கஷ்டங்களை தீர்க்கும் எலுமிச்சை

amman madipichai
- Advertisement -

ஒரு குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் சண்டை சச்சரவுகள் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், ஒருவர் மாற்றி ஒருவருக்கு நோய்வாய் பட்டுக்கொண்டு இருந்தாலும், செய்வினை தோஷங்களால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், சம்பாதித்த பணம் கையில் தாங்காமல் இருந்தாலும், கஷ்டப்பட்டு உழைத்ததற்கு போதுமான அளவு வருமானம் இல்லாமல் இருந்தாலும் அந்த குடும்பம் கஷ்டத்தில் ஆழ்ந்து விடும். அப்படிப்பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கு அம்மன் கோவிலில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

உலகத்தை காத்து ரசிக்க கூடிய தெய்வமாக திகழக் கூடியவள் தான் அம்மன். பல வகைகளில் உருவெடுத்து இருந்தாலும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அவளின் குணம் என்பது ஒன்றுதான். தன்னை தேடி வரும் பிள்ளையை எந்தவித குறையும் இல்லாமல் வாழ வைக்கக்கூடிய அற்புதமான குணம் கொண்டவளாக தான் அம்மன் திகழ்கிறார். அப்படிப்பட்ட அம்மனிடம் தன்னுடைய கஷ்டம் தீர்வதற்கு எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

எப்பேற்பட்ட கஷ்டமாக இருந்தாலும், தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மன கஷ்டம், பணக்கஷ்டம், தொழில் கஷ்டம் என்று அனைத்து விதமான கஷ்டங்களும் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். இவ்வாறு செல்லும் நாள் செவ்வாய், வெள்ளிக்கிழமையாக இருப்பது மிகவும் சிறப்பு அல்லது எப்பொழுது உங்களுக்கு மன கஷ்டம் ஏற்படுகிறதோ, எப்பொழுதெல்லாம் நீங்கள் கஷ்டத்தால் பாதிக்கப்படுகிறீர்களோ அப்பொழுதெல்லாம் இந்த வழிபாட்டை நீங்கள் செய்யலாம்.

அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு செல்லும்பொழுது புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து இரண்டு எலுமிச்சம் பழங்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். எலுமிச்சம்பழம் என்பது ராஜகனியாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக அம்மனுக்கு எலுமிச்சம்பழம் என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக திகழக்கூடியது. இந்த எலுமிச்சம் பழங்களை அம்மனின் பாதத்தில் வைத்துவிட்டு வாசனை மிகுந்த மலர்களை வாங்கிக் கொடுத்துவிட்டு வீட்டில் இருக்கும் அனைவரின் பெயர்களிலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு அம்மனை ஒன்பது முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வலம் வந்த பிறகு மடிப்பிச்சை வாங்குவது போல் மண்டியிட்டு உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தையும் அம்மனிடம் கூறிவிட்டு அம்மன் பாதத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை மட்டும் திரும்பி வாங்கி வர வேண்டும். இவ்வாறு வாங்கி வந்த இந்த எலுமிச்சம் பழத்தை உங்களுடைய வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

வீட்டில் ஏதாவது தீய சக்திகள் இருக்கும் பட்சத்தில் அந்த எலுமிச்சம்பழமானது அழுகிவிடும். அவ்வாறு அழுகிவிட்டால் அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மறுபடியும் அம்மன் கோவிலுக்கு போய் புதிதாக எலுமிச்சம் பழத்தை அம்மனின் பாதத்தில் வைத்து வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக நாம் செய்து கொண்டே வர வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளாக இருந்தாலும், நோய்களாக இருந்தாலும், கஷ்டங்களாக இருந்தாலும் அவை அனைத்தும் படிப்படியாக குறைந்து ஒன்றும் இல்லாமல் போய்விடும். இதே எலுமிச்சம் பழம் அழுகாமல் காய்ந்து விட்டால் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த எலுமிச்சம் பழத்தை மாற்றலாம்.

இதையும் படிக்கலாமே சனி பகவான் வக்கிர பெயர்ச்சி பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த எலுமிச்சம்பழம் வழிபாட்டை முழு மனதுடன் அம்மனை நம்பி செய்பவர்களுக்கு அந்த எலுமிச்சம் பழத்தின் ரூபத்திலேயே அம்மன் வீட்டில் வந்து குடியேறுவான்.

- Advertisement -