2023 பிப்ரவரி மாத ராசி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

feb-month-rasi-palan
- Advertisement -

ஆங்கில மாதத்தில் நாளை பிப்ரவரி மாதம் துவங்க இருக்கும் நிலையில் ஒவ்வொரு கிரகங்களின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப 12 ராசிகளுக்கு உரிய பலன்களும் வேறுபடுகிறது. வேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் அனுபவிக்க இருக்கும் அதிர்ஷ்டங்களும், துரதிஷ்டங்களும் என்னென்ன? என்பதை தான் ஆங்கில மாத பலனாக இந்த ஜோதிட பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். மனதில் பட்டதை உடனுக்குடன் வெளிப்படையாக பேசுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் சாதுரியமான செயல்களை செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளை சமாளிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் சுதா பேச்சு வார்த்தைகள் அவ்வப்பொழுது நடக்கும். ஆரோக்கிய குறைகள் படிப்படியாக குறைய துவங்கும். பரிகாரமாக விநாயகர் வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் பொறுப்புகள் அதிகம் ஏற்கக்கூடிய மாதமாக அமைய இருக்கிறது. மனதில் சுதந்திர உணர்வு அதிகரித்து காணப்படும். குடும்ப உறவுகளுக்கு இடையே வார்த்தைகளில் கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் எதிலும் அகல கால் வைக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் நேர்மைக்கு உரிய பலன்களை பெறுவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் இருக்கும் குறைகளை உடனுக்குடன் கவனியுங்கள். பரிகாரமாக பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வது நல்லது.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவுகள் எடுக்காதீர்கள். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக்கூடும். குடும்பத்தில் வெளி மனிதர்களின் கருத்துக்களை கொண்டு வர வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றம் காணக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலை நுணுக்கங்களை கூடுதலாக கற்றுக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்கூடும் கவனம் வேண்டும். பரிகாரமாக சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வாருங்கள்.

- Advertisement -

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லக்கூடிய நல்ல மாதமாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே அவ்வப்பொழுது சண்டை சச்சரவுகள் வந்து விரிசல் வரலாம். உற்றார் உறவினர்கள் ஆதரவு குறையலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவால் ஏற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற பகுதிகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பரிகாரமாக துர்க்கை அம்மன் வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பார்க்காத திருப்பங்கள் நிறைந்த மாதமாக இருக்கிறது. பல தடைகளை தாண்டி இறுதியில் வெற்றி உங்களுக்கு கிடைக்கும். சுப காரியங்கள் நடக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மெல்ல மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிலும் பெரிய தொகையை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பிடிவாத குணம் பிரச்சனைகளை கொடுக்கும் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சுவாச பிரச்சனைகள் வரக்கூடும் கவனம் வேண்டும். பரிகாரமாக ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுங்கள்.

- Advertisement -

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களுடைய யுக்திகள் எதிர்பாராத நற்பலன்களை கொடுக்கப் போகிறது. வரவு வந்த வேகத்தில் கரைய வாய்ப்புகள் உண்டு எனவே சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்றத்தை கொடுக்கும் வகையில் அமைய போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் திடீர் சலுகைகளை பெறுவீர்கள். யாருக்கும் ரெக்கமண்ட் செய்யாதீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை. பரிகாரமாக வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு நெய் விளக்கு ஏற்றுங்கள்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நல்ல மாதமாக இருக்கிறது. இதுவரை இல்லாத ஒரு புது விதமான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கப் போகிறது. சுப காரிய முயற்சிகளில் இருந்து மந்த நிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்கள் பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி காணக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு தேவை. ஆரோக்கிய பாதிப்புகளை அலட்சியம் செய்யாமல் கவனியுங்கள். பரிகாரமாக சனிக்கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றுங்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய நல்ல மாதமாக அமைய இருக்கிறது. மனதிற்கு பிடித்த வரம் அமையும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தடைகளை தாண்டிய முன்னேற்றம் இருக்கும். தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகள் தொந்தரவு குறைய ஆரம்பிக்கும். ஆரோக்கியத்தில் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். பரிகாரமாக குலதெய்வத்தை வழிபடுங்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கவலைகள் நீங்க கூடிய நல்ல மாதமாக இருக்கிறது. எதிர்பாராத திடீர் பிரச்சனைகள் வரக்கூடும். வீண் வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த விரிசல் அகலும். கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். ஆரோக்கியம் சீராகும். பரிகாரமாக ஞாயிற்றுக்கிழமையில் சூரிய வழிபாடு செய்யுங்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் யோகம் நிறைந்த நல்ல மாதமாக இருக்கப் போகிறது. அதிர்ஷ்டங்கள் பல உங்கள் இல்லம் தேடி வரும் வாய்ப்பு உண்டு. வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமைந்து செட்டில் ஆகிவிடுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்கள் திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் அவ்வபொழுது வரக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை கவனிக்க தவறாதீர்கள். பரிகாரமாக பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடுதல் சிறப்பு.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களுடைய நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு உண்டு. மனரீதியான பிரச்சனைகளை எதிர்த்து போராட முயற்சி செய்வீர்கள். குடும்ப ஒற்றுமையில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டங்கள் பல வரும், எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய முயற்சிகளில் பாராட்டுகளை பெறுவீர்கள். நல்ல விமர்சனங்கள் உங்களை ஊக்கப்படுத்தும். ஆரோக்கிய பாதிப்புகள் பெரிதாக இருக்காது. பரிகாரமாக சஷ்டி விரதம் மேற்கொள்ளுதல் நல்லது.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல மாதமாக இருக்கிறது. உங்களுடைய மனோதிடம் அதிகரிக்கும். முன்பின் தெரியாதவர்களிடம் பழகும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. குடும்ப ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் எதிரிகளை பக்கத்திலேயே வைத்திருப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியிட மாற்றம், பதவி உயர்வு போன்றவற்றில் சாதக பலன் காணலாம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை விழிப்புணர்வு தேவை. பரிகாரமாக செவ்வாய் கிழமையில் முருகனுக்கு விளக்கு ஏற்றுங்கள்.

- Advertisement -