11 வாரம் வெள்ளிக் கிழமைகளில், இந்த பூஜையை தொடர்ந்து மகாலட்சுமிக்கு செய்துவந்தால் பண கஷ்டம் தீரும்.

mahalashmi1
- Advertisement -

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை அறையில் தீபம் ஏற்றி மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்யாதவர்கள் கூட, இந்த வெள்ளிக்கிழமை தினத்தில் கட்டாயம் வீட்டில் தீபம் ஏற்றி, வழிபாடு செய்வார்கள். குறிப்பாக மகாலட்சுமிக்கு வெள்ளிக் கிழமைகளில் எந்த முறைப்படி வழிபாடு செய்தால், வீட்டில் இருக்கக் கூடிய பண கஷ்டம் தீரும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முடிந்தவரை, வெள்ளிக்கிழமையில் வெற்றிலை, பாக்கு, பூ, பழம் சேர்த்த தாம்பூலம் வைத்து நெய் ஊற்றி, தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். தினம் தோறும் நெய் தீபம் ஏற்ற முடியாதவர்கள் கூட வெள்ளிக்கிழமை, மாலை 6 மணிக்கு மட்டுமாவது நெய்தீபம் ஏற்றினால் அது நம் வீட்டிற்கு பல நன்மைகளை தரும்.

- Advertisement -

செல்வ வளத்தை ஈர்க்கும் நெல்லி மரம் எல்லோரது வீட்டிலும் இருப்பது நன்மை. பெரும்பாலும் இது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். உங்களுடைய வீட்டில் நெல்லி மரம் இருந்தால், அந்த மரத்திலிருந்து முந்தைய நாளே, இரண்டு நெல்லிக்காய்களை பறித்து, நம் வீட்டில் வைத்துக் கொண்டு, அந்த இரண்டு நெல்லிக்காயை மகாலட்சுமிக்கு நைவேத்தியமாக படைத்து, வழிபாடு செய்துவிட்டு நெல்லிக்காய்களை யாருக்கேனும் தானமாகக் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

nelli-maram1

நெல்லிக்காய்களை யாரும் தானம் வாங்க மாட்டார்களே, என்ற சூழ்நிலை இருந்தால், தேங்காய் சாதம், மாங்காய் சாதம் செய்வது போல, நெல்லிக்காய்களை துருவி அதில், பச்சரிசியில் பிரசாதம் செய்து, மகாலட்சுமிக்கு நைவேத்தியமாக படைத்து விட்டு, உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கோ அல்லது ஏழை எளியவர்களுக்கு தானமாக கொடுத்தால், நம் வீட்டில் செல்வளம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆக மொத்தத்தில் வெள்ளிக்கிழமைகளில் நெல்லிக்காய் சேர்த்து சமைத்த பொருட்களை தானமாக கொடுப்பதன் மூலம் உங்கள் இடத்தில் உள்ள லட்சுமி வெளியே செல்ல மாட்டாள். லட்சுமி உங்கள் வீட்டில் நிரந்தரமாக குடி கொள்வாள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

nelliaki-sadam

முடிந்தால் வெள்ளிக்கிழமைகளில் 11 நெல்லிக்கனிகளை வாங்கி ஊசி, நூலில் கோர்த்து, மகாலட்சுமி சன்னிதானம் இருக்கும் கோவில்களுக்கு கொண்டு சென்று, நெல்லிக்காய் மாலை அணிவிப்பது மேலும் நல்ல பலனை கொடுக்கும். இதோடு மட்டுமில்லாமல், 11 பௌர்ணமி தினத்தில், மகாலட்சுமிக்கு, தாமரைப் பூ மாலையை அணிவித்து வழிபாடு செய்யலாம். பல நாட்களாக தீராத பண கஷ்டமும், இந்த பௌர்ணமி வழிபாட்டின் மூலம் உங்களுக்கு ஒரு முடிவுக்கு வரும்.

- Advertisement -

நம்முடைய வீட்டில் மகாலட்சுமி திருவுருவ பலத்தோடு சேர்த்து, சுவர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து, தினம் தோறும் தீபம் ஏற்றி, நமக்கு இருக்கக்கூடிய பண பிரச்சனை, கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டுதல் வைத்தாலும், நமக்கு பல நன்மைகள் ஏற்படும். சுவர்ண பைரவரை, வீட்டில் வைத்து வழிபட்டால், குபேரன் ஆசீர்வாதத்தை நேரடியாக நம்மால் பெற முடியும். வீட்டில் ஸ்வர்ண பைரவரை வைத்து வழிபடலாமா, என்ற சந்தேகம் தேவையில்லை. தனியாக வீட்டில் பூஜை அறை இல்லாதவர்கள் கூட, தாராளமாக சொர்ண பைரவரை வீட்டில் வைத்து வழிபடலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
விநாயகப் பெருமானை ஒருமுறை இப்படி வழிபாடு செய்தால் போதும். தடைகள் என்ற வார்த்தையே உங்கள் வாழ்க்கையில் இருக்காது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -