ஃப்ரிட்ஜில் இந்த பொருட்களை எந்த பொருளில் போட்டு வைத்தால் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

fridge0
- Advertisement -

ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தனித்தன்மையான குணத்துடன் இருக்கும். வெப்பநிலை, குளிர் நிலைக்கு ஏற்ப அதன் தன்மையில் மாற்றங்கள் ஏற்படும். ஒரு சில பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஆனால் எந்த பொருளை எப்படி வைப்பது? என்பதில் பலருக்கும் குழப்பம் எப்போதும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான கேள்வியும், அதன் பதில்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

fridge

குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் ஸ்விட்ச் பட்டன் காலத்திற்கு ஏற்ப மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். வெயில் காலத்தில் அதில் கொடுக்கப்பட்டுள்ள படி அதற்கு ஏற்ப சரிசெய்து கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் அதே போல மாற்றி வைக்க வேண்டும். ஒரே நிலையில் இருக்கும் பொழுது காய்கறிகள், பழங்கள் போன்றவை அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதில் தடை ஏற்படும்.

- Advertisement -

வாரம் ஒரு முறையாவது சுத்தமான துணியைக் கொண்டு ஃப்ரிட்ஜை துடைத்து வைக்க வேண்டும். எந்த ஒரு பொருளையும் திறந்த நிலையில் வைக்கவே கூடாது. ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஆங்காங்கே வைத்துவிட்டால் ஃப்ரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும். இப்படி சிறு சிறு விஷயங்களை கையாள்வதன் மூலம் நீண்ட நாட்கள் காய்கறி, பழங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

tomato-in-fridge

தக்காளி நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்க என்ன செய்யலாம்?
தக்காளிகளை தனித்தனியாக முதலில் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். காயாக இருக்கும் தக்காளிகளை தனியாகவும், அடுத்தடுத்த நிலைகளில் இருக்கும் தக்காளிகளை தனித்தனியாக மூன்று நிலைகளில் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில்லாமல் நன்கு துடைத்து பின்னர் அதை காற்றுப் புகாத கண்டைனர் பாக்ஸில் பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பர் விரித்து அதன் மேல் முதல்நிலை தக்காளிகளை முதலில் போட்டு பின்னர் அதன் மேல் மீண்டும் பேப்பர் விரித்து அடுத்தடுத்த நிலைகளில் இருக்கும் தக்காளிகளை இது போல் அடுக்கி வைத்தால் ரொம்ப நாட்களுக்கு புத்தம் புதிதாக அப்படியே இருக்கும்.

- Advertisement -

பச்சை மிளகாய்களை எப்படி வைப்பது?
பச்சை மிளகாய்களை கண்டிப்பாக காம்புகளை முழுமையாக நீக்கிவிட்டு துடைத்து பின்னர் ஏர் டைட் பாக்ஸில் பேப்பர் விரித்து அதற்குள் போட்டு வைத்தால் போதும்! நிறைய நாட்களுக்கு அப்படியே இருக்கும்.

chilles-in-fridge

கறிவேப்பிலை, புதினா, மல்லி போன்றவற்றை எப்படி வைப்பது?
கறிவேப்பிலை, மல்லி, புதினா இந்த மூன்றையும் இலைகளை மட்டும் உருவி கழுவி காய வைத்து அதன் பின்னர் ஏர் டைட் கண்டைனைர் அல்லது பாலித்தீன் பையில் டிஷ்யூ பேப்பரை விரித்து அதற்குள் போட்டு வைத்தால் போதும், நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும். புதினா மற்றும் குடை மிளகாய்களை நீண்ட நாட்கள் பாதுகாக்க துணிக்கடைகளில் கொடுக்கும் பிரவுன் கலர் பேப்பர் கவர் கிடைத்தால் அதில் போட்டு வைத்தால் போதும், நீண்ட நாட்களுக்கு அழுகிப் போகாமல் அப்படியே இருக்கும்.

- Advertisement -

kariveppilai

கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், அவரைக்காய் போன்ற சீக்கிரம் அழுகும் காய்கறி வகைகளை துணி பையில் போட்டு வைப்பது மிகவும் நல்லது. எந்த ஒரு காய்கறியும் முதலில் துடைத்து விட்டு பின்னர் அதற்குரிய பைகளில் போட வேண்டும் என்பதை கடைபிடியுங்கள். துணிப்பைகளில் போடும் பொழுது தண்ணீர் உறிஞ்சப்பட்டு காய்கறிகள் பாதுகாப்பாக இருக்கும்.

ginger 3-compressed

சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, முருங்கைக்காய் ஆகியவற்றை நேரம் கிடைக்கும் பொழுது தோலுரித்து தேவையான அளவிற்கு வெட்டி ஈரமில்லாமல் ஒரு டப்பாவில் டிஷ்யூ பேப்பர் அல்லது கேலண்டர் பேப்பர் போன்றவற்றை விரித்து போட்டு வைத்தால் போதும்! தேவையான பொழுது சுலபமாக எடுத்து சமைத்துக் கொள்ளலாம். நீண்ட நாட்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

milk-tray

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் அத்தனையும் ஃப்ரீஸருக்கு கீழே இருக்கும் ட்ரேயில் அடுக்கி வைக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட், ரசப்பொடி போன்றவற்றை அரைத்தாலும் அங்கே வைக்கவும். மேலும் உடைத்த தேங்காய் மூடிகளை டைரி ட்ரேயில் கவிழ்த்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். வாசனையுள்ள பூக்களை பாலிதீன் பையில் போட்டு காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைக்க வேண்டும். அப்படியே வைத்தால் ஃப்ரிட்ஜில் இருக்கும் மற்ற பொருட்களிலும் இந்த வாசனை அப்படியே தொற்றிக் கொண்டு வீணாகப் போய்விடும்.

- Advertisement -