அசைவம் சாப்பிட்ட பிறகு வீட்டில் எப்போது எப்படி விளக்கேற்ற வேண்டும்?

vilakku

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் பலர் அசைவ பிரியர்களாகவும் அதே சமயம் கடவுள் பக்தி உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பலருக்கு ஆன்மிகம் குறித்த பல சந்தேகங்கள் மனதில் எழத்தான் செய்கிறது. அதில் குறிப்பாக பெண்கள் பலருக்கு எழக்கூடிய சந்தேகம் என்னவென்றால் காலையில் அசைவம் சாப்பிடுத்துவிட்டு பல மணிநேரங்கள் கழித்து மாலையில் வீட்டில் விளக்கேற்றலாமா? இல்லை என்றால் எப்போது ஏற்றலாம் எப்படி ஏற்றலாம் என்பது தான். அந்த கேள்விக்கான விடையையும், விளக்கேற்றுதலின் மகத்துவத்தை பற்றியும் இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

kuthu-vilakku

பொதுவாக வீட்டில் விளக்கேற்றுதல் என்பது வேள்விக்கு நிகரான ஒரு செயல். அதில் தூமை என்பது மிக மிக அவசியமான ஒன்று. தூய்மை என இங்கு குறிப்பிடப்படுவது அகம் மற்றும் புறத் தூய்மை. வீட்டில் விளக்கேற்றும் பெண்மணிகளுக்கு அந்த க்ஷணத்தில் அகத்தில் இறைவனை தவிர வேறு நினைவே இருக்க கூடாது.

அதே சமயம் வீடு நிச்சயம் சுத்தமாக இருக்க வேண்டும். அசைவம் சமைத்த வீடு அன்று நிச்சயம் சுத்தமாக இருக்காது. அசைவத்தின் வாசனை வீட்டில் வீசத்தான் செய்யும். தெய்வ சக்திகளை மனமுருகி அழைக்கத் தான் நாம் வீட்டில் விளக்கேற்றுகிறோம். அப்படி அழைக்கப்பட்டு வீட்டிற்கும் வரும் தெய்வசக்திகளை நாம் தக்கபடி பூஜை செய்து பிராத்திக்க வேண்டும்.

kamatchi vilakku

தெய்வசக்திகள் வீட்டிற்கும் வரும் சமயத்தில் அங்கு அசைவ வாடை வீசினால் அதனால் நாம் தெய்வ நிந்தனைகளுக்கு ஆளாவோம். தெய்வத்தை வரவழைத்து அவமானப்படுத்துவது போன்ற ஒரு செயல் அது. ஆகையால் நிச்சயமாக அசைவம் சமைத்த அன்று வீட்டில் விளக்கேற்றவே கூடாது.

எப்போது விளக்கேற்றலாம்?
அசைவம் சாப்பிட்ட அடுத்தநாள், அசைவ வாசனை வராத அளவிற்கு வீட்டை நன்கு சுத்தம் செய்து சாம்ராணி, வத்தி ஆகியவற்றை ஏற்றி வீடு முழுக்க நறுமணத்தை பரப்ப வேண்டும். அதன் பிறகே வீட்டில் விளக்கேற்ற வேண்டும். ஒருவேளை இப்படி செய்வதை தவிர்த்து விளக்கேற்றினால் பொருளாதார தடை வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

deepam

வீட்டில் விளக்கேற்றுவதன் மகிமை
தீபத்தில் துர்கை, லட்சமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் குடியிருப்பதால் அவர்களை மனதார வணங்கி விளக்கேற்றுவதன் மூலம் வீட்டில் நிம்மதி பெருகும், தேவையற்ற மனக்குழப்பங்கள் நீங்கும். தீய சிந்தனைகள் மனதில் இருந்து விலகும்.