- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இந்த ஒரு ரெசிபி செய்ய எண்ணெய் கூட அதிகம் தேவையில்லை. ஆனால் சுவையோ பிரமாதமாக இருக்கும்

இந்த ஒரு ரெசிபி செய்ய எண்ணெய் கூட அதிகம் தேவையில்லை. ஆனால் சுவையோ பிரமாதமாக இருக்கும்

- Advertisement -

உணவு என்பது சுவையாக இருப்பதற்கு அதில் எண்ணெய் அதிகம் சேர்க்க வேண்டும். என்ன தான் மசாலாக்கள் குறிப்பிட்ட அளவு சேர்த்தாலும், அதில் எண்ணெயின் அளவு குறைவாக இருந்தது என்றால் அந்த உணவு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்காது. அதனால் தான் ஓட்டல்களில் சென்று கிரேவி, குருமா இது போன்றவற்றை வாங்கும் பொழுது அதன் மேல் எண்ணெய் மிதந்து கொண்டிருக்கும். எனவே எண்ணெய் சேர்த்தால் மட்டுமே உணவு சுவையாக இருக்கும் என்பது அனைவருக்கும் இருக்கும் பொதுவான எண்ணம் தான். இப்படி எண்ணெயில் பொரித்த பலகாரங்களை அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடு தான் விளையும். ஆனால் சுவையான உணவை சாப்பிட என்ன செய்வது என்ற யோசனையும் இருக்கும். அப்படி சுவையாகவும் இருக்கும், எண்ணெயும் குறைவாக சேர்த்து செய்யும் இந்த ரெசிபியை ஒரு முறை செய்து சுவைத்துப் பாருங்கள். பிறகு மீண்டும் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – அரை கப், கொத்தமல்லி – 2 கைப்பிடி, பச்சை மிளகாய் – 3, இஞ்சி சிறிய துண்டு – 1, பூண்டு – 10 பல், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், சர்க்கரை – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், சீரகப் பொடி – கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 3 பச்சை மிளகாய், பத்து பல் பூண்டு மற்றும் சிறிய துண்டு இஞ்சி சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் ஒரு கப் கடலை மாவு, அரை கப் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பிறகு இதனுடன் கால் ஸ்பூன் சீரகத்தூள் அரை ஸ்பூன், மிளகாய்த்தூள் அரை ஸ்பூன், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இரண்டு கைப்பிடி கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும். பின்னர் இதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு சிறிய தட்டையான கிண்ணத்தில், எண்ணெய் தடவிக் கொண்டு அதில் இந்த மாவை அழுத்தமாக தட்டி சேர்க்க வேண்டும். பிறகு இட்லி பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல் இந்த மாவை வேகவைத்து எடுக்கவேண்டும். பின்னர் இதனை வெளியே எடுத்து உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பேனை அடுப்பின் மீது வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு வெட்டி வைத்துள்ள மாவை எண்ணெயில் சேர்த்து, 2 நிமிடம் வறுத்து எடுத்தால் போதும். சுவையான கடலைமாவு கட்லெட் தயாராகிவிடும். மொத்தத்தில் 3 ஸ்பூன் எண்ணெய் போதும். இவை அனைத்தையும் பொரித்து எடுக்கலாம். இதனை டொமேடோ கெட்சப் செய்து சுவைத்துப் பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும்.

சற்று முன்