எதிரிகள் தொல்லை நீங்க ஹனுமன் மந்திரம்

hanuman manthriam
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்காக பல வழிகளை மேற்கொண்டு பல போராட்டங்களுக்கிடையில் படிப்படியாக முன்னேறுவார். அப்படி முன்னேறும் நபரை பார்த்து பொறாமை எண்ணத்துடன் சில எதிரிகள் வருவார்கள். அப்படிப்பட்ட எதிரிகள் கண் திருஷ்டியாலோ அல்லது தன்னைவிட முன்னேறி செல்லக்கூடாது என்பதற்காகவோ பல தடைகளையும், தடங்கல்களையும் ஏற்படுத்துவார்கள். அதையும் மீறி ஒரு சிலர் தீய சக்திகளையும் ஏவி விடுவார்கள். இப்படி நடக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர்வதற்கும் எதிரிகளின் தொல்லை முற்றிலும் நீங்குவதற்கும் சொல்லக் கூடிய அனுமனின் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வீரம் மிகுந்த பலம் பொருந்திய பராக்கிரமசாலியாக திகழக்கூடியவர் ஹனுமன். இன்றளவும் சிரஞ்சீவியாக இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று புராணங்கள் கூறுகிறது. எந்த இடத்தில் ராம நாமம் ஒலிக்கிறதோ அந்த இடத்திற்கு தன்னை மறந்து வந்து அருள் புரிவார் என்பதால் தான் அனுமனை வேண்டி வழிபடுபவர்கள் ராம நாமத்தை உச்சரிக்கிறார்கள். இவரை பல வேண்டுதலுக்காக நாம் வழிபடலாம். அவற்றுள் ஒன்றாக கருதப்படக் கூடிய எதிரிகளின் தொல்லை நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

அனைவரின் வாழ்க்கையிலும் எதிரிகள் என்று யாராவது ஒருவராவது இருப்பார்கள். பிறர் முன்னேறக்கூடாது என்பதற்காக முட்டுக்கட்டைகளை போடுவார்கள். அது தொழிலாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி அல்லது குடும்ப பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் சரி தன்னை விட கீழ்தான் இருக்க வேண்டும்.

தனக்கு மேலாக செல்லக்கூடாது என்று நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பல எதிர்ப்புகளை உருவாக்குவார்கள். அப்படி இருப்பவர்களை உரு தெரியாமல் மாற்றுவதற்கு அனுமன் உதவி புரிவார். இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் எதிரிகள் விலகுவதோடு மட்டுமல்லாமல் எதிரிகளால் ஏற்பட்ட தடைகளும் நீங்கும். இதோடு மட்டுமல்லாமல் சில எதிரிகள் ஒரு படி மேலே சென்று ஏவல் பில்லி சூனியம் என்று பல தீய சக்திகளை ஏவி விடுவார்கள்.

- Advertisement -

இவ்வாறு ஏவி விடுவதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் அவரின் தொழிலோ வேலையோ பாதிப்பதோடு மட்டுமல்லாமல் அவரின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு எந்தவித முன்னேற்றத்தையும் சந்திக்க முடியாமல் கஷ்டத்துக்கு உள்ளாவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது அவர்கள் நமக்கு என்ன நடக்க வேண்டும் என்று நினைத்து செய்கிறார்களோ அது அவர்களையே சென்றடையும். நம்மை தாக்காது.

இந்த மந்திரத்தை சனிக்கிழமை அன்றோ அல்லது வியாழக்கிழமை அன்றோ அருகில் இருக்கக்கூடிய ஹனுமன் கோவிலுக்கு சென்று அவருக்கு நம்மால் இயன்ற வெற்றிலை மாலை, துளசிமாலை என்று ஏதாவது ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டுவிட்டு அந்த கோவிலிலேயே அமர்ந்து ஆயிரம் முறை ஜெபித்து உருவேற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு தினமும் ஐந்து முறை மட்டும் இந்த மந்திரத்தை நம்முடைய வீட்டு பூஜை அறையில் அமர்ந்து சொன்னால் போதும். கண்டிப்பான முறையில் இந்த மந்திரத்தை கூறும் பொழுது குளித்து முடித்துவிட்டு சுத்தமாக இருக்க வேண்டும். இந்த மந்திரத்தை கூறும்பொழுது கையில் விபூதியை வைத்துக்கொண்டு கூறவேண்டும். மந்திரத்தை கூறி முடித்த பிறகு விபூதியை தங்கள் மேலே போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு போடுவதன் மூலம் இந்த மந்திரமானது விபூதியில் வந்தடைந்து அந்த விபூதி நம்மை பாதுகாக்கும் கவசமாக திகழும்.

மந்திரம்

ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா லங்காபுரி இராவண சம்ஹாரா சஞ்சீவிராய ஓடிவா உக்கிரமாகவே ஓடிவா அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்சசிகளை பிடிப்பிடி அடிஅடி கட்டுகட்டு வெட்டுவெட்டு கொட்டுகொட்டுகொட்டு தாக்குதாக்கு ஓம் ஆம் இளைய அனுமந்தா வாவா ஸ்வாஹா

இதையும் படிக்கலாமே: பிரச்சனைகள் தீர மந்திரம்

சற்று பெரிய மந்திரமாக இருந்தாலும் உச்சரிக்க எளிதாக இருக்கக்கூடிய இந்த மந்திரத்தை யாருக்கும் தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் உச்சரிக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -