பருவநிலை மாற்றத்தினால் வரக்கூடிய கட்டிகள் வராமல் இருக்க, வந்தவை மறைய உடல் சூடு தணிக்கும் இந்த சர்ப்பத்தை போட்டு குடிச்சுப் பாருங்க!

elakkai-sarbath
- Advertisement -

கோடை காலத்தில் சரும பாதிப்புகள் மட்டுமின்றி உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உண்டு. அதிலும் இது போல கோடை கால மழை காலங்களில் உடல் உஷ்ணம் அதிகரித்து கட்டிகள் வர ஆரம்பிக்கும். இது போல உடம்பில் உஷ்ணத்தால் வரக்கூடிய கட்டிகள் வராமல் இருக்கவும், நம் உடலை ஆரோக்கியமாக இந்த கோடைகாலத்தில் பாதுகாக்கவும் இந்த சர்ப்பத்தை அடிக்கடி போட்டு குடிக்கலாம். சுவையான ஏலக்காய் சர்பத் எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் காண இருக்கிறோம்.

ஏலக்காய் போட்டு சர்பத் செஞ்சு குடிச்சா செரிமான பிரச்சனை ஏற்படாது. மேலும் பாக்டீரியா தொற்று, வயிற்று பிரச்சனைகள், கல்லீரல் பாதிப்பு போன்றவற்றையும் எதிர்த்துப் போராடும் அற்புதமான ஆற்றல் படைத்தது ஏலக்காய்! எனவே கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க அடிக்கடி இந்த ஏலக்காய் சர்பத் போட்டு குடிக்கலாம். உடலை ரொம்ப குளிர்ச்சியாக, ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள இந்த பானம் ரொம்பவே உபயோகமாக இருக்க போகிறது.

- Advertisement -

ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு சர்க்கரை மற்றும் 4 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரையும், உப்பும் சேரும் பொழுது நமக்கு நல்ல ஒரு எனர்ஜி கிடைக்கும்.

பின்பு அதில் ஐந்தாறு ஐஸ் கட்டிகளை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய குளிர்ச்சிக்கு ஏற்ப ஐஸ் கட்டிகளை கூட்டி குறைத்துக் கொள்ளுங்கள். சர்பத் 4 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது கடைசியாக ஏலக்காய் பொடியை ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். ஏலக்காய் தூள் திப்பிகள் இல்லாமல் ரொம்பவும் நைசாக இருக்க வேண்டும்.

- Advertisement -

எலுமிச்சை சாற்றுடன் அதனுடைய தோலை தூக்கி எறிய வேண்டாம். கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி சாறுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு ஐந்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு அதை வடிகட்டி குடித்தாலும் சரி அல்லது அப்படியே குடித்தாலும் சரி செம டேஸ்டாக இருக்கும். இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தின் கலவையும் சேர்ந்தால் இந்த சர்பத் ரொம்பவே சுவையாக இருக்கும். மேலும் வாசம் மிகுந்த இந்த சர்ப்பத்தை நுகரும் பொழுது நமக்கு நல்ல ஒரு புத்துணர்வு கிடைக்கும்.

ஏலக்காய் தூள் சேர்த்து செய்யப்படும் இந்த சர்பத் நம் வீட்டிலேயே எளிதாக செய்து விடலாம். இது தாகத்தை தணித்து, உடல் உஷ்ணத்தை குறைத்து, கோடை காலத்தில் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை கண்ணுக்கு தெரியாமல் தீர்த்துக் கட்டும் அற்புத பானம் ஆகும். எனவே கோடை காலம் முடியும் வரை இந்த பானத்தை அடிக்கடி செய்து பருகி வாருங்கள். உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய இந்த பானத்தை சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னர் அல்லது சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து எடுத்துக் கொள்வது ரொம்பவே நல்லது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -