உங்கள் பீரோ லாக்கரில் இந்த சாமி படத்தை மட்டும் வைத்தால் இன்னும் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும்.

gajalakshmi-bero
- Advertisement -

வீட்டில் பீரோ லாக்கர் முக்கியமான பொருட்கள் மற்றும் நகைகள், பத்திரங்கள், பணம் போன்றவற்றை எடுத்து வைக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. கிட்டத்தட்ட செல்வம் எனும் சொத்து இந்த லாக்கரில் தான் நாம் பத்திரமாக வைக்கிறோம். இந்த இடத்தில் என்ன மாதிரியான சாமி படம் வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும்? அதிர்ஷ்டம் மேலும் மேலும் பெருகும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

bero

பெரும்பாலும் பீரோ லாக்கரில் விசேஷ பூஜைகள் செய்யப்படும் பொழுது கொடுக்கப்படும் சில விசேஷ ஆன்மீக பொருட்களையும், யந்திரங்களையும் வைப்பது வழக்கம். லக்ஷ்மி குபேர எந்திரம், மகாலட்சுமி யந்திரம் போன்றவற்றை வைப்பதால் மேலும் தங்கு தடையின்றி பணம் பெருகும் என்று கூறப்படுகிறது. பீரோ லாக்கர் உள்ளே மகாலட்சுமி படம் வைப்பது பெரும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். ஆனால் அந்த மகாலட்சுமி படம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? இங்கு தான் சூட்சமம் இருக்கிறது.

- Advertisement -

மகாலட்சுமி படத்தை வகை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக ரீதியாக மகாலட்சுமி படத்தை வீட்டின் தலை வாசல் பகுதிக்கு மேலே உட்பக்கமாக உள்ளே வருமாறு வைப்பது லட்சுமி தேவியை உள்ளே வரவழைக்க சிறந்த முறையாக பார்க்கப்படுகிறது. இது போல பீரோவில் பணம் கொழிக்கும் இடத்தில் இந்த மகாலட்சுமி படத்தை வைப்பதால் அதிர்ஷ்டம் மென்மேலும் பெருகும். எங்கள் வீட்டு பீரோவில் பணமே இல்லையே! என்னங்க செய்வது? என்று புலம்ப வேண்டாம். பணம் இல்லை என்றாலும் பீரோவின் லாக்கர் ஆனது மகாலட்சுமி தங்கும் இடமாக கருதப்படுவதால் அந்த இடத்தில் மகாலட்சுமி படத்தை நீங்கள் வைத்திருப்பது வருமானம் பெருக வழி வகுக்கும்.

gajalakshmi

மகாலட்சுமியில் ‘கஜலக்ஷ்மி’ என்கிற தேவியின் படத்தை வைப்பது தான் யோகத்தை தரும். கஜலக்ஷ்மி ஆனவள் யானைகளை கொண்டிருப்பவள். கஜலட்சுமிக்கு இரண்டு புறமும் யானைகள் தண்ணீர் ஊற்றுவது போல அமைக்கப்பட்டிருக்கும். கஜலக்ஷ்மி தேவியார் சிவப்பு அல்லது பச்சை வஸ்திரம் உடுத்திக் கொண்டிருப்பாள். இந்த படத்தை வைப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும். கஜலக்ஷ்மி யந்திரத்தையும் வைக்கலாம்.

- Advertisement -

இன்று எல்லோருக்கும் இருக்கும் பிரதான பிரச்சினை வருமான குறைபாடு. எந்த தொழிலிலும் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்கிற போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. ஏதோ வருகிறது இருப்பதை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தான் ஒவ்வொருவரும் தங்களுடைய காலத்தை கடத்திக் கொண்டு இருக்கிறோம். உங்களின் வருமானம் பெருகவும், தொழில் வியாபாரம் சிறக்கவும் கஜலட்சுமி தேவியின் அருள் வேண்டும்.

mahalakshmi

பீரோ லாக்கரில் இந்த படத்தை சிறிய அளவிலாவது வாங்கி வையுங்கள். வடக்கு திசையை பார்த்தவாறு வையுங்கள். அந்த படத்திற்கு முன்பாக ஒரு சிறிய கண்ணாடி பவுலில் நான்கைந்து பச்சை கற்பூரம் வில்லைகளை போட்டு வையுங்கள். பச்சை கற்பூரம் பணத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. அன்றாட செலவிற்காக நீங்கள் எடுக்கும் தொகையை இந்த பவுலில் போட்டு வையுங்கள். இதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து தினசரி செலவுகளைச் செய்யுங்கள். பூஜை செய்யும் பொழுது இந்த படத்திற்கும் தீப, தூபம் காண்பித்து வழிபடுங்கள். வாரம் ஒருமுறை படத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு சிறிய ரோஜா பூவை வையுங்கள். சிகப்பு மலர்கள் வைப்பது கஜலட்சுமிக்கு மிகவும் பிடித்தமானது. சிகப்பு வர்ண மலர்களை அர்ச்சனை செய்யுங்கள். இதனால் நீங்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே
நோய் நொடி இன்றி செல்வ செழிப்போடு வாழ இந்த நாளில் முருகனை இப்படி மட்டும் வழிபடுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -