இந்த சின்ன முள்ளு கரண்டிக்குள் இத்தனை விஷயம் அடங்கி உள்ளதா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போச்சே!

fork

ஆசைக்காக நம்முடைய வீட்டிலும் Fork Spoon என்று சொல்லப்படும் இந்த முள்ளு கரண்டியை வாங்கி வைத்திருப்போம். பெரும்பாலும் இதை நாம் எதற்கும் பயன்படுத்த மாட்டோம். நூடில்ஸ் சாப்பிட மட்டும்தான் நமக்கு தெரியும் அல்லவா. ஆனால் இந்த முள்ளு கரண்டியை வைத்து சமையலறையில் பல உபயோகமான விஷயங்களையும் செய்ய முடியுமே. அதில் சில டிப்ஸ் தான் இன்று நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். பொதுவாகவே நம் எல்லோரது வீட்டிலும் சாதாரணமாக முடி சீவும் சாதாரண சீப்பை தவிர்த்து, பல டிசைன்களில் சீப்புகளை பயன்படுத்துவோம். உருண்டை வடிவமைப்பு, வட்டவடிவ சீப்பு என்று நிறைய சீப்புகள் சிலபேர் வீடுகளில் இருக்கும்.

comb

ஆனால், இப்படிப்பட்ட பலவகையான சீப்புகளை சுத்தம் செய்வது கொஞ்சம் கஷ்டமான விஷயம். இந்த ஒரு முள்ளு கரண்டி இருந்தால் போதும். உங்களுடைய வீட்டில் இருக்கும் விதவிதமான சீப்புகளில் உள்ள முடியை சுலபமாக நீக்கிவிடலாம். சீப்புகளின் பல் இடுக்குகளில், இந்த முள்ளு கரண்டியை விட்டு, அதில் சிக்கி இருக்கும் முடியை எடுத்து பாருங்கள். உங்களுக்கே தெரியும் ரிசல்ட். சீப்பை சுத்தம் செய்வதற்காக தனியாக ஒரு முறை கரண்டியை வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக முழுசாக இருக்கக்கூடிய பெரிய பெரிய பூண்டு பல்லுக்கு நடுவே இந்த முள்ளு கரண்டியை வைத்து, குத்தி லேசாக அசைத்து எடுத்தீர்கள் என்றால், தோல் இல்லாமல் பூண்டு உங்களுக்கு தனியாக கிடைத்துவிடும். சுலபமாக உரித்த பூண்டை ஒரு தட்டில் வைத்து இந்த முள்ளுக் கரண்டியாலேயே நசிக்கியும் கொள்ளலாம். இடித்த பூண்டு போலவே, பூண்டு விழுது நமக்கு கிடைக்கும்.

fork2

சில சமையல் குறிப்புகளுக்கு பூண்டு துருவல், இஞ்சித் துருவல் தேவை என்று சொல்லுவார்கள். இந்த இஞ்சி பூண்டை துருவும் போது கையை சீவிக் கொள்வோம். தோல் நீக்கி வைத்திருக்கும் இஞ்சியையும் பூண்டையும் எடுத்து ஒவ்வொன்றாக முள்ளு கரண்டியில் குத்தி, அதன் பின்பு துருவினால் கைகள் அடி படாமல் இருக்கும். சுலபமாகவும் துருவல் நமக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

அடுத்தபடியாக, நம்முடைய வீட்டில் கலவை சாதம் செய்வோம். சிலசமயம் அந்த கலவை சாதம் செய்யும்போது கரண்டியை விட்டுக் கலந்து விட்டால், அரிசி உடையும். கலவை சாதம் உதிரி உதிரியாக வராது. கரண்டிக்கு பதிலாக இந்த முள்ளு கரண்டியைப் பயன்படுத்தி கலந்து பாருங்கள். அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உடையாமல் பக்குவமாக கிளறிக் கொள்ளலாம்.

fork1

இந்த முள்ளு கரண்டியின் மேல் ஒரு பழைய காட்டன் துணியை போட்டு இறுக்கமான ரப்பர் பேன்டை மாட்டிக் கொள்ளுங்கள். வீட்டில் ஜன்னல் பகுதி, ஃப்ரிட்ஜில் டோர் பகுதியில் இருக்கும் ரப்பர், சமையல் மேடை கார்னர், என்று கை வைத்து சுத்தம் செய்ய முடியாத பகுதிகளில், இண்டு இடுக்குகளில் இதை வைத்து துடைத்தால் அந்த இடம் சுலபமாக சுத்தமாகிவிடும்.

fork3

சுடு தண்ணீரில் புளியை ஊற போட்டு விட்டு, கையை வைக்க முடியாது. இந்த முள் கரண்டியை வைத்து புளியை நன்றாக அழுத்தி கரைத்தால், பளி சீக்கிரமே சுடுதண்ணீரில் ஊறிவிடும். சுலபமாகவும் கரைக்க முடியும்.

தோசைக்கல்லில் மீன் வருவல் வாழைக்காய் வறுவல் அல்லது கட்லெட் போன்ற பொருட்களை திருப்பி போடுவதற்கு இந்த முள்ளு கரண்டியை பயன்படுத்தினால் சுலபமாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். வேலைகள் சுலபமாகும்.