Whatsapp : பேஸ்புக் மெசெஞ்சரை வாட்ஸ்அப்பில் இணைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் – பேஸ்புக் நிர்வாகம்

Whatsapp
- Advertisement -

உலக அளவில் அதிகம் உபயோகிக்கப்படும் சமூகவலைத்தளம் பேஸ்புக். பேஸ்புக் மூலம் நாம் அனைவரும் புதிய நண்பர்களை பெறுகிறோம். மேலும், அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை நாம் அனைவரும் பேஸ்புக் வலைத்தளத்தில் நமது பதிவுகளாக பதிவிட்டு வருகிறோம். மேலும் பேஸ்புக் மூலம் அதிகதூரம் மற்றும் தொலைபேசி இல்லாமல் தங்களது மெசேஜ்களை நமது நண்பர்களுக்கு அனுப்பமுடியும்.

watsapp

தற்போது பேஸ்புக் பயன்படுத்தும் பயனாளர்கள் பேஸ்புக்கில் மெசேஜ் செய்வது குறைந்து வருகிறது. ஏனெனில், பேஸ்புக்கினை மொபைல் மூலம் பயன்படுத்தும் பயனாளர்கள் மெசேஜ் அனுப்பினாலோ அல்லது ரிசீவ் செய்வது போன்றவை தனியாக மெசென்ஜர் மூலமாக நாம் உபயோகிக்கிறோம். ஆனால், இதனால் பேஸ்புக் மூலம் மெசேஜ் செய்யும் பயனர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

- Advertisement -

இதனை சரிசெய்ய பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளரான Mark Zuckerberg நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளார். மேலும், வாட்சப்பில் பேஸ்புக் மெஸெஞ்சரை இணைக்க இருக்கிறோம் அப்படி இணைப்பதன் மூலம் எளிதாக வாட்ஸ்அப் மூலம் பேஸ்புக் மெசெஞ்சரை பயன்படுத்த முடியும். இதனால் மேலும் பேஸ்புக் பயன்பாடு பயனர்களிடம் அதிகரிக்கும் என்றும் கருதுவதாக Mark Zuckerberg தெரிவித்தார்.

watsap

இந்த புதிய அப்டேட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் Mark Zuckerberg தெரிவித்தார். மேலும், இதனால் இனிமேல் வாட்ஸ்அப்பிலே பேஸ்புக் மெஸெஞ்சரை பயன்படுத்தலாம்.

- Advertisement -