- Advertisement -

எளிமையான வேல் வழிபாடு

- Advertisement -

முருகப்பெருமானை வழிபாடு செய்யக்கூடிய பலரும் தங்களுடைய வீட்டில் வேலை வைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். வேல் வழிபாடு என்பது முருகப் பெருமானின் வழிபாட்டிற்கு இணையான ஒன்று என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வேல் வழிபாட்டில் நாம் தெரிந்தோ தெரியாமலோ பலவிதமான தவறுகளை மேற்கொள்கிறோம். அந்த தவறுகளை சரி செய்வது ஒரு வேல் வழிபாடை மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எளிமையான வேல் வழிபாடு

சூரபத்மனை வெல்வதற்காக பார்வதி தேவி வேலை முருகப்பெருமான் கையில் கொடுத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த வேல் என்பது ஒருவகையான ஆயுதமாகவே கருதப்படுகிறது. அதனால் ஆயுதத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்ற ஒரு நியதியும் இருக்கிறது. ஆயுதத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் பட்சத்தில் அதற்குரிய சாஸ்திர சம்பிரதாயப்படி சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இவை அனைத்தையும் வீட்டில் இருக்கக் கூடியவர்கள் செய்ய முடியாது அல்லவா? இருப்பினும் நம்முடைய மனதிற்கு வேலை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். அப்படிப்பட்டவர்களும் மிகவும் எளிமையாக வேலை வைத்து வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

வேலை மட்டும் தனியாக வைத்து வழிபாடு செய்தால் தான் அது ஆயுத வழிபாடாக கருதப்படும். அதற்கு பதிலாக முருகனின் கையில் வேலை வைத்து வழிபாடு செய்யும்பொழுது இது ஆயுதமாக கருதப்படாது. மேலும் நம்முடைய உள்ளங்கை அளவிற்கு சிறிய முருகனின் சிலையை வாங்கி வந்து அவருடைய கையில் வேல் இருப்பது போல் வைத்து பூஜைகள் செய்வது என்பது மிகவும் சிறப்பு என்னும் பட்சத்தில் தினமும் பால் அபிஷேகம் தயிர் அபிஷேகம் போன்றவற்றை செய்ய இயலாது அல்லவா? மிகவும் எளிமையான முறையில் முதலில் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்துவிட்டு சிறிது விபூதியையும் சந்தனத்தையும் வைத்து அபிஷேகம் செய்து கொள்ளுங்கள்.

பிறகு மறுபடியும் தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொண்டால் போதும். வாசனை மிகுந்த மலர்களை சாற்ற வேண்டும். கண்டிப்பான முறையில் நெய்வேத்தியம் வைக்க வேண்டும். வீட்டில் எந்த பொருள் இருக்கிறதோ அதை நெய்வேத்தியமாக வைத்து முருகப் பெருமானை வேல் வடிவத்தில் வழிபாடு செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் நம்முடைய வேண்டுதலை முருகப்பெருமான் ஏற்று விரைவில் நிறைவேற்றுவார்.

- Advertisement -

ஆலயத்தில் சமர்ப்பணம் செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வீட்டில் வேலை வைத்து வழிபாடு செய்து விட்டு பிறகு ஆலய உண்டியலில் சமர்ப்பணம் செய்து விடுவார்கள். நிரந்தரமாக வீட்டில் வேலை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருநாள் கூட தவறவிடாமல் அனுதினமும் அபிஷேகம் செய்து நெய்வேத்தியம் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மாதவிடாய் சமயம் ஏற்படும் நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளை அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய சொல்லலாம். இப்படி குழந்தைகளை முருக வழிபாட்டில் ஈடுபடுத்தும் பொழுது முருகனின் அருளால் குழந்தைகளுக்கு ஞானம் பெருகும்.

இதையும் படிக்கலாமே: சனி தோஷத்தை நீக்கும் ஆடி சனிக்கிழமை வழிபாடு

வேல்வழிபாட்டில் இதுவரை தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த அனைத்து தவறுகளையும் சரி செய்து கொண்டு மிகவும் எளிமையான முறையில் இப்படி வழிபாடு செய்ய ஆரம்பித்து பாருங்கள், விரைவிலயே முருகனின் அருளை பரிபூரணமாக பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்