எல்லா செல்வ செழிப்பும் கொடுக்கக்கூடிய இந்த வெள்ளிக்கிழமை அம்பிகைக்கு உகந்தது. மகாலட்சுமி வழிபாடு செய்யவும் உரிய நாளாக அந்நாள் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெறவும், எல்லாம் நேர்மறையாக நடக்கவும் வெள்ளிக்கிழமையில் ஒரு சில பொருட்களை தெரியாமலும் நாம் வாங்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அப்படி வெள்ளிக்கிழமையில் வாங்க கூடாத பொருட்கள் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து இப்பதிவில் காண்போம் வாருங்கள்.
வெள்ளிக்கிழமையில் நல்ல ஹோரை பார்த்து அல்லது குளிகை நேரத்தில் தங்க நகைகளையும், மற்ற நவரத்தினங்களையும் வாங்க மென்மேலும் அது சேரும் என்பது நம்பிக்கை. அது போல வெள்ளிக்கிழமையில் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. கடன் மட்டுமல்ல, பணத்தை பெரும்பாலும் வீண் விரயம் செய்யவே கூடாது. எந்த ஒரு பொருளையும் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும், கடனாக பொருட்களை வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் அதை எதிர்மறையான பலன்களை கொடுக்கும். மகாலட்சுமிக்கு இந்த செயல்கள் எல்லாம் பிடிப்பதில்லை.
வெள்ளிக்கிழமையில் துளசி பூஜை மகாலட்சுமிக்கு செய்ய, அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. ஆனால் துளசி இலைகளை வெள்ளிக்கிழமையில் பறிக்கக் கூடாது. முந்தைய நாளே பறித்து வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமையில் துளசி இலைகள் அல்லது மற்ற செடி வகைகளை துன்பப்படுத்தினால் எதிர்மறை பலன் தரும். வெள்ளிக்கிழமையில் லெதர் அதாவது தோல் பொருட்களை தெரியாமலும் நீங்கள் வாங்கக்கூடாது. தோலாலான பைகள், செருப்புகள், மற்ற தோல் சார்ந்த பொருட்கள் எதையும் வெள்ளிக்கிழமையில் வாங்க கூடாது. வெள்ளிக்கிழமை சாத்வீதமான குணம் கொண்டுள்ளவர்களுக்கு பலன் தரக்கூடியது. அந்த நாளில் தோல் பொருட்களை வாங்கினால் எதிர்மறை பலன் தருமாம்.
வெள்ளிக்கிழமையில் இரும்பு சார்ந்த பொருட்களை வாங்கக்கூடாது. இது சனிபகவானுக்கு உகந்தது என்பதால் எதிர்மறையான பலன்களை அன்றைய தினம் வாங்குவதன் மூலம் உங்களுக்கு கொடுக்க வாய்ப்புகள் உண்டு. கல் உப்பு அன்றைய தினம் வாங்குவது நற்பலன்களை கொடுக்கும். அதே போல எண்ணெய், புளி, பாகற்காய் போன்ற கசப்பு நிறைந்த பொருட்களை வாங்குவதோ அல்லது வீட்டில் சமைக்கவோ கூடாது. துவரம் பருப்பு, நெய், பச்சரிசி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
மேலும் வெள்ளிக்கிழமையில் சாத்வீகமாக அமைதியாக இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு மௌன விரதம் கூட நீங்கள் மேற்கொள்ளலாம். எந்த அளவிற்கு அமைதியாக அந்த நாளை நீங்கள் பக்தியோடு கடந்து போகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கு செல்வமும் செழிக்கும், எல்லாமே நேர்மறையாகவும் நடக்கும். எதிர்மறையான சிந்தனைகள் கூட உங்களுக்கு வராமல் அது தடுக்கும். வெள்ளிக்கிழமை அன்று அசுப சொற்களை உபயோகிப்பது, கத்துவது, அழுவது, மற்றவர்களை ஏளனமாக பார்ப்பது, அவமானப்படுத்துவது, புறம் பேசுவது, காட்டிக் கொடுப்பது, சர்ச்சைகளில் ஈடுபடுவது, வாக்குவாதங்களில் ஈடுபடுவது, வம்பு தும்புக்கு போவது, வெறுப்பை உமிழ்வது போன்ற எதிர்மறையான எந்த விஷயத்தையும் அன்றைய நாளில் செய்யக்கூடாது. அப்படி செய்தால், உங்களுக்கு நடக்க கூடியவையும் எதிர்மறையான பலன்களை தான் கொடுக்குமாம்.
இதையும் படிக்கலாமே:
மதிப்பும் மரியாதையும் உயர சொல்ல வேண்டிய மந்திரம்
இந்த பிரபஞ்சத்தின் சக்தியையும், அன்னையின் அருளையும் கொண்டுள்ளது வெள்ளிக்கிழமை! அதனால் தான் வெள்ளிக்கிழமையில் தவறாது எல்லோருடைய வீடுகளிலும் விளக்கு ஏற்றி பூஜைகள் செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர். துளசி இலைகளைக் கொண்டு 108 முறை மகாலட்சுமியை வெள்ளிக்கிழமையில் அர்ச்சனை செய்து, “ஓம் ஸ்ரீ மகாலட்சுமியை நம” என்னும் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரித்து வர உங்களுக்கு தொடர்ந்து நடக்கக்கூடிய எதிர்மறையான விஷயங்கள் மறைந்து, நேர்மறையான விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். கெட்ட சக்திகள் உங்களிடமிருந்து விலகி, நல்ல சக்திகளுக்கு செவி சாய்ப்பீர்கள். இதனால் உங்களுடைய எண்ணங்களும் தீய வழியில் இருந்து, நல்ல வழிக்கு செல்ல ஆரம்பிக்கும்.