காலையில் எழுந்ததும் செய்யக்கூடாத இந்த 5 விஷயங்களை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! இப்படி இருந்தால் உங்களுக்கு என்றும் தோல்வியே இல்லை, வெற்றி தான்.

sleep-phone-coffee
- Advertisement -

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நீங்கள் செய்யும் செயல்கள் அன்றைய நாளின் துவக்கத்தை குறிக்கிறது. ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல காலையில் எழுந்ததும் நாம் செய்யும் சில தவறுகள் அந்த நாள் முழுவதும் எதிர்மறையாக சிந்திக்கத் தூண்டுவதாக சில சமயங்களில் அமைந்து விடுகிறது. அந்த வகையில் ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஒரு மனிதன் காலையில் எழுந்ததும் செய்யக் கூடாத 5 தவறுகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நம் உள்ளங்கையை பார்த்து கண் விழிக்க வேண்டும் என்பது நியதி! இது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். ஆனால் இன்று பலரும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக அரைகுறை முழிப்புடன் பார்ப்பது செல்போனை தான். அறிவியல் ரீதியாக காலையில் கண்களைத் திறந்த உடன் அவ்வளவு வெளிச்சத்தை பார்ப்பது கண் பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும். ஆன்மீக ரீதியாக உங்களுடைய கவனம் திசை திரும்பவும், உங்களுடைய புதிய நாளை உற்சாகத்துடன் செயல்பட முடியாமல் போகவும் செல்போன் பார்ப்பதால் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதோ ஒரு குறுஞ்செய்தி உங்களை எழுந்தவுடன் சோர்வடைய செய்து விட்டால் அந்த நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதில்லை. எனவே முதலில் செல்போன் பார்ப்பதை தவிர்க்கவும்.

- Advertisement -

இரண்டாவதாக காலையில் எழுந்ததும் உங்களுடைய வேலைகளை நீங்கள் தான் செய்ய வேண்டும். இது உங்களுடைய மேலாண்மையை குறிக்கும் செயலாகும். பெரிய பெரிய நிர்வாகத்தை நிர்வகிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லது நிர்வாகத்தில் அமர்ந்து இருப்பவர்கள் நீங்கள் படுத்த தலையணையும், போர்த்திக் கொண்ட பெட்ஷீட்டையும் கூட மடித்து வைக்காமல் இருப்பது முறை அல்ல. எழுந்ததும் படுக்கையையும், தலையணை, பெட்ஷீட் போன்றவற்றையும் நேர்த்தியாக சுத்தம் செய்து மடித்து வைத்து விட வேண்டும்.

காலையில் எழுந்ததும் சிலர் பெட் காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பற்களை சுத்தம் செய்யாமல் காபி மட்டுமல்ல, பச்சைத் தண்ணீர் கூட அருந்தக் கூடாது. வாயிலிருக்கும் கிருமிகள் வெளியில் துப்பியதும் தான் நீங்கள் பச்சை தண்ணீராக இருந்தாலும் அருந்த வேண்டும். அப்படி இருக்க பெட் காபி குடிப்பதைத் தவிருங்கள்.

- Advertisement -

அதன் பிறகு குளிக்க செல்லும் பொழுது கொதிக்க கொதிக்க சுடு தண்ணீர் ஊற்றி குளிக்க கூடாது. சுடுதண்ணீர் என்பது மேலும் உடல் சோர்வை அதிகரிக்குமே தவிர குறைய செய்வது கிடையாது! எனவே குளிர்ந்த நீரில் நன்றாக குளித்து சுத்தத்துடன் அடுத்த வேலையை துவங்கினால் அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு வெற்றி தான்! உங்கள் உடல் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தண்ணீர் குளிர்ந்து இருக்க வேண்டும். அந்த தண்ணீரில் குளிப்பது ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை கொடுக்கும்.

இறுதியாக இறைவனை அன்றைய நாளில் 5 நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். பூஜை அறையிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ அமர்ந்து 5 நிமிடம் உங்களுடைய இஷ்ட தெய்வத்தை மனதார பிரார்த்தித்து கொள்ளுங்கள். இது ஒரு யோகா போன்ற செயல் என்பதால் அறிவியல் ரீதியாகவும் உங்களுக்கு மனத்தெளிவு ஏற்படும். இறைவனுடைய அருளும் கிடைக்கும். காலையில் எழுந்ததும் இந்த ஐந்து விஷயங்களை மறந்து விடாமல் செயல்படுவது உங்களை மென்மேலும் அதிர்ஷ்டசாலி ஆக்கும்

- Advertisement -