இன்றைய சூழ்நிலையில் எல்லோர் மனதிலும் தன்னம்பிக்கையும் தைரியமும் இருக்குதோ இல்லையோ, தெரியவில்லை. எல்லோர் கையிலும் ஜாதகம் இருக்கிறது. என்னுடைய ஜாதகப்படி நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன், எப்போது குழந்தை பிறக்கும், எப்போது நல்ல வேலை கிடைக்கும், எப்போது என் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனை தீரும், எப்போது கடன் தீரும், என்று ஜாதகத்தைப் பின்னால் ஓடுகின்றோமே தவிர, தன்னம்பிக்கையோடு தைரியத்தோடு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு சுறுசுறுப்பாக ஓடுவதே இல்லை.
அதற்காக ஜாதகம் பொய், ஜாதகம் பார்க்க கூடாது என்று சொல்ல வரவில்லை. ஜோதிடமும் நம் வாழ்க்கையில் வேலை செய்யும். தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் என்று சொல்லுவார்கள். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு கஷ்டப்படுகிறீர்களோ அதற்கு உண்டான ஒரு பலனை கடவுள் கொடுத்து விடுவான். உங்களுடைய ஜாதக கட்டத்தில் நேரம் நலமாக இருந்தாலும் சரி, கெட்ட நேரமாக இருந்தாலும் சரி.
ஆகவே காலத்தின் மேல் பழியை போடுவதை விட்டுவிட்டு, உங்களுடைய கஷ்டங்களை தீர்க்க உண்டான வழியை தேடி செல்லுங்கள். கூடவே இந்த பரிகாரங்கள் உங்களுக்கு உறுதுணையாக தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்க உதவியாக இருக்கும்.
வாழ்க்கையில் முன்னேற சில எளிய ஆன்மீக குறிப்புகள்
வெள்ளிக்கிழமை திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் திருமண தடை விலகும். செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலையில் கிரிவலம் செய்தால் உங்கள் கடன் தொல்லை தீரும்.
மணிமேகலை என்ற பெயரை வைத்திருப்பவர்களிடம் சென்று ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டால் பெண் சாகும் விலகும் என்பது நம்பிக்கை. தெரிந்தவர்கள் யாராவது மணிமேகலை என்ற பெயரை வைத்திருந்தால் அவர்களிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். பெண் சாபத்தால் வரும் தடைகள் விலகுவதை கண்கூடாக பார்க்கலாம். ஜாதகத்தில் பெண் சாபம் இருந்தாலும் அதன் மூலம் வரும் கஷ்டங்கள் குறையும்.
வெள்ளி மோதிரம், வெள்ளி செயின், இவைகளை பௌர்ணமி தினத்தில் நிலா வெளிச்சத்தில் வைத்து விட்டு சந்திர பகவானின் அருள் ஆசியோடு அதை நாம் அணிந்து கொண்டால் கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் எதிர்மறை சக்திகளால் நமக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படாது.
ஆடி அமாவாசை அன்று 1 கிலோ வெல்லம், உங்களால் முடிந்த 11 ரூபாய் தர்ஷனை, வெற்றிலை பாக்கு பழம் வைத்து கோவில் மடத்திலோ அல்லது பிராமினருக்கோ, வேத பண்டிதருக்கோ தானம் கொடுத்தால் கடன் சுமை குறையும். பித்ரு ஆசிர்வாதம் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: சகல நன்மைகள் தரும் ஆடி அமாவாசை
11 சனிக்கிழமைகள் தொடர்ந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வளம் வந்து வழிபாடு செய்தால் சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும்.