ரெண்டு உருளைக்கிழங்கை வச்சு 5 நிமிஷத்துல அட்டகாசமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி. இப்படி மட்டும் செஞ்சு கொடுத்து பாருங்க டிபன் பாக்ஸ்ல ஒரு பருக்கை கூட மீதி இருக்காது.

potato egg podimas
- Advertisement -

உருளைக்கிழங்கை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். காய்கறிகளே வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட உருளைக்கிழங்கை மட்டும் வேண்டாம் என்று ஒதுக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சுவை மிகுந்த காயான இந்த உருளைக்கிழங்கை வைத்து சாதம், சப்பாத்தி எல்லாவற்றுக்கும் பொருத்தமான ஒரு சைட் டிஷை எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கப் போகிறோம்.

செய்முறை

இந்த பொடிமாஸ் செய்வதற்கு முதலில் இரண்டு உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்த பிறகு பொடியாக அரிந்து தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள். அதே போல் 1 வெங்காயம், 1 தக்காளி 2 பச்சை மிளகாய் இவை மூன்றையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். இத்துடன் நான்கு பல் பூண்டை லேசாக தட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது பொடிமாஸ் செய்ய ஆரம்பித்து விடலாம். அதற்கு அடுப்பில் பேனை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 1/2 ஸ்பூன் சீரகம் போட்டு பொரிந்தவுடன், நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் தட்டி வைத்து பூண்டு இவற்றுடன் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து பாதி அளவு வதங்கியவுடன், பொடியாக அரிந்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் உப்பு, 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 1 டீஸ்பூன் தனியாத் தூள் இவை அனைத்தையும் சேர்ந்து ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து ஐந்து நிமிடம் வரை மூடி போட்டு வேக விடுங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடத்திற்கு எல்லாம் உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்ந்து நன்றாக வெந்திருக்கும். இந்த சமயத்தில் 1/5 டீஸ்பூன் சீரக பொடியை சேர்த்த பிறகு, மூன்று முட்டையை ஒரு கிண்ணத்தில் முதலில் உடைத்து ஊற்றிக் அதை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு முட்டையை வெந்தி கொண்டிருக்கும் உருளைக்கிழங்கில் சேர்த்து ஒரு நிமிடம் கலந்து விட்ட பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இதையெல்லாம் செய்யும் போது அடுப்பை லோ ஃபிலிமில் வைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக இருக்கும் போது கொத்தமல்லி தழைகளை பொடியாக அரிந்து மேலே தூவி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள் சுவையான உருளைக்கிழங்கு முட்டை பொடிமாஸ் தயார்.

- Advertisement -

இந்த பொடிமாஸை சப்பாத்திக்கு சைடிஷ் ஆக வைப்பதென்றால் அப்படியே சாப்பிடலாம். இதையே குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ஆகவும் தயார் செய்து கொடுக்கலாம். அதற்கு முட்டையெல்லாம் சேர்த்து வெந்த பிறகு இறக்குவதற்கு முன்பாக சாதத்தை இதில் சேர்த்து நன்றாக கலந்த பிறகு, கொத்தமல்லி தூவி இறக்கி விட்டால் அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தயார்.

இதையும் படிக்கலாமே: ஸ்டார் ஹோட்டல் ஸ்டைல கிரீமியான டொமேட்டோ சூப் 10 நிமிஷத்துல இதோ ரெடி. குக்கர்ல 2 விசில் வச்சா வேலை முடிஞ்சுது பாருங்க.

இந்த சிம்பிள் ரெசிபியை நீங்களும் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.

- Advertisement -