எலும்பு பிரச்சனைகள் நீக்க, உயர் பதவி அடைய சூரியன் மந்திரம்

suriyan-manthiram

நாம் வாழும் வாழ்க்கையில் மிகக் கொடிய நோய் நொடிகள் அண்டாமல் வாழ்ந்து முடிப்பது என்பது மிகப்பெரிய வரம். ஆனால் இங்கு வாழும் மக்கள் பலரும் பலவகையான நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். அந்த வகையில் எலும்பு அடர்த்தி இல்லாமல் இருத்தல், எலும்புத் தேய்மானம் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஒரு மனிதனை நன்கு இயங்க முடியாமல் செய்து விடும் தன்மை கொண்டவையாகும். ஜோதிடம் மற்றும் விஞ்ஞான ரீதியாக பார்த்தால், எலும்புகளின் வலிமைக்கு சூரியனின் ஒளிகிரணங்கள் உதவும். அப்படியான சமயத்தில் அச்சூரிய பகவானை போற்றி வழிபட வேண்டிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை கூறுவதால் எலும்பு பிரச்சனை நீங்கும் அதோடு சூரியனின் அருளால் அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்கும், சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

suriyan

மந்திரம் :
“ஆம் அஸ்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்”

பொதுவான பொருள்:
“குதிரையின் கொடியை அடையாளமாக கொண்டவரும், அதன் பாசத்தையும் கையில் பிடித்திருப்பவரான சூரிய பகவானை நான் வணங்குகிறேன் என் குறைகளை அவர் நீக்கட்டும்” என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

இதையும் படிக்கலாமே:
அதிஷ்டம் தரும் பெருமாள் மந்திரம்

இம்மந்திரத்தை எலும்பு சம்பந்தமான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு ஞாயிற்று கிழமை அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்பாக எழுந்து, குளித்து முடித்து, சூரிய ஒளி உங்கள் உடல் மீது படும் வகையில் நின்று இம்மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். இதை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வரவேண்டும். மேலும் ஞாயிற்று கிழமைகளில் கோவிலுள்ள சூரிய பகவானின் சந்நிதிக்கு சென்று, நல்லெண்ணெய் விளக்கேற்றி, இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட எலும்பு சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்கும்.