தடையில்லாத பணவரவை கொடுக்கும் ஏலக்காய்! பூஜை அறையில் உள்ள மகாலட்சுமியின் படத்திற்கு முன்பு ஏலக்காயை இப்படி வைத்து தான் பாருங்களேன். பின்பு பண மழைதான் உங்க வீட்ல!

mahalashmi1

ஏலக்காய் என்பது மகாலட்சுமிக்கு உரிய ஒரு வாசனைப் பொருள். இந்த ஏலக்காயை முறைப்படி எப்படி மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு அணிவித்தால், நம்முடைய வீட்டில் பணவரவு தடையில்லாமல் இருக்கும் என்பதைப் பற்றியும், வீட்டில் தங்க நகைகள் மேலும் மேலும் சேர ஏலக்காய் மாலை வழிபாட்டோடு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும், தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாசனை நிறைந்த பொருள் என்றாலே அது மகாலட்சுமிக்கு சொந்தமானது. அதிலும் நம் வீட்டு சமையலறையில் இருக்கும் ஏலக்காய்க்கு மகாலட்சுமி வசியப்படுத்தும், பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

நம்மில் பல பேருக்கு இது தெரிந்திருக்கும். இருப்பினும் ஏலக்காயை வைத்து சக்தி வாய்ந்த மகாலட்சுமி வழிபாட்டை செய்து, உடனடியாக பலனை எப்படி அடைவது என்று தெரிந்து கொள்ளலாமா? வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமையன்று இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்தாலே போதும். குறிப்பாக பெண்களின் கையாலேயே இந்த பூஜையை செய்ய வேண்டும்.

வெறும் மூன்று ஏலக்காய்களை எடுத்துக் கொண்டாலும் போதும். 3 ஏலக்காய்களுக்கு மேலாக, 5, 7, 11 இப்படியாக ஒற்றைப்படையில் உங்களால் முடிந்த ஏலக்காய்களை எடுத்துக்கொள்ளலாம். ஒரு மஞ்சள் நிற நூலில், ஏலக்காய்களை மாலையாகக் கோர்த்து வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில், உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி படத்திற்கு அணிவிக்க வேண்டும். ஊசியிலேயே ஏலக்காய்களை தாராளமாக கோர்க்கலாம் தவறு இல்லை.

elakkai

மகாலட்சுமிக்கு வெள்ளை நிறத்தில் ஏலக்காய் சேர்த்து, நெய் சேர்த்து மணக்க மணக்க பிரசாதத்தை நிவேதனமாகப் படைக்க வேண்டும். பால் பாயாசம், கற்கண்டு சாதம் இப்படி எந்தப் பிரசாதம் வேண்டுமென்றாலும் செய்யலாம். இந்த பிரசாதத்தை உங்கள் வீட்டில் இருப்பவர்கள் மட்டும் சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

இந்த பூஜையில் ஏலக்காய் மாலையை அணிவித்துவிட்டு, மகாலட்சுமியின் திருஉருவப் படத்திற்கு முன்பு நீங்கள் அணிந்திருக்கும், ஏதாவது ஒரு தங்க நகையை வைத்து, தீப தூப ஆராதனை காட்டி, பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் அணிந்த நாகையாக இருந்தால், ஒரு முறை தண்ணீரில் சுத்தமாக கழுவி விட்டு, அதன் பின்பு மகாலட்சுமிக்கு அந்த நகையை அணிவிக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

mahalakshmi

வெள்ளிக்கிழமை இந்த பூஜையை முடித்துவிட்டு, அதே வெள்ளிக்கிழமையில், மகாலட்சுமிக்கு அணிவித்த அந்த நகையை, நீங்கள் எடுத்து அணிந்து கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தால் வீட்டில் தங்கம் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கும். சரி, மகாலட்சுமிக்கு அணிவித்த அந்த ஏலக்காய் மாலையில், இருக்கும் ஏலக்காய்களை என்ன செய்வது.

aval-payasam

அந்த ஏலக்காய்களை வீணாக்கக்கூடாது. அந்த ஏலக்காயை தட்டி பாலில் போட்டு சர்க்கரை போட்டு, வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் தாராளமாக குடிக்கலாம். இப்படி அந்த ஏலக்காய் பிரசாதத்தை நாம் சாப்பிட்டு வந்தால் நமக்குள் லட்சுமி கடாட்சம் நிறைந்துவிடும். மூதேவி நம் உடம்பில் இருந்து விலகி விடுவாள் என்பதும் நம்பிக்கை.

gajalakshmi-cash

உங்களுடைய வீட்டில் ஒரு பொட்டு தங்க நகை இல்லை என்றாலும் கூட பரவாயில்லை. ஒரு ரூபாய் நாணயத்தை மகாலட்சுமியின் முன்பு வைத்து வழிபாடு செய்து விட்டு, பணமும் தங்கமும் சேர வேண்டும் என்று வேண்டுதல் வைத்தாலே போதும். அடுத்த சில நாட்களில் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் வருவதை உங்களால் உணர முடியும். நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள்.