உங்கள் முகத்தில் இப்படி இருந்தால்! நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பீர்கள் தெரியுமா? இது தெரியாம போச்சே!

face-reading-suvadi

ஒருவருடைய முகத்தை பார்த்து அவர்களுடைய குணாதிசயத்தை பல இடங்களில் நாம் சாதாரணமாகவே கணித்து இருப்போம். சிலருடைய முகத்தை பார்க்கும் பொழுது அவர் மிகவும் அமைதியானவர் என்று தோன்றும். ஒரு சிலருடைய முகத்தை பார்க்கும் பொழுது அவர்களிடம் பேசவே பயமாக இருக்கும்! எதற்கு நமக்கு வம்பு என்று ஒதுங்கிப் போய் விடுவோம். ஆக முகத்தை வைத்து ஒருவருடைய குணத்தை தீர்மானிக்க முடிகிறது. அந்த வரிசையில் உங்களுடைய முகம் இப்படியான அம்சத்துடன் இருந்தால் நீங்கள் இப்படி பட்டவர்களாக இருப்பீர்கள்! என்கிறது நாடி ஜோதிடம். இதை பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

face-mugam

நாடி ஜோதிட குறிப்புகள் சில நுணுக்கங்களை முக அமைப்பை வைத்து குறிப்பிட்டுக் கூறுகிறது. இதற்கு விஞ்ஞானப் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றாலும் தெரிந்து கொள்வதற்கு சுவாரஸ்யமாக தான் இருக்கும். உங்களுடைய முகம் உங்கள் ரகசியத்தை கூறினால் கேட்பதற்கு கசக்கவா செய்யும்? ஒருவருடைய முகத்தின் அளவு, முகத்தில் இருக்கும் கண்கள், புருவங்கள், கோடுகள், நெற்றியின் அமைப்பு ஆகியவற்றை வைத்து உங்களுடைய குணாதிசயங்களை தீர்மானிக்க முடிகிறது.

உங்களுடைய தலைமுடி நெற்றியில் ஆரம்பிக்கும் மேற்புற அமைப்பு பளிச்சென்று மென்மையான அமைப்பில் இருந்தால் உங்களுடைய தொழில் மற்றும் பெற்றோர்களுடைய விஷயங்களில் நீங்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பீர்கள். குழந்தை பருவத்தில் உங்களுடைய வாழ்வு மகிழ்வானதாக அமைந்திருக்கும். அந்தப் பகுதி பள்ளமாக இருந்தால் பெற்றோர்களால் அவர்களுக்கு துன்பங்கள் இருக்கும். சிறுவயது முதல் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்திருப்பார்கள்.

face-mugam1

நெற்றியின் நடுப்பகுதியில் வட்டமாகவும், குறுகியதாகவும் இருந்தால் நல்ல தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். அடிக்கடி வாய்ப்புகள் கதவை தட்டும். அப்பகுதி பள்ளமாகவும், கருத்தும் காணப்பட்டால் 25 வயது வரை அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் அமைவதில்லை. பல இடங்களில் அவமானங்களையும், அலட்சியங்களையும் சந்தித்து இருப்பார்கள். இரு புருவங்களுக்கும் இடைப்பட்ட பகுதி மிகவும் முக்கியமானது. இங்கு வட்டமாக காணப்படுபவர்களுக்கு 27 வயதிற்கு மேல் பெரும் முன்னேற்றம் இருக்குமாம். இவர்கள் எப்போதும் நேர்மறையாக சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.

- Advertisement -

இரு புருவங்களுக்கு இடையே இடைவெளி அதிகமாக இருக்கும் நபர்களும், அடர்த்தியான புருவம் கொண்டவர்களும் அதிகமாக பணத்தை சம்பாதிப்பார்கள். நீண்ட ஆயுளும், செல்லும் இடமெல்லாம் இவர்களுக்கு மரியாதையும் அதிகமாக இருக்கும். இரு புருவங்களுக்கு இடையில் இடைவெளி இல்லாமல் ஒன்றோடு ஒன்று ஒட்டுவது போல இருந்தால் அவர்கள் மிகவும் பிடிவாத குணம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மன்னிக்கும் பக்குவம், எதையும் நேர்மறையாக சிந்திக்கும் திறன் இருப்பது இல்லை. மூக்குக்கு மேல் கோபம் வரும். சிறு பிள்ளை போல் அடிக்கடி அடம் பிடிப்பார்கள்.

nose

மூக்கு பகுதியில் குறுக்கு கோடுகளும், கருப்புப் புள்ளிகளும், திட்டுக்கள் ஏதாவது இருப்பின் அடிக்கடி உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் திருமணமானவர்களாக இருந்தால் திருமண வாழ்வின் நடுப்பகுதியில் உங்கள் துணையுடன் தேவையில்லாத மனக்கசப்புகள் உருவாகும். கண்களுக்குக் கீழே இருக்கும் பகுதி புஸ்ஸென்று மேடாக இருந்தால் அவர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். எவரையும் எளிதில் நம்பி விடுவார்கள். அவர்களை அதிகமாக நேசிக்கவும் செய்வார்கள். அந்த பகுதியில் சுருக்கங்கள் அல்லது கரடுமுரடாக இருந்தால் அவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். காதல் விஷயத்தில் கட்டாயம் பல தோல்விகளைச் சந்திப்பார்கள்.

face-mugam2

மூக்கு மற்றும் மேல் உதட்டுக்கு இடைப்பட்ட பகுதி நீண்டு, பரந்த, அழகான தோற்றம் கொண்டு இருந்தால் அவர்கள் இல்லற வாழ்க்கையில் எந்த ஒரு குறையும் இருக்காது. நல்ல ஆரோக்கியமான குழந்தையும் உண்டாகும். மேலும் அவர்களுக்கு நீண்ட ஆயுளும் இருக்கும். அந்த இடத்தில் தட்டையாக இருக்கும் பொழுது இல்லற வாழ்வில் பிரச்சனைகளும், குழந்தை பிறப்பில் தடையும் ஏற்படும். மேலும் ஆயுள் குறைவு உண்டாகும் என்கிறது நாடி ஜோதிடம்.