உங்களது வேண்டுதல் இறைவனின் செவிகளுக்கு கேட்க வேண்டுமா? எருக்கன் இலை சூடம்.

- Advertisement -

எருக்கஞ்செடி என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு சிறிய பயம் வந்துவிடும். ஏனென்றால் எருக்கன் செடிகள் சுடுகாட்டில் அதிகமாக வளர்ந்து இருக்கும். அதில் தீயசக்தி இருக்கும் என்று நம் அனைவராலும் நம்பப்படுகிறது. அது உண்மைதான். எருக்கன் செடியில் நல்ல சக்தியானது இருக்கின்றது என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவிற்கு கெட்ட சக்தியும் வந்து தங்கும் என்பது உண்மை. இதன்படி எருக்கன் செடி எந்த இடத்தில் இருக்கின்றதோ அதை வைத்துதான் அதில் நல்ல சக்தி இருக்கிறதா? கெட்ட சக்தி இருக்கிறதா? என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும். பொதுவாகவே எருக்கன் செடியில் வெள்ளை எருக்கன் செடியை தேவ மூலிகை என்று கூறுவார்கள். அதாவது புதையல், தங்கச் சிலைகள், ரத்தினங்கள், இவையெல்லாம் பதுங்கியிருக்கும் இடத்தில் இந்த வெள்ளருக்கன் செடி வளரும் என்று பழங்கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தோமேயானால் எருக்கம் செடி இருக்கும் இடத்தில் நிச்சயமாக தெய்வசக்தி இருக்கும் என்பது அர்த்தம். அதேசமயம் இந்தப் புதையலை பாதுகாக்க அந்த எருக்கன் செடி ஓரம் பாம்புகள் இருக்கும் என்றும் சிலரால் கூறப்படுகிறது.

Vellerukkam

எருக்கன் பூ, பூஜைக்கு மிகவும் உகந்த பூவாக கருதப்படுகிறது.
“நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா”

- Advertisement -

நல்லதோ! கெட்டதோ! எருக்கம் பூவை மனதார பரித்து கடவுளுக்கு படைத்தால், வேண்டாம் என்று சொல்லாமல் உள்ளன்போடு ஏற்றுக்கொள்வார் என்று, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கபிலர் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

Erukkam

இறைவனுக்கு அவ்வளவு விருப்பமானது இந்த எருக்கன் பூ. ஆகவே இந்த சக்தியானது எருக்கன் பூ, பூக்கும் அந்த செடிக்கும், இலைகளுக்கும் நிச்சயமாக இருக்கும் என்பது நம்பிக்கை. எருக்கன் பூவை இறைவனுக்கு சூட்டி வழிபடுவது ஒருபக்கம் இருக்க, எருக்கன் இலையால் தீபமேற்றினால் நாம் வேண்டிக் கொள்ளும் வேண்டுதல்களை, அந்த இறைவன் உடனடியாக செவி கொடுத்து கேட்பார் என்பது ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது. இப்பேர்ப்பட்ட பெருமைகளை கொண்ட எருக்கன் இலையில் இறைவனை நினைத்து எப்படி கற்பூர தீபம் ஏற்றலாம்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

உங்களுக்கு நிறைவேறாமல் இருக்கும் வேண்டுதலோ, நிறைவேறாமல் இருக்கும் விருப்பமோ, ஆசையோ, உங்களது குடும்பம் நோய் நொடி இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டுமா? எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றிக் கொள்ளவே இந்த பரிகாரம். நல்ல இடத்தில் இருக்கும் வெள்ளருக்கு செடியின் இலையை முதலில் பறித்துக் கொள்ள வேண்டும். தெய்வ சக்தி வாய்ந்த செடி என்பதால் இலையை பறிப்பதற்கு முன்பு மனதார மன்னிப்பு கேட்டுக்கொண்டு பறித்துக் கொள்ளுங்கள். வெள்ளருக்கு செடியின் இலை கிடைக்கவில்லை என்றால், மற்ற எருக்கன் செடியின் இலையை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த இலையை வீட்டுக்கு எடுத்து வந்த பின்பு நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சுத்தமான பின்பு, இந்த பரிகாரத்தை தொடங்கவேண்டும். நீங்கள் பறித்து வந்த எருக்கன் இலையை, ஒரு தாம்பூலத்தில் வைத்து விட்டு, அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, அந்த நாணயத்தின் மேல் பகுதியில் ஒரு கற்பூரம் ஏற்றப்பட வேண்டும்.

இந்த கற்பூர தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக உங்களது குலதெய்வத்தை மனதார நினைத்து கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். ஏற்றப்பட்ட தீபத்தை பார்த்து உங்கள் மனதிற்குள் இருக்கும் வேண்டுதலை, குறிக்கோளை இறைவனிடம் வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் உங்களது நிறைவேறாத ஆசை எதுவாக இருந்தாலும் அது நிறைவேறுவதற்கான வழி உங்களுக்கு கட்டாயமாக கிடைத்துவிடும். 48 நாட்களும் ஒரே குறிக்கோள் தான் இருக்க வேண்டும் மாற்றிவிடக் கூடாது. அந்த ஒரு சூடமானது எரிந்து முடியும் வரை, உங்கள் மனதில் குறிக்கோளை திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டே இருப்பது இன்னும் சக்தியைக் கொடுக்கும்.

- Advertisement -

தட்டின் மேல் எருக்கன் இலை, எருக்கன் இலையின் மேல் ஒரு ரூபாய் நாணயம், ஒரு ரூபாய் நாணயத்தின் மேல் ஒரு சிறிய கற்பூரம் இவ்வளவுதான். உங்களுக்கு கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கூட கேட்டுத்தான் பாருங்களேன் அதற்கு வழி கிடைக்குமா என்பதை! நம்பிக்கையோடு ஒரு விஷயத்தை தொடர்ந்து நாம் நினைத்துக் கொண்டே இருப்பது உண்மையானால், அதற்கு நல்ல நல்ல பரிகாரங்கள் ஒரு வழிகாட்டியாக நிச்சயமாக அமையும் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த பரிகாரத்தை செய்து பார்ப்பதன் மூலம் எந்த ஒரு கெட்டதும் நடக்காது என்பது மட்டும் உண்மையான ஒன்று.

இதையும் படிக்கலாமே
பெரிய யாகம் நடத்திய பலனை பெற வேண்டுமா? உங்களது வீட்டில் இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vellerukku benefits in Tamil. Vellerukku mooligai Tamil. Erukku leaves uses in Tamil. Vellai erukkanchedi Tamil. Erukkanchedi uses in Tamil.

- Advertisement -