சொன்னா நம்பவே மாட்டீங்க! உங்களுடைய முடி வளர்ச்சியை 30 நாட்களில் 3 மடங்கு அதிகமாக வளர செய்ய முடியும். இந்த ஜெல்லை ஒரே ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

hair

முடி வளர்ச்சியை உடனடியாக அதிகப்படுத்த நிறைய வழிமுறைகள் நமக்கு தெரிந்திருந்தாலும், அதன்மூலம் நமக்கு பலன் தெரிய சில நாட்கள் சில மாதங்கள் எடுக்கத்தான் செய்யவும். ஆனால் வெறும் 30 நாட்களில் நிச்சயமாக உங்களுடைய முடி வளர்ச்சியில் வித்தியாசத்தை காண இந்த ஒரு ஜெல் போதும். அந்த ஜெல் எப்படி தயார் செய்வது? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆங்கிலத்தில் Flaxseed என்று சொல்லப்படும் ஆளிவிதையை வைத்துதான் இந்த ஜெல்லை நாம் தயார் செய்யப் போகின்றோம். அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

இந்த ஆளி விதை பெரிய பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் இப்போது நமக்கு சுலபமாக கிடைக்கின்றது. அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து 50 கிராம் அளவு ஆளி விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் 2 சிறிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். இதை ஒரு கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள்.

ஆளி விதைகள் நன்றாக கொதிக்க தொடங்கும் போது நாம் ஊற்றியிருக்கும் தண்ணீர் ஜெல் பதத்திற்கு வரும். அதாவது முட்டையின் உள்ளே இருக்கும் வெள்ளை கரு எப்படி கொழகொழவென இருக்கும். அதே போல் தான் நமக்கு ஒரு பதம் கிடைக்க வேண்டும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள்.  இதற்கு மொத்தமாக பத்து நிமிடங்கள் வரை எடுக்கும்.

hair2

கடாயில் இருக்கும் ஆளி விதையை அப்படியே நன்றாக ஆற விட்டு விடவேண்டும். அதன்பின்பு ஒரு வெள்ளைத்துணியில் இந்த ஆளி விதைகளை வடிகட்டி எடுத்தால் ஆளிவிதை இருந்து நமக்கு கொஞ்சமாக ஜெல் கிடைத்திருக்கும். இந்த ஜெல்லை அப்படியே ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது.

- Advertisement -

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இதை நாம் தலைக்கு பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்துவது? ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நாம் தயார் செய்த ஆளி விதை ஜெல் 2 டேபிள்ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த ஜெல்லோட 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

flex-gel1

ஒரு காட்டன் பஞ்சில் இந்த கலவையை தொட்டு நம்முடைய தலை முழுவதும் மயிர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்ய வேண்டும். உங்களுடைய முடியின் வேர் பகுதிகளில் மண்டை ஓட்டில் படும்படி இந்த எண்ணெயை தலையில் தேய்க்க வேண்டும். தலை முடியை ஒவ்வொரு பகுதியாக பிரித்து உங்கள் தலைப் பகுதியின், மண்டைஓடு முழுவதும் இந்த எண்ணெய் படும்படி மசாஜ் செய்துவிடுங்கள். 10 நிமிடங்கள் மசாஜ் செய்தால் போதும். அதன் பின்பு 30 நிமிடங்கள் அப்படியே இந்த எண்ணெய் உங்களது தலையில் ஊறட்டும்.

hair1

பின்பு சீயக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்பு போட்டு தலையை சுத்தம் செய்து கொள்ளலாம். வாரத்தில் மூன்று நாட்கள் இப்படி செய்து வாருங்கள். நிச்சயமாக 30 நாட்களில் உங்களுடைய முடி வளர்ச்சி எப்படி இருக்கின்றது என்பதை நீங்களே சொல்வீர்கள். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் உங்கள் முடி பிரச்சனைக்கு தீர்வு காண இதை ட்ரை பண்ணி பாருங்க. செம்ம ரிசல்ட் கிடைக்கும்.