஒரு பொருளின் கரையும் சீவும் கட்டையில் ஒட்டி பிடிக்காது.

ஐந்தாவது டிப்ஸ். ரொம்ப ரொம்ப தேவைப்படும் அத்தியாவசியமான ஒரு டிப்ஸ். நம்முடைய வீட்டில் இட்லி சுடுவோம். அந்த இட்லி சுட சுட சாப்பிடும்போது ரொம்ப சாஃப்ட் ஆக இருக்கும். ஆறிய பின்பு வறவறவென போயிரும். இதற்கு, ஒரு இட்லி பானை அளவு இட்லி ஊற்றி வைக்க வேண்டும் என்றால், அதற்கு உண்டான மாவை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு அதில் 1/2 குழிக்கரண்டி அளவு நல்லெண்ணெயை ஊற்றி, நன்றாக அடித்து கலந்து அதற்குப் பின்பு இட்லியை வைத்து பாருங்கள். இட்லி ஆரி போனாலும் சாஃப்ட்டா ஆகவும் இருக்கும்.

idly-maavu

அதே சமயம் நீங்கள் வெளியூர்களுக்கு செல்லும்போது பொடி இட்லி போன்று டப்பாவில் கட்டி எடுத்துக் கொண்டு போனால், அந்த இட்லி சீக்கிரம் கெட்டுப் போகாது. டிரையாகவும் ஆகாது. உங்களுக்கு இந்த குறிப்புகள் புடிச்சிருந்தா உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க.