வாரத்தில் இருக்கும் ஏழு கிழமைகளில் வெள்ளிக்கிழமை மிகவும் சக்தி வாய்ந்த கிழமையாக கருதப்படுகிறது. அம்பாள் அவதரித்த இந்த வெள்ளிக்கிழமை, உலக மக்கள் அனைவருக்கும் நேர்மறையான எண்ணங்களை கொடுக்கும். இந்தப் பிரபஞ்சமே அந்த கிழமையில் சக்தியுடன் காணப்படும். அதனால் தான் வெள்ளிக்கிழமை தோறும் வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றோம். இந்த வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
குடும்பத்தில் வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தை பிறந்தால், மகாலட்சுமியே பிறந்திருக்கிறாள் என்று கொண்டாடுவோம். சனிக்கிழமையில் ஆண் குழந்தை பிறந்தாலும் மகா விஷ்ணு பகவானே பிறந்திருப்பதாக நாம் கொண்டாடுகிறோம். ஆனால் வெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று எந்த குழந்தை பிறந்தாலும் பாகுபாடில்லாமல் அது அதிர்ஷ்ட குழந்தையாகவே கருதப்படுகிறது என்பது தான் உண்மை.
வெள்ளிக்கிழமைகளில் பிறந்தவர்கள் எல்லோருமே மனதால் மிகவும் மென்மையானவர்களாக இருப்பார்கள். வெளியே கரடு முரடாக காட்டிக் கொண்டாலும், உள்ளே பலா சுளை போல ரொம்பவும் இனிமையானவர்கள். லட்சுமியின் ஸ்ரூபமாக இருக்கக்கூடிய இவர்கள் ராசி மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் செய்ய நினைக்கும் காரியம் வெற்றியில் முடியும் ஆனால் செய்வதென்னவோ வேறொன்றாக இருந்தால் தடைகள் பல வரும்.
நீங்கள் முதலில் என்ன நினைக்கிறீர்களோ, உங்களுக்கு சரி என்று ஆழ் மனதிற்குள் ஒன்று தோன்றும் அல்லவா? அதை எந்த சந்தேகமும் இல்லாமல் தைரியமாக துணிச்சலுடன் செய்யுங்கள். அப்பொழுது தான் வெற்றி உங்களைத் தேடி வரும். சிறிதளவு நீங்கள் அதிலிருந்து விலகி முடிவெடுத்தாலும், உங்களுடைய முடிவுகள் அனைத்தும் தவறாக மாறிவிடுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் மகாலட்சுமியின் அம்சம் உடையவர்கள், எனவே இவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்கு சென்று சர்க்கரை பொங்கலை நைவேத்தியம் படைத்து பக்தர்களுக்கு கொடுத்து வருவது விசேஷமான பலன்களை கொடுக்கவல்லது. வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை, தொடர் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது, வெற்றி கிடைக்கவில்லை என்பவர்கள் ஒவ்வொரு வெள்ளி அன்றும் நைவேத்தியமாக இனிப்பு மிகுந்த சர்க்கரை பொங்கலை தயார் செய்து, அம்பாளுக்கு படைத்து வழிபட்டு, பின்னர் தானம் செய்யுங்கள். மேலும் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். உங்களின் இந்த நிலை நிச்சயம் மாறி விடும்.
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் ஏழ்மை நிலையில் இருந்தாலும், ஒரு வயதிற்கு மேலே அவர்கள் நல்ல நிலைக்கு உழைப்பால் வந்து விடுவார்கள். இவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் தட்டிப் பறிப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கும். இந்த எல்லா தடைகளையும் தாண்டி சிறு வாய்ப்பு கிடைத்தாலும் அதை பற்றி கொண்டு சாதித்து காட்டுவார்கள். சாதனை புரிய பிறந்திருக்கும் நீங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல!
இதையும் படிக்கலாமே:
புதினா பொங்கல் செய்முறை
வெள்ளிக்கிழமையில் பிறந்த நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருந்தால், உடனே அதிலிருந்து திரும்பி விடுங்கள். நீங்கள் தெய்வசக்தி பொருந்தியவர்கள். உங்களை தீய சக்தி அடிக்கடி தன் வழி ஈர்க்க முயற்சி செய்து கொண்டே இருக்கும். நீங்கள் அதில் எல்லாம் சிக்கி விடாமல், உங்களுடைய தெய்வ சக்தியை உணர்ந்து அதிலிருந்து மீண்டு வந்து வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டும். உங்களால் மற்ற உயிர்களும், மற்ற மனிதர்களும் பலனைடையும் படி உங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இறைவன் உங்களுடன் எப்பொழுதும் துணை இருப்பார்.