அசுர வேகத்தில் முடி வளர்ச்சியை தரும் ஹேர் மாஸ்க்

long hair flax seed
- Advertisement -

தலைமுடி வளர்ச்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கவும், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கவும் பலரும் பல பொருட்களை உபயோகப்படுத்துவார்கள். அந்த வகையில் மிகவும் அதிகமான அளவில் உபயோகப்படுத்தக்கூடிய பொருளாக தான் ஆளி விதை திகழ்கிறது. ஆளி விதையை தண்ணீரில் போட்டு வேகவைத்து அதன் ஜெல்லை தனியாக எடுத்து அதை தலைக்கு தடவுவதன் மூலம் தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது முற்றிலும் நின்றுவிடும் என்பது பலரும் அறிந்ததே. அதனால் பலரும் அதை உபயோகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி தலைமுடி உதிர்தலை தடுத்து நிறுத்தக்கூடிய ஆளி விதையுடன் இன்னும் ஒரு பொருளை சேர்த்து நாம் பயன்படுத்தினால் நம்முடைய தலைமுடி அதிக அளவில் வளர ஆரம்பிக்கும். அது என்ன என்பதை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சரும பிரச்சனைகளுக்கும் சரி தலைமுடி பிரச்சனைக்கும் சரி, ஒரு நல்ல தீர்வாக திகழவதுதான் ஆளி விதை. ஆளி விதையில் இருந்து வீட்டிலேயே நாம் ஜெல் தயாரிக்க முடியும். இந்த ஜெல்லை வைத்து நம்முடைய முகத்திற்கு தடவுவதன் மூலம் முக அழகு மேம்படும். தலைக்கு தடவுவதன் மூலம் தலைமுடி உதிர்தல் என்பது குறையும். இதனாலே பலரும் தங்களுடைய அன்றாட வாழ்வில் ஆளி விதையை தங்களின் அழகை பராமரிப்பதற்காக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

- Advertisement -

அப்படிபட்ட ஆளி விதையுடன் சேர்க்க வேண்டியது நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய அரிசி தான். பொதுவாக ஆளி விதைச் ஜெல்லை தயார் செய்வதற்கு நாம் என்ன செய்வோம்? ஆளி விதையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடுவோம். பிறகு அதை வடிகட்டி உபயோகப்படுத்துவோம் அல்லவா.

அதற்கு பதிலாக ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு ஆளி விதை எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு அரிசியையும் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி 15 நிமிடம் குறைந்த தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு அதை சிறிது நேரம் ஆறவிட்டு ஜல்லடை போன்ற துணியை பயன்படுத்தி இதை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது ஆளி விதை மற்றும் அரிசி இவை இரண்டும் சேர்ந்த ஜெல் தயாராகிவிட்டது. அரிசியில் பலவிதமான சத்துக்கள் இருக்கிறது. இந்த சத்துக்களின் உதவியாய் நம்முடைய தலைமுடி வேகமாக வளர ஆரம்பிக்கும். இந்த ஜெல்லில் நாம் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு பாதாம் எண்ணெயை சேர்க்க வேண்டும். பாதாம் எண்ணையும் நம்முடைய தலைமுடிக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது.

இப்படி பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து பிறகு நம்முடைய தலை முடியின் வேர் கால்களில் படும்படி நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு எப்பொழுதும் போல் ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடலாம். இந்த முறையில் தொடர்ச்சியாக நீங்கள் தலைக்கு ஆளி விதை மற்றும் அரிசியை பயன்படுத்தி வர தலைமுடி உதிர்தல் நிற்பதோடு எதிர்பார்க்க முடியாத அளவிற்கு தலைமுடி வளர்ச்சி என்பதும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: ஒரே வாரத்தில் புது முடி முளைக்க

எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி நம்முடைய தலைமுடியை வேகமாக வளர செய்ய முடியும் என்னும் பட்சத்தில் எதற்காக தேவையற்ற கெமிக்கல் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -