வீட்டு வாசலில் காலையும் மாலையும் இதை மட்டும் ஏற்றி வையுங்கள் போதும். வீட்டுற்க்குள் வரக்கூடிய கஷ்டங்களை, வாசலிலேயே தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி இதற்கு உண்டு.

computer-sambirani
- Advertisement -

நம்முடைய நிலை வாசல் படியை எப்போதுமே நாம் வாசமாக, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். எந்த வீட்டில் நிலை வாசல் படி சுத்தமாகவும் வாசனையாகவும் இருக்கின்றதோ அந்த வீட்டிற்குள் கட்டாயமாக கஷ்டம் என்பது நுழையாது. நம்முடைய வீட்டில் கஷ்டம் நுழையாமல் எந்த அளவிற்கு பாதுகாத்துக் கொள்கிறோமோ, அதேபோல் நோய் நொடிகளையும் நம் வீட்டிற்குள் உள்ளே நுழைய விடாமல் பாதுகாக்க வேண்டியதும் வீட்டில் இருப்பவர்களுடைய கடமை. நம்முடைய நிலை வாசலுக்குள் கஷ்டம் நுழைய வேண்டு மென்றாலும் நடுநடுங்க வேண்டும். அதேபோல் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் நம் வீட்டிற்குள் நுழையும்போதே அது பஸ்பமாகி விட வேண்டும். இதற்கு நாம் நிலை வாசல் படியில் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் நம் வீட்டுக்குள் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் உள்ளே அண்டக் கூடாது என்றால் கட்டாயமாக காலை வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலம் போட வேண்டியது மிக மிக அவசியம். பல பேர் வீடுகளில் இதை செய்ய முடியாத சூழ்நிலை. முடிந்தவரை சுத்தமான தண்ணீரில் மஞ்சள் கரைத்து நிலை வாசலில் தெளிக்க வேண்டும். வேப்ப இலை அல்லது மாயிலை இந்த இரண்டு பொருட்களில் உங்களுக்கு எது கிடைக்கிறதோ அதை எப்போதுமே நிலை வாசல் படியில் கட்டி வைப்பது நல்லது.

- Advertisement -

சரி, கிருமிகளை அழிப்பதற்கு நமக்கு சுலபமான இத்தனை வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது. இதுவே கெட்ட சக்திகளை அழிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். காற்றோடு காற்றாக நல்ல வாசம் உங்கள் நிலை வாசல் படியில் வீசிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான். கொஞ்சம் ஏலக்காய், லவங்கம், பட்டை இந்த மூன்றையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

computer-sambirani1

உங்களுடைய வீட்டில் சாம்பிராணி தூபம் தினமும் போட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. நிலை வாசலில் ஒரு சிறிய தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதில் கம்ப்யூட்டர் சாம்பிராணி அல்லது கப் சாம்பிராணி என்று இப்போது கடைகளில் ரெடிமேடாகவே வாசனை மிகுந்த சாம்பிராணிகள் விற்கின்றன. அதை வாங்கி பொருத்தி வைத்து விடுங்கள். அந்த நெருப்பின் மேலே கொஞ்சமாக நீங்கள் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் அந்த பொடியை எடுத்து தூவி விடுங்கள்.

- Advertisement -

அவ்வளவு தான். வீட்டில் பூஜை புனஸ்காரங்களை முறையாக செய்ய முடிகிறதோ இல்லையோ, வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு, அந்த வாசத்தை வீடு முழுவதும் காட்ட முடிகிறதோ இல்லையோ கொஞ்சம் சிரமப் படாமல் நிலை வாசப்படியில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்து பாருங்கள்.

computer-sambirani2

பூஜை அறையில் வாசம் மிகுந்த சாம்பிராணி வத்திகளை ஏற்றுவதுடன், நிலை வாசலிலும் கட்டாயமாக இப்படி வாசனை நிறைந்த பொருட்களை ஏற்றி வைக்க வேண்டும். கெட்ட ஆற்றலை நம் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும். உங்களுடைய வீடு பாதுகாப்பாக இருக்கும். வரக்கூடிய கஷ்டங்களிலிருந்து நம்முடைய குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ள இதுவும் ஒரு சுலபமான வழி. முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல மாற்றங்கள் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -