யானை சிவனை வழிபடும் அறிய காட்சி

Elephant

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
யானைக்கும் தெய்வத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாம் பிள்ளையாரை வைத்து எளிதில் அறிய முடியும். தமிழகத்தின் பல கோவில்களில் கோவில் யானை என்றொரு யானை இருக்கும். அதனிடம் ஆசிர்வாதம் வாங்க பலர் காத்து நிற்பார். திருவண்ணாமலை ஆண்ணாமலையார் கோவிலில் உள்ள யானை ஒன்று அண்ணாமலையாரை வழிபடும் அற்புதமான காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. இதோ அந்த காட்சி.

நமது தமிழ் சமூகத்திலும் சரி இந்து மதத்திலும் சரி மிருகங்களை தெய்வமாக பாவித்து வழிபடுவது வழக்கம். வேறெந்த மதத்திலும் இது போன்ற ஒரு அற்புதமான வழிபாடு இருப்பதாக தெரியவில்லை. பாம்பை வழிபடுகிறோம், குரங்கை வழிபடுகிறோம், பசுவை வழிபடுகிறோம் இதோபோல இன்னும் பல மிருகங்களை வழிபடுகிறோம். வழிபடுவதோடு நிற்காமல் தெய்வங்களின் ஆபரணங்களாகவும் வாகனங்களாகவும் மிருகங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தருகிறோம். மூசிகன் முதல் சிங்கம் வரை பல மிருகங்கள் பல தெய்வங்களுக்கு வாகனங்களாக உள்ளன. அந்த வரிசையில் தெய்வத்திற்கும் யானைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அதனாலேயே கோவில்களில் யானைகளை நாம் வைத்துள்ளோம்.

இந்திரலோகத்தில் உள்ள ஐராவதம் என்னும் யானையை பற்றி பலர் கேள்விப்பட்டிருப்போம். இந்தரினின் வாகனமான ஐராவதம் வெண்மையான நிறத்தை கொண்டது. அப்பன் கணேசனுக்கு யானை முகம் தான். இன்றும் பல கோவில் யானைகளுக்கு கணேஷன் என்ற பெயரை சூட்டுவது வழக்கம். இப்படி யானையின் சிறப்பை கூறிக்கொண்டே போகலாம்.