எதிரிகளை நம் பக்கம் இருந்து விரட்டி அடிக்க சிறப்பு வாய்ந்த இந்த கடுகு பரிகாரத்தை செய்து பாருங்கள்

kadugu
- Advertisement -

நாமுண்டு நமது வேலை உண்டு என்று இருந்தாலும் நமது முன்னேற்றத்தை கண்டு பொறாமைப்படும் எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள். நமது வாழ்க்கையில் நம்முடைய தொழிலில் நாம் முன்னேறுவததையே பலர் அவர்களுக்கு போட்டியாக எடுத்துக் கொள்கிறார்கள். எனவே நமது முன்னேற்றத்தை தவிர்ப்பதற்கு பலவித முயற்சிகளையும் செய்து வருவார்கள். இந்த போட்டி காரணமாக நமது குடும்பத்தை அழிக்கும் எண்ணம் கூட அவர்களுக்கு உருவாகிவிடுகிறது. இவ்வாறு ஒருவர் நம்மை கண்டு பொறாமை படும் பொழுது நமக்கு தீராத பிரச்சனைகளும், தேவையில்லாத மனக் கசப்புகளும் வந்து கொண்டிருக்கும். அவர்களின் எதிர் வினை காரணமாக நாம் செய்யத் தொடங்கும் காரியங்களிலும் பல தடைகள் வந்து கொண்டிருக்கும். எனவே மன நிம்மதியும், தேவையில்லாத மனக்குழப்பங்களும் உண்டாகும். எனவே இவ்வாறான எதிரிகளை நம்மிடமிருந்து விலக்கி வைக்க இந்த எளிய பரிகாரத்தைச் செய்தாலே போதும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

poramai

நமது முன்னோர்கள் சில சூட்சுமமான விஷயங்களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி தினமும் நாம் செய்யும் அன்றாட வேலைகளில் அதனை மறைத்து வைத்திருப்பார்கள். அவ்வாறு நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கடுகினை நாம் சமைக்கும் எந்தவித உணவாக இருந்தாலும் அதில் சிறிதளவு சேர்த்து தாளித்த பிறகு தான் சமையலை துவங்குகிறோம். கடிகினை வெறும் வாயில் சாப்பிட வேண்டும் என்று சொன்னால் யாரும் அதனை தொடர்ந்து செய்வதில்லை. எனவேதான் இவ்வாறான முறைகளை அவர்கள் மிகவும் தந்திரமாக செய்து வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

அவ்வாறு கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று சொல்வார்கள். இந்த பழமொழிக்கு பின்னால் பெரிய அர்த்தம் உண்டு. கடுகு என்பது மிகவும் சிறிய வகை உணவுப் பொருள்தான் ஆனால் இதில் இருக்கும் சக்தி என்பது அதன் அளவை விட மிகவும் பெரியதாகும். அதற்க்கு எதிரிகளை அழிக்க கூடிய ஆன்மீக திறனும் உண்டு. ராஜாக்கள் காலங்களிலெல்லாம் வாழ்ந்த மக்கள் இந்த கடுக்னை பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தி இருக்கின்றனர்.

Kadugu

அவ்வாறு போருக்கு சென்று திரும்பி வராத தனது கணவர் நல்லபடியாக திரும்பி வரவேண்டும் என்று கடுகை கையில் எடுத்து வேண்டிக் கொண்டு அதனை நெருப்பில் போட்டு பிரார்த்தனை செய்து கொள்வார்கள். அந்த கடுகு பொறியும் விதத்தை பொறுத்து அவர்கள் தங்கள் கணவரின் நிலையை அறிந்து கொள்வார்கள்.

- Advertisement -

அதுபோல நமது நெருக்கமான உறவினர்களுடன் ஏதேனும் சண்டை ஏற்பட்டு அவர்களிடம் மீண்டும் பேசுவதற்கு தயக்கமாய் இருந்தாலும், அவர்கள் உறவை புதுப்பிக்க விரும்பினாலும், கொட்டாங்குச்சியை ஏறித்து, அந்த நெருப்பில் சிறிதளவு கடுகினை கையிலெடுத்து, நாம் பேச நினைக்கும் நபரின் பெயரை மனதில் உச்சரித்துக் கொண்டே கடுகை மூன்று முறை அல்லது ஒன்பது முறை அந்த நெருப்பில் போட்டு விட வேண்டும். இவ்வாறு செய்வதால் பிரிந்த உறவுகள் மீண்டும் பலப்படும்.

coconut-shell-fire

அதுபோல நமக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகளை நம்மிடம் இருந்து விரட்டியடிக்க அவரது பெயரை உச்சரித்துக் கொண்டே கடுகை கையில் எடுத்து சிறிது சிறிதாக 9 முறை ஒரு பேப்பரில் போட வேண்டும். பின்னர் இந்த கடுகினை மண் தோண்டி புதைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எதிரிகளின் தொல்லையில் இருந்து எளிதில் விடுபட முடியும்.

- Advertisement -