எதிரிகளை வெற்றிகொள்ள, எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்களில் இருந்து முற்றிலும் வெளியில் வர அற்புதமான மந்திரம் இதோ.

Appar
- Advertisement -

எந்த ஒரு செயலிலும் பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே நாம் வெற்றியை பெறுவது என்பது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதற்காக வாழ்நாள் முழுவதும் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை நாம் எதிர்த்து செயல்பட்டு கொண்டு இருக்க முடியாது. இக்காலத்தில் நமது அக்கம்பக்கத்தினர், நெருங்கிய உறவினர்கள் கூட நமது வளர்ச்சி, திறமை போன்றவற்றின் மீது பொறாமை கொண்டு நமக்கு எதிரான செயல்களை செய்கின்ற அனுபவத்தை பெற்றிருப்போம். இப்படி நமக்கு பல வழிகளில் தொந்தரவுகளை கொடுக்கும் எதிரிகளை வெற்றிக்கொள்ள சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் அருளிய மந்திரம் இதோ.

Thirunavukarasar

சைவக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் சோழ நாட்டில் பிறந்தவர். தன் இளமைக் காலத்தில் சமண மதத்தை தழுவினார். பிறகு அவருக்கு ஏற்பட்ட சூலை நோய், அந்த சிவபெருமான் அருளால் நீங்கவே அன்று முதல் சிவனை முழுமுதற் கடவுளாக ஏற்று சிவத்தொண்டு புரிவதையே தன் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டார். மற்றொரு சமயக் குரவரான திருஞான சம்பந்தரால் “அப்பர்” என அன்போடு அழைக்கப்பட்டார். திருநாவுக்கரசர் “திரு ஆவடுதுறை” என்கிற பதிகத்தில் அருளிய இரு தேவார மந்திர பாடல்கள் இவை.

- Advertisement -

வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்! தானவர் தலைவர் போலும்!
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை யார்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.

sunai lingam

விடைதரு கொடியர் போலும்! வெண் புரி நூலர் போலும்!
படைதரு மழுவர் போலும்! பாய்புலித் தோலர் போலும்!
உடைதரு கீளர் போலும்! உலகமும் ஆவார் போலும்!
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.

இந்த அற்புத தேவார பாடலை தினமும் காலையில் குளித்து முடித்ததும், நெற்றியில் திருநீறு அணிந்து சிவபெருமானை மனதார நினைத்து, ஒரு முறையோ அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு என்றில்லாமல் உங்களால் முடிந்த வரை துதிக்கலாம். சக்தி வாய்ந்த இந்த தேவார பதிகங்களை துதிப்பவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் ஏற்படுகின்ற இன்னல்கள் விரைவில் நீங்குவதை அனுபவப் பூர்வமாக உணரலாம். எதிரிகள் குறித்த பயமும் மனதிலிருந்து முற்றிலும் நீங்கும்.

- Advertisement -