உங்களையும் உங்கள் வீட்டையும் பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தரித்திரம், முழுமையாக உங்களை விட்டு விலக, இந்த பொருட்களை ஒன்றாக சேர்த்து தலையை சுற்றி போடுங்கள்.

mudichu

நம் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு வீட்டில் தங்கியிருக்கும் எதிர்மறை ஆற்றல் தான் முதல் காரணமாக இருக்கும். கண்ணுக்கு தெரியாத கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் இந்த வரிசையில் நம்முடைய சோம்பேறித்தனம், இயலாமை போன்று நம்மை சுறுசுறுப்பாக செயல் படாமல் தடுத்து வைத்திருக்கும் உடல் ரீதியான உபாதைகளும் ஒரு விதமான கெட்ட சக்திதான். இப்படியாக எந்த கெட்ட சக்தியின் மூலம் உங்களுக்கும் உங்களுடைய வீட்டிற்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதனை சரி செய்ய என்ன செய்யலாம் என்பதை பற்றிய ஒரு சுலபமான பரிகாரத்தை தெரிந்து கொள்வோமா.

dry-chilli-milagai

இந்த பரிகாரத்திற்க்கு தேவையான பொருட்கள் வெண் கடுகு, கல்லுப்பு, வர மிளகாய் 2, பச்சைக் கற்பூரம் சிறிய துண்டு, ஓமம், கடுகு இந்தப் பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு வெள்ளை துணியில் வைத்து சிறிய முடிச்சு போல கட்டிக்கொள்ளுங்கள். எல்லா பொறுட்களிலிருந்தும் ஒரு 1/2 ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டாலே போதும்.

இந்த சிறிய வெள்ளை முடிச்சை, யார் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்களுடைய தலையை இடப்புறம் மூன்று முறை, வலப்புறம் மூன்று முறை சுற்ற வேண்டும். உங்களுக்கு நீங்களே செய்து கொள்ள வேண்டும் என்றாலும் இதை நீங்களே உங்களுடைய தலையை சுற்றிக் கொள்ளுங்கள்.

venkadugu

இப்போது இந்த முடிச்சு அப்படியே இருக்கட்டும். ஒரு சிறிய மண் அகல் விளக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி இந்த முடிச்சை நனைத்து, பற்ற வைத்து விடவேண்டும். கட்டாயம் இந்த முடிச்சு நிலை வாசல் படிக்கும் வெளிப்பக்கத்தில் தான் ஏற்றபட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் வீட்டிற்குள் ஏற்றி விடாதீர்கள். வீட்டிற்கு பின்பக்கம் இடம் இருந்தால் அங்கேயும் செய்யலாம். முன்பக்கம் இடம் இருந்தால் அங்கேயும் செய்யலாம். அப்படி இல்லை என்றால் மொட்டை மாடியில் செய்யலாம். நிலை வாசப்படிக்கு உள்பக்கமாக இந்த முடிச்சை நெருப்பில் போட்டு கொளுத்தி விட கூடாது.

- Advertisement -

உங்களைப் பிடித்த கெட்டது அனைத்தும் நெருப்போடு நெருப்பாக பஸ்பமாகி வெளியேறக்கூடிய பரிகாரம் இது. வீட்டுக்குள்ளேயே வைத்து இந்த முடிச்சினை எரிப்பதன் மூலம் உங்களுக்கு எந்த ஒரு பயனும் இருக்காது. எதிர்மறை ஆற்றலும் தரித்திரமும் மீண்டும் மீண்டும் உங்கள் வீட்டை சுற்றி வரும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

kettasathi-1

கண் திருஷ்டி முதல் ஏவல் பில்லி சூனியம் வரை உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் எந்த கண்ணுக்கு தெரியாத துர் சக்திகளையும் துர்தேவதைகளையும் அடித்து விரட்டக் கூடிய சக்தி வாய்ந்த பரிகாரங்களில் இதுவும் ஒன்று. எந்த பயமும் இல்லாமல் நம்பிக்கையோடு அந்த குலதெய்வத்தை வேண்டி உங்கள் வீட்டிலும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

neruppu

நாம் எது ஒன்றை பயந்து நடுங்கி பின் வாங்குகின்றோம, அது நம்மை துரத்திக் கொண்டே தான் இருக்கும். எதுவாக இருந்தாலும் சரி, எதிர்கொண்டு திரும்பி ஒரு பார்வை பார்த்தாலே நம்மை துரத்தும் அந்த சக்தி நம்மை கண்டு தெரித்து ஓடி விடும். வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லை என்றால் மாதம் ஒரு முறை அமாவாசை தினத்திலும் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம் நல்ல பலன் கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.