- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்ததை நிறைவேற்றும் எலுமிச்சை தீப வழிபாடு

நினைத்ததை நிறைவேற்றும் எலுமிச்சை தீப வழிபாடு

- Advertisement -

நினைத்த காரியம் நிறைவேற வேண்டும். அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலக வேண்டும். எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் ஒழிய வேண்டும். குடும்பத்தில் நல்ல சுபிட்சமான சுபகாரியங்கள் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள், துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

துர்க்கை அம்மன் வழிபாடு என்றதும் நம் நினைவிற்கு வருவது ராகு கால வழிபாடுதான். அதுவும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் செய்யக்கூடிய ராகு கால வழிபாடு என்பது சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட ராகுகால வழிபாட்டில் பல பெண்கள் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். அப்படி தீபம் ஏற்றும் பொழுது எந்த முறையில் தீபம் ஏற்றினால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதில் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாக செவ்வாய் வெள்ளிக்கிழமையின் அருகில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ராகு காலத்தில் சென்று அங்கு நடக்கக்கூடிய அபிஷேகங்களில் கலந்து கொண்டு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் பலருக்கும் இருந்து வருகிறது. அவ்வாறு நாம் வழிபாடு செய்யும் பொழுது சில மாற்றங்களை மட்டும் செய்தால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும். செல்வமும் புகழும் தேடி வரும் என்று கூறப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையை பற்றி தெரிந்து கொள்வோம்.

செவ்வாய்க்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ராகு காலத்தில் செல்லுங்கள். அவ்வாறு செல்லும் பொழுது புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். இந்த எலுமிச்சம் பழத்தை வாங்கி சென்று அதை இரண்டாக நறுக்கி அதன் சாறுகளை நீக்கிவிட்டு அதில் நல்லெண்ணெய் அல்லது பசு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த தீபத்திற்கு முன்பாக நீங்கள் எந்த காரியம் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த காரியம் விரைவில் நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இதே போல் துர்க்கை அம்மன் முன்பும் அந்த காரியம் நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமையில் இந்த வழிபாட்டை நீங்கள் செய்தால் மீதம் இருக்கும் அனைத்து வாரங்களிலும் செவ்வாய்க்கிழமையில் தான் செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமை செய்தால் வெள்ளிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். அடுத்த வாரம் அதாவது இரண்டாவது வாரம் இதே போல் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு இரண்டு எலுமிச்சம் பழங்களை வாங்கிச் சென்று நான்கு தீபங்களை ஏற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு எலுமிச்சம் பழத்தை கூடுதலாக சேர்த்து இரண்டு தீபங்களை கூடுதலாக போட்டுக் கொண்டே வர வேண்டும்.

- Advertisement -

ஒன்பதாவது வாரம் 9 எலுமிச்சம் பழங்களை வாங்கி அதை இரண்டாக நறுக்கி 18 தீபங்களை போட வேண்டும். மேலும் ஒன்பதாவது வாரம் ஒற்றைப்படை எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வாங்கி மாலையாக கோர்த்து துர்க்கை அம்மனுக்கு சாற்ற வேண்டும். அதோடு நம்முடைய வீட்டிலேயே எலுமிச்சம்பழ சாதம், வடை, சுண்டல் போன்றவற்றை செய்து அம்மனுக்கு நெய்வேத்தியமாக வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு இந்த நெய்வேத்தியத்தை பிரசாதமாக வழங்க வேண்டும்.

இதையும் படிக்கலாம்: நீண்ட நாள் நோய்கள் சரியாக செல்ல வேண்டிய கோவில்

இந்த முறையில் யார் ஒருவர் முழு நம்பிக்கையுடன் துர்க்கை அம்மனை வழிபடுகிறார்களோ அவர்கள் நினைத்த காரியம் நினைத்தபடி எந்தவித தடையும் இல்லாமல் நடைபெறும்.

சற்று முன்