உங்களின் கால் பாதங்கள் இப்படி இருந்தால், கட்டாயம் லட்சுமிதேவி உங்கள் வீட்டில் தங்கவே மாட்டாள்!

foot5
- Advertisement -

நம்மில் பலபேர் நம்முடைய பாதங்களை ஒரு பொருட்டாகவே நினைப்பது கிடையாது. சொல்லப்போனால் லட்சுமி தேவி வாசம் செய்யும் இடமே நம்முடைய கால் பாதங்களில் தான் என்பது பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. தேவையற்ற பொருட்களை கைகளால் எடுக்காமல், கால்களால் எட்டி உதைப்பது, தள்ளி விடுவது, போன்ற பழக்கம் உங்களிடம் இருந்தால் இன்றோடு அதை நிறுத்தி விடுங்கள். அது உங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தேடித் தரக் கூடிய ஒரு பழக்கம்.

foot-wash

நம்முடைய முன்னோர்கள் கால்களைக் கழுவும் போது சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும். பின்னங்கால்களில் தண்ணீர் படாமல் இருக்கக் கூடாது. குதிகால்களில் அழுக்கு சேர்ந்து இருக்கக்கூடாது. என்பதை நமக்கு சொல்லித் தந்துள்ளார்கள். சரியாக பின்னங் கால்களை கழுவாமல் விட்டால், சனிபகவானால் பிரச்சனைகள் வரக்கூடும் என்ற ஒரு கருத்தும் உண்டு. இப்படியெல்லாம் சொல்லி நம்மை எதற்காக பயமுறுத்தி இருக்கிறார்கள், என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? குதிகால்களில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். அந்த இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

- Advertisement -

புதியதாக திருமணமாகி வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கும் பெண், முதலில் வலது காலை எடுத்து வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அதன்பின்பு ஒரு ‘படி நெல்லை’ வைத்து அந்த நெல்லினை, வீட்டிற்குள் வரக்கூடிய புதுப்பெண் வலது காலால் எட்டி உதைத்து விட்டு வர வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயமும் உண்டு. இது எதற்காக?

manamagal

நம்முடைய வலது கால் பாதத்தில் லகட்சுமி தேவியும், நாராயணரும் வாசம் செய்வதாக ஐதீகம். இடதுகாலில் லட்சுமி தேவியும் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். இதனால்தான் லக்ஷ்மி வாசம் செய்யும் வலது காலை முதலில் உள்ளே எடுத்து வைக்க வேண்டும் என்றும், மகாலட்சுமி வாசம் கொண்டிருக்கும் பாதத்தை, வீட்டின் தன தானியத்தை சேர்க்கும் படி, நெல்லின் மீது படவேண்டும் என்பதற்காக தான் இந்த ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

உங்களது கால் பாதங்களை அதிர்ந்து கீழே வைக்கும்போது மூதேவியின் அம்சம் வெளிப்படும். அதே பாதங்களை மெதுவான முறையில் தரையில் வைத்து நடக்கும் போது மகாலக்ஷ்மியின் அம்சம் வெளிப்படும் என்பதுதான் உண்மை.

foot

இதேபோல் நம்முடைய கால், தெரியாமல் யார் மீது பட்டுவிட்டால் கூட அவர்களை தொட்டு நம் கண்களில் கும்பிட்டுக் கொள்வோம். இது எதற்காக தெரியுமா? அப்படி அவர்களை தொட்டு கும்பிடாமல் விட்டு விட்டோமேயுனால், நம் பாதங்களில் வசிக்கும் மகாலட்சுமி, நம் கால் யார்மீது பட்டதோ அவர்களிடத்தில் சென்றுவிடுவார்கள். ‘உங்களது கால் பாதங்களில் வசிக்கும் மகாலட்சுமியை நீங்கள் அலட்சியப்படுத்துவதுதன் பொருள் இதில் அமைந்துள்ளது’.

- Advertisement -

கோமாதாவாக வழிபடும் பசுவின் பாதங்களில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. இதனால்தான் புதியதாக வீடு கட்டிய பின்பு, முதலில் பசுவை வீட்டிற்குள் வரவைக்கிறார்கள்.

gomadha 2

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்றாலும், நம்முடைய தலையை கொண்டுபோய் பாதத்தில் தான் வைக்கின்றோம். பாதத்திற்கு அத்தனை மரியாதை உண்டு என்பதை நாம் இன்றுவரை சிந்தித்ததே இல்லை. சில ரிஷிகளின் பாதங்களை, சாதாரண மனிதர்கள் தொடுவதற்கு அனுமதி செய்ய மாட்டார்கள். காரணம் அவர்களது பாதங்களில் இருக்கும் அதீத சக்தியானது அடுத்தவர்களுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான்.

குறிப்பாக குதிகாலில் யோகலட்சுமி  வாசம் செய்வதாகவும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. முடிந்தவரை உங்களது கால் பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால்தான் திருஷ்டி சுத்தி போட்டதை தாண்ட கூடாது. எந்த ஒரு பொருட்கள் நடுவில் இருக்கும் போதும், அதை தாண்டி செல்ல கூடாது. கெட்டதை மிதிக்கக் கூடாது. என்று சொல்லுவார்கள். ஏனென்றால் காலில் இருக்கும் லக்ஷ்மி தேவியானவள் நம்மை விட்டு விலகி சென்று விடுவாள் என்பதற்காகத்தான்.

foot1

முடிந்த வரை உங்களது பாதங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதை வேகமாக தரையில் வைத்து நடப்பது, கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பது, ஒரு கால் மீது மற்றொரு காலை போட்டு தேய்த்துக் கொண்டே இருப்பது, இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. இந்த செயல்களில் எல்லாம் ஈடுபட்டால் கட்டாயமாக உங்களது பாதங்களில் லட்சுமி தேவி வாசம் செய்ய மாட்டாள். தரித்திரம் உண்டாகும் என்பது தான் உண்மை.

இதையும் படிக்கலாமே
பெண்கள் காலையில் சமையலறைக்கு சென்றதும் எதை முதலில் சமைக்க வேண்டும்? சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Foot astrology in Tamil. Padham in Tamil. Foot astrology. Patham in Tamil. Patham. Foot. Foot in Tamil.

- Advertisement -