நவகிரக தோஷங்கள் நீக்கும் விநாயகர் ஸ்லோகம்

Vinayagar-1

நாம் செய்யும் செயல்களுக்காக நமக்கு ஏற்படும் நன்மை மற்றும் தீமையான பலன்களை கொடுப்பது இறைவன் என்றாலும், அவற்றை ஏற்று செய்யும் இறைவனின் பிரதிநிதிகளாக இருப்பது நம்மை ஆளும் நவகிரகங்கள் ஆவர். பலருக்கும் ஒன்பது கோள்களினால் கிரக தோஷங்கள் ஏற்படுகின்றது. இந்த தோஷங்களால் அவர்கள் வாழ்வில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். எத்தகைய வினைகளையும் நீக்கும் நாயகனாக விநாயக பெருமான் இருக்கிறார். அவரை வழிபடுவதற்கான “விநாயகர் ஸ்லோகம்” இதோ.

vinayagar

கணபதி ஸ்லோகம்

ராசிஸ் தாரா திதிர் யோக வார காரண அம்சக
லக்னோ ஹோரா காலசக்ரோ மேரு சப்தர்ஷயோ த்ருவ
ராஹூர் மந்த கவிர் ஜீவ புதோ பௌம சசீ ரவிஹி
கால ஸ்ருஷ்டி ஸ்திதிர் விஸ்வ ஸ்தாவரோ ஜங்கமோ ஜகத்

விநாயகரின் ஆற்றலை கூறும் மந்திர ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்ததும் குளித்து முடித்து விட்டு அருகிலுள்ள வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு முன்போ அல்லது அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கோ சென்று, விநாயகருக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி மேற்கண்ட ஸ்லோகத்தை 108 முறை துதித்து வழிபடுவதால் உங்களை பீடித்திருக்கும் எத்தகைய கிரகங்களின் தோஷங்களையும் நீக்கும். நினைத்த காரியங்கள் தடைகள் தாமதங்கள் இன்றி உடனடியாக நிறைவேறும்.

vinayagar

நமது வாழ்க்கை என்பது என்ன தான் நாம் நினைத்த படி வாழலாம் என்று முடிவெடுத்தாலும், பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைவரின் வாழ்விலும் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும் நவகிரகங்களின் ஆதிக்கத்தை அனைவருமே சுலபமாக வென்று விட முடிவதில்லை. நாம் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் கர்மா அல்லது வினை உண்டாகிறது. இந்த வினைகளை தீர்க்கும் நாயகனாக விநாயகர் இருக்கிறார். விநாயகரை தினந்தோறும் துதித்து வருபவர்களுக்கு அனைத்தும் நன்மையாகவே முடியும்.

இதையும் படிக்கலாமே:
சக்தி வாய்ந்த நவதுர்க்கை மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ganapathi slokam in Tamil. It is also called as Ganapathi slokam lyrics in Tamil or Ganapathi mantra in Tamil or Ganapthi manthiram in Tamil.