ஏழ்மை நிலை மாறி செல்வம் சேர மந்திரம்

selvam-serkum-mandhiram

இறைவன் படைத்த இந்த உலகத்தில் எல்லாமே எல்லோருக்கும் சொந்தம் என்பது ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைந்த மனிதர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் இன்றைய எதார்த்த நிலை என்பது வேறு. ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு சிறு பொருளை வாங்க கூட கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது. சிறு சிறு நிகழ்ச்சிகளை நடத்த கூட பிறரிடம் கடன் வாங்க நேரிடுகிறது. இது போன்ற நிலை மாறி, ஏழைகள் வீட்டிலும் செல்வம் பெறுக கூற வேண்டிய மந்திரம் இதோ.

Amman

மந்திர பாடல்

ஐயன் அளந்த படியிரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்புவைத்தாய்: இதுவோ, உன்றன் மெய்யருளே ?

திருக்கடையூரில் வீற்றிருக்கும் “அன்னை அபிராமியின்” மீது, சிறந்த மகானான “ஸ்ரீ அபிராம பட்டரால்” இயற்றப்பட்ட மந்திர சக்தி கொண்ட பாடல் இது. இந்த பாடலை புதன் கிழமைகளிலும், அம்மன் வழிபாட்டிற்குரிய செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் காலை 7 மணிக்குள்ளிருந்து 9 மணிக்குள்ளாக, அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று அக்கோவிலின் தெய்வத்திற்கு நெய் தீபம் ஏற்றி, அபிராமி அன்னையை மனதில் நினைத்து இந்த பாடலை 9 முறை வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ பாடி வழிபட்டு வர, உங்களின் ஏழ்மை நிலை ஒழிந்து, உங்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்பு உயர்வதை காண்பீர்கள்.

“கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது” என பாடினார் தமிழ் ஞானமூதாட்டி “அவ்வையார்”. மனிதர்களாக பிறந்த எல்லோருமே மிக பெரும் செல்வங்களை சேர்த்து வைக்கும் செல்வந்தர்களாக மாற இயலாவிட்டாலும், அவர்களின் உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைத்து அவர் தினமும் உண்ண உணவிற்கும் இன்ன பிற தேவைகளுக்கும் போதுமானதாக இருந்தால் அதுவே சிறப்பானது ஆகும். ஆனால் உலகெங்கிலும் அன்றாட உணவிற்கு கூட வழியில்லாமல், வறுமை நிலையில் பலகோடி மக்கள் ஒவ்வொரு நாளையும் ஜீவ மரண போராட்டமாக கடக்கின்றனர்.

Meenatchi amman

இந்த ஏழ்மை அல்லது வறுமை நிலையில் வாழும் மக்கள் ஒவ்வொரு நாளும் படும் துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாதது. ஒரு மனிதன் முற்பிறவியில் தான் சேர்த்து வைத்த செல்வத்தை, தான- தர்ம காரியங்களுக்கு பயன்படுத்தாமல் இறந்தான் என்றால், அவன் மறுபிறவில் ஏழையாக பிறப்பான் என கீழை நாட்டு மதங்கள் கூறுகின்றன. அப்படி ஏழ்மையான நிலையில் இருப்பவர்கள் உலகை காக்கும் அன்னையான அபிராமியின் இம்மந்திரத்தை ஜெபிப்பதால் அவர்களின் வறிய நிலை மாறி வளமான வாழ்வு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
கண்திரிஷ்டியை முற்றிலுமாக நீக்கும் மந்திரம்

English Overview:
Here we have mantra to get away from poverty. This mantra is called as varumai neenga manthiram in Tamil.