நாளை (25/7/2020) ‘ஆடி பஞ்சமி’ ஏன் விசேஷமாக பார்க்கப்படுகிறது? அன்றைய நாள் என்ன செய்ய வேண்டும்?

garuda-panchami

இந்த வருடம் ஆடி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமி திதி அன்று வருவது கருட பஞ்சமி என்றும், நாக பஞ்சமி என்றும் கொண்டாடுகிறார்கள். அதற்கு முந்தைய நாளான இன்று நாகசதுர்த்தி என கோவில்களில் இருக்கும், நாகராஜர் சிலைகளுக்கு அபிஷேகங்கள் செய்து புற்றுமண் பிரசாதமாக வழங்குகிறார்கள். நாளை கருட பஞ்சமியான விசேஷமான நாளில் நாம் எப்படி வழிபாடு செய்வது? கருட பஞ்சமி நாளில் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டியும், நாகபஞ்சமிக்காக சகோதரர்கள் ஒற்றுமையும் வேண்டி விரதம் இருப்பார்கள். இதற்கு புராணக் கதைகள் பல இருந்தாலும் விரதம் இருப்பவர்களுக்கு நாகம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் நிச்சயம் விலகும் என்பது ஐதீகம். அன்றைய நாளில் என்ன செய்யலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

nagaraja

நாகதோஷம், ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம் என்று விதவிதமான பெயர்களில் தோஷங்கள் நம் ஜாதகத்தில் கூறப்படும். ஐந்தறிவுள்ள மிருக வகைகளில் நாகமும், கருடனும் தனி சிறப்பு வாய்ந்தவையாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்திரனையே வென்ற கருடாழ்வார் பெருமாளின் அன்புக்கு உரியவர். நாம் பெருமாளை வணங்கும் முன் கருடாழ்வாரை வணங்குவது அத்தனை சிறப்பிற்குரியது என்பார்கள்.

விவசாயி ஒருவரின் விவசாய நிலத்தில் தெரியாமல் மண்வெட்டி பட்டு நாகரின் குழந்தைகள் இறந்து போனதாகவும், இதனால் கோபமுற்ற நாகர் அந்த குடும்பத்தை அழிப்பதற்கு முற்பட்டதாகவும், தன் தாய் தந்தை தந்தையரையும், சகோதரர்களையும் மன்னித்து உயிர்ப்பிச்சை தருமாறு நாகராஜாவிடம் வேண்டிக் கொண்டதாக புராணக் கதைகள் உண்டு.

Snake with lingam

அது போல் நம்முடைய மூதாதையர்கள் நம்முடைய வம்சா வழியினர் என்று நாகத்திற்கு தீங்கு இழைத்தவர்கள், அடுத்த அடுத்த சந்ததியினருக்கு நாகதோஷத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். பத்தில் ஒரு ஜாதகத்திற்கு இந்த தோஷம் நிச்சயம் இருக்கும். சர்ப்ப சாந்தி செய்வதற்கு சில ஆலயங்களுக்கு சென்று பரிகாரங்களை மேற்கொள்ள சொல்வார்கள். தோஷம் இருப்பவர்களுக்கு திருமணத் தடை, குழந்தை பாக்கிய தடை அல்லது தீராத பிணி போன்றவை பீடித்திருக்கும்.

- Advertisement -

இது போன்ற தோஷங்கள் நமக்கும் இருக்குமா? என்று கேட்டால் தெரியாது. அதனால் இந்த நாக பஞ்சமி அல்லது கருடபஞ்சமி நன்னாளில் விரதமிருந்து கருடாழ்வாரையும், நாகரையும் வணங்குவது சகல தோஷங்களையும் நீக்கும். குடும்ப ஒற்றுமையையும், திருமணத்தடை, குழந்தை பாக்கிய தடை போன்றவற்றையும் உடனே நீங்கி சுபிட்சமான ஒரு வாழ்வை தரும் என்பார்கள்.

Garudan

அன்றைய நாளில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து சுத்தமாக நாகர் படம், நாகம் கொண்ட கருமாரியம்மன் அல்லது சிவலிங்கம், கருடாழ்வார், பெருமாள் போன்றவர்களின் படங்களை வைத்து தேன் மற்றும் பாலை நைவேத்தியமாக படைக்க வேண்டும். உங்களால் முடிந்தவர்களுக்கு அன்ன தானம் செய்யலாம். விரதம் இருப்பவர்கள் மதிய பொழுதில் உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து இந்த பூஜையை செய்யலாம். முடியாதவர்கள் விரதம் இல்லாமல் சாதாரணமாக விளக்கேற்றி, தூப, தீபங்கள் காண்பித்து கீழ்வரும் மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். அவ்வளவு தான் மிகவும் சுலபமான விரதமுறை தான். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். குடும்ப ஒற்றுமை கருதியும், சகோதர, சகோதரிகள் ஒற்றுமை நீடிக்கவும், பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

Garudan

கருட காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே!
ஸூவர்ண பட்சாய தீமஹி!
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்.

aathiseshan

ஆதிஷேசன் காயத்ரி மந்திரம்:
ஓம் ஸஹஸ்ர சீர்ஷாய வித்மஹே!
விஷ்ணு தல்பாய தீமஹி!
தன்னோ ஆதிசேஷ ப்ரசோதயாத்.

garudan

கும்பாபிஷேகம் செய்யும் பொழுதோ, சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பொழுதோ கருடாழ்வார், வானத்தில் வட்டமிட்டு பக்தர்களுக்கு அருள் வழங்குவது இன்று வரை ஆச்சரியமாக இருந்து வரும் ஒரு விஷயமாகும். மிகுந்த சக்தி வாய்ந்த கருடாழ்வாரை இன்றைய தினத்தில் வணங்குபவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் இரு நாகங்கள் பின்னிருக்கும் சிலைக்கு அன்றைய நாளில் சந்தான குங்குமமிட்டு, பால் ஊற்றி வணங்கினால் பிரிந்த தம்பதியர்கள் விரைவில் ஒன்றிணைவர். நீங்களும் நாளைய நாளில் விரதமிருந்து பூஜைகள் செய்து கருடாழ்வாரின் ஆசியை பெற்று கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த சாமி படங்களை எல்லாம் மற்றவர்களுக்கு பரிசாக கொடுப்பதால் உங்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.