ஒரு சொட்டு தண்ணீர் கூட வேண்டாம். கேஸ் ஸ்டவ்வை சுலபமாக சுத்தம் செய்ய சூப்பர் ஐடியா! இப்படி செய்தால், கேஸ் ஸ்டவ் நீண்ட நாட்களுக்கு புத்தம் புதுசாகவும் இருக்குமே!

நிறைய பேர் வீடுகளில் பெண்கள், இன்னும் கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்ய சிரமப் படத்தான் செய்கிறார்கள். கேஸ் சிலிண்டரில் இருந்து ரெகுலேட்டரை கழட்டி, ஸ்டவ்வை சிங்கிற்கு பக்கத்தில் கொண்டு போய் வைத்து, தண்ணீர் ஊற்றி தேய்த்து, கழுவும் கஷ்டம் இனி வேண்டாம். சமைக்கும் இடத்தில் இருந்தபடியே சுலபமான முறையில் கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்து கொள்வது எப்படி, என்பதை பற்றி தான் என்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த டிப்ஸ் பல பேருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள பதிவு இது.

gas

முதலில் நம்முடைய ஸ்டவுக்கு மேலே சிந்தி உள்ள சமையல் பொருட்கள், ஸ்டவுக்கு அடியில் இருக்கக்கூடிய சமையல் மேடையில் சிந்தியுள்ள பொருட்கள் இவை எல்லாவற்றையும் ஒரு துணியைக் கொண்டு துடைத்து கீழே தள்ளி விடுங்கள். ஒரு சாதாரண ஸ்கிரப்பர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் 1/2 ஸ்பூன் அளவு எடுத்து ஸ்க்ரப்பரில் பரவலாகத் தடவி விடுங்கள்.

இப்போது இந்த ஸ்கரப்பரை வைத்து ஸ்டவ் முழுவதையும் நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் தேவைப்படாது. நீங்கள் பயன்படுத்தும் ஸ்கிரப்பரை மட்டும் தண்ணீரில் நனைத்துப் பிழிந்த ஸ்கரப்பர் ஆக இருக்கவேண்டும். ஸ்டவுக்கு மேல்பக்கம், பக்கவாட்டில், அடிப்பக்கம், ஸ்டவ் அடியில் இருக்கக்கூடிய திண்ணை பகுதி எல்லா இடங்களிலும் நன்றாக இந்த ஜெல்லைக் கொண்டு, ஸ்க்ரப்பர் ஆல் தேய்த்து சுத்தம் செய்து முடித்து விட வேண்டும்.

gas1

ஒரு காட்டன் துணியை எடுத்து நான்காக மடித்து கொண்டு, இப்போது ஸ்டவ்வில் இருக்கும் சோப்பை அப்படியே துடைத்து எடுத்து விட வேண்டியதுதான். காய்ந்த காட்டன் துணியை இதற்கு போதுமானது. நான்காக மடித்த காட்டன் துணி ஒரு பக்கம் ஈரமாகி விட்டால், மற்றொரு பக்கம் மடித்து சுலபமாக துடைத்து விடலாம். ஒரு காட்டன் துணியே போதும்

- Advertisement -

இப்படி உங்களுடைய ஸ்டவ் முழுவதையும் தண்ணீர் இல்லாமல் சுத்தப் படுத்தி விடலாம். தேவைப்பட்டால் இறுதியாக ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து இந்த ஸ்டவ்வை நீங்கள் மீண்டும் துடைத்து சுத்தம் செய்துக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம். ஒரு சொட்டுத் தண்ணீர் கூட போடாமல் உங்களுடைய ஸ்டவ் பளபளப்பாக மாறி இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.

gas

ஸ்டவ்வினை அடிக்கடி தண்ணீர் ஊற்றி கழுவுவதன் மூலம், சீக்கிரமே துருப்பிடித்து சீக்கிரமே கெட்டுப் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. இப்படி செய்தோம் ஆனால் கேஸ் ஸ்டவ் பார்ப்பதற்கு சுத்தமாகவும் இருக்கும். ஸ்டவ்வின் ஆயுட்காலமும் நீண்ட நாட்களுக்கு வரும். இல்லத்தரசிகள் இந்த குறிப்போடு இன்னொரு டிப்ஸையும் சேர்ந்து தெரிஞ்சுக்கோங்க.

milk2

பாத்திரம் தேய்க்கும் போது நமக்கு கஷ்டமாக இருப்பது பால் காய்ச்சிய பாத்திரத்தை தேப்பது தான். ஆனால் அந்த பாத்திரத்தை தேய்ப்பதற்கு ஒரு சுலபமான டிப்ஸ் உள்ளது. பாத்திரத்தை சிங்கிள் போட்டு விடுவீர்கள். அதன் உள்ளே தண்ணீர் ஊற்றி ஊறிக் கொண்டுதான் இருக்கும். பால் பாத்திரத்தை எடுத்து தேய்ப்பதற்கு முன்பு, ஒரு நிமிடம் வரை கவிழ்த்து வையுங்கள். கவிழ்த்து வைக்கும் போது, காற்று அதன் உள்ளே புகாதபடி நன்றாக படிய, சமையல் மேடையில் கவிழ்த்து வைக்க வேண்டும்.

cleaning

கவிழ்த்திய பாத்திரத்தை ஒரு நிமிடம் கழித்து நிமிர்த்தி, அதன் பின்பு சாதாரண ஸ்பான்ச் ஸ்க்ரப்பர் கொண்டு அழுத்தம் கொடுத்து தேய்த்தாலே, பால் பாத்திரத்தை சுத்தம் செய்து முடித்துவிடலாம். ஸ்டீல் நார் கூட யூஸ் பண்ண வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ட்ரை பண்ணி பாருங்க. இந்த ரெண்டு டிப்ஸ் உங்களுக்கு எவ்வளவு யூஸ்ஃபுல்லா இருக்குன்னு தெரியும்.