வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் இவரை மட்டும் வழிபட்டால் நாமும் செல்வந்தராகி விடலாமா?

lakshmi-sukran
- Advertisement -

வெள்ளிக்கிழமை என்பது தெய்வ வழிபாட்டிற்கு உரிய நாளாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக மகாலட்சுமியை வழிபடுவதற்கு சிறப்பான கிழமையாக கருதப்படுகிறது. நமக்கு செல்வத்தை வாரி வழங்கக்கூடிய மகாலட்சுமியும், குபேரனும் நம்முடைய பூர்வ ஜன்ம கர்ம வினைக்கு ஏற்ப பலாபலன்களை கொடுக்கிறார்கள். அதை அனுபவிக்க செய்யும் பொறுப்பு சுக்கிர பகவான் பார்த்துக் கொள்கிறார். ஒருவர் செல்வந்தராக இருப்பதற்கு ஜாதகத்தில் சுக்கிரன் உடைய அருள் கட்டாயம் இருக்க வேண்டும். சுக்கிரனுடைய அருள்பெற வெள்ளிக்கிழமையில் சுக்ர ஹோரை வரும் நேரத்தில் இவ்வாறு வழிபாடு செய்தால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியும். அதை எப்படி செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள இப்பதிவை தொடர்ந்து படியுங்கள்.

sukran

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றால் உடல் ரீதியான, ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் ஏற்படும். சொத்து, சுகங்கள் எவ்வளவு இருந்தாலும் அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் செய்துவிடும். பெரிய பெரிய பணக்காரர்களை எடுத்துக் கொண்டால் அவர்களிடம் எவ்வளவு காசு கொட்டி கிடந்தாலும், சுக்கிர தசை இல்லை என்றால் அவ்வளவு பணமும் வீண் விரயமாக தான் போகும். குறிப்பாக மருத்துவ செலவுகள் செய்தே சொத்துக்கள் அழியும் நிலை வரும்.

- Advertisement -

இதற்கு சுக்கிர பகவான் உடைய வழிபாடு நல்ல ஒரு பலனை கொடுக்கும். சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமை என்பது உரிய தினமாகும். சுக்கிரன் அருள் பெற வீட்டில் வெள்ளிப் பொருட்களை பயன்படுத்துவது நலமாகும். வெள்ளியில் சுக்கிரன் வசிப்பதாக ஐதீகம் உள்ளது. வெள்ளி பொருட்கள் கொண்டு பூஜை செய்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

sukran

சுக்கிர வழிபாடு செய்ய நினைப்பவர்கள் காலை 6 மணி முதல் 7 வரையிலான காலம் சுக்கிர ஹோரை ஆகும். அதனை தவற விட்டால் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சுக்கிர ஹோரை நிகழ்கின்றது. அதையும் தவறவிட்டால் இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலான சுக்ர ஹோரை நேரத்தில் வழிபாடுகள் செய்து பயன்பெறலாம். இவற்றில் காலை ஆறு முதல் ஏழு மணி வரையிலான முதல் சுக்கிர ஹோரையில் அன்று சுக்ர வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

காலை முதல் மாலை வரை உபவாசமிருந்து சுக்கிர பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, கல்கண்டு சேர்த்த சர்க்கரை பொங்கலை நைவேத்யம் படைத்து, வெள்ளை நிற பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். சுக்கிர தசை நடப்பவர்களும், சுக்கிரன் நீச்சம் பெற்ற ஜாதகர்களும் இந்த வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும். சுக்கிர தசை நடக்கும் பொழுது சுக்ர வழிபாடு செய்ய வருகின்ற வருமானத்தை சுகமான வாழ்க்கையை வாழ்வதற்கு உரிய வகையில் பயணிக்க செய்யும். வீடு, நிலம் வாங்குவது, ஆடம்பர பொருட்கள், சொத்துக்கள் போன்றவற்றை வாங்க வைக்கும்.

sukran

அதுவே சுக்கிரன் நீசம் பெற்ற காலத்தில் இந்த வழிபாடு செய்பவர்களுக்கு வீண் விரயங்கள் இல்லாமல் ஓரளவிற்கு வறுமையிலிருந்து பிழைக்கச் செய்யும். வெள்ளிக்கிழமையில் நவகிரக கோவிலுக்கு சென்று சுக்கிர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யலாம். வெள்ளை நிற நைவேத்தியங்கள் தயார் செய்து கோவிலில் வரும் பக்தர்களுக்கு தானம் செய்யலாம். சுக்கிரனுக்குரிய காயத்ரி மந்திரம் இதோ:

sukran

சுக்கிரன் காயத்ரி மந்திரம்:
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயத்!

- Advertisement -