அழகான தோற்றத்தைப் பெற வேண்டும் என்றுதான் பலரும் பியூட்டி பார்லர் சென்று தங்களை அழகுப்படுத்திக் கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கடைகளில் விற்கக்கூடிய கிரீம்களையும் உபயோகப்படுத்துகிறார்கள். இவை அனைத்திலும் கெமிக்கல்கள் நிறைந்து இருப்பதால் அதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இதனை தவிர்ப்பதற்கும் உடலில் இருக்கக்கூடிய கருமையை நீக்கி அழகான தோற்றத்தை பெறுவதற்கும் இயற்கையான முறையில் ஃபேஸ் க்ரீமை தயார் செய்யும் முறையை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
இயற்கையிலேயே பல அற்புதமான பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன. அந்த பொருட்களை நாம் முறையாக உபயோகப்படுத்தும் பொழுது நாம் நினைக்கும் அழகை நம்மால் பெற முடியும். முகத்தில் இருக்கக்கூடிய கருமையும், கருந்திட்டுகளும் நீங்கி முகத்தை வெண்மையாகவும் அதே சமயம் பிரகாசமாகவும் மாற்றக்கூடிய ஒரு அற்புதமான க்ரீமை எளிமையான முறையில் வீட்டிலேயே தயார் செய்யும் முறையை பார்ப்போம்.
இந்த கிரீமை நாம் தயார் செய்வதற்கு நமக்கு ஒரு சிறிய அளவிலான உருளைக்கிழங்கு அதே அளவில் இருக்கக்கூடிய பீட்ரூட்டும் தேவைப்படும். இரண்டின் தோள்களையும் நீக்கி சிறிதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த இந்த பேஸ்ட்டை ஒரு வடிகட்டியில் ஊற்றி நன்றாக வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாரில் ஒரு ஸ்பூன் சோளமாவை சேர்த்து கட்டி விடாத அளவிற்கு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு கடாயில் நாம் கலந்த இந்த சாரை ஊற்றி அந்த கடாயை எடுத்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிண்ட வேண்டும். இது க்ரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு நாம் குறைந்த தீயில் வைத்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். க்ரீம் பதத்திற்கு வந்த பிறகு இதை அடுப்பில் இருந்து அப்படியே இறக்கி வைத்துவிட்டு சூடு ஆறிய பிறகு இதில் 5 சொட்டு தேங்காய் எண்ணெய் ஒரு விட்டமின் இ கேப்ஸ்யூல் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
இது ஃப்ரிட்ஜில் குறைந்தது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். இந்த க்ரீமை இரவு படுக்க செல்வதற்கு முன்பு எந்த இடத்தில் கருமை இருக்கிறதோ அந்த இடத்தில் சிறிதளவு எடுத்து நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது ஐந்து நிமிடமாவது நாம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்யும் பொழுது இந்த கிரீம் நம்முடைய தோலில் நன்றாக உறிஞ்சப்படும். கால் மணி நேரம் இதை அப்படியே விட்டு விட்டால் அது நன்றாக காய்ந்து விடும். விருப்பம் இருப்பவர்கள் அப்படியே படுத்து உறங்கலாம்.
விருப்பமில்லாதவர்கள் வெதுவெதுப்பான நீரில் அதை கழுவி விட்டு பிறகு உறங்கலாம். தினமும் இப்படி செய்வதன் மூலம் கருமை அனைத்தும் நீங்கும். வெண்மை ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் ஒருமுறை உபயோகப்படுத்திய உடனேயே நன்றாக பிரகாசமான நிறத்தை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: தங்கம் போல் மின்ன மஞ்சள் எண்ணெய்
இந்த இரண்டு பொருட்களும் நம்முடைய சருமத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் என்பதால் இதை நாம் தொடர்ந்து உபயோகப்படுத்துவதன் மூலம் அழகான இளமையான பிரகாசமான சருமத்தை பெற முடியும்.