சர்வதேச சிக்ஸர்களின் மன்னனாக மாறிய யுனிவர்ஸ் பாஸ் கெயில். எத்தனை சிக்ஸர்கள் அடித்துள்ளார் தெரியுமா ? – சில ராட்சஸ சிக்ஸர்கள் வீடியோ

Gayle

இங்கிலாந்து அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் (20-02-19) பார்படாஸில் நடைபெற்றது.

Chris

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான கெயில் ஒரு ஆண்டுக்கு பிறகு நேற்றைய போட்டியில் அணயில் இணைந்து விளையாடினார்.

அவரின் ஆட்டம் நேற்று தொடக்கத்தில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் பிறகு தனது அதிரடி பாணிக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தார். நாலாபுறமும் பந்தை சிதறடித்து இவர் ஒருநாள் போட்டிகளில் தனது 24ஆவது சதத்தினை பதிவுசெய்தார். இந்த போட்டியில் 12 சிக்ஸர்களை அடித்த கெயில் அதில் 6 பந்துகளை மைதானத்திற்கு வெளியில் அடித்து தொலைத்தார். இதோ அந்த வீடியோ இணைப்பு :

இந்த போட்டியோடு கெயில் இதுவரை சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த பாகிஸ்தான் வீரரான அப்ரிடி 476 சிக்ஸர்கள் என்ற சாதனையை பின்னுக்கு தள்ளி 483 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதன்மூலம் அதிக சிக்ஸர்கள் அடித்த சர்வதேச கிரிக்கெட் என்ற சாதனையை படைத்தார். இவரின் அதிரடிக்கு நிகர் இவரே. நின்ற இடத்தில் இருந்து சிக்ஸ் அடிக்கும் இவரது ஸ்டைல் பார்ப்பதற்கு அலாதியானது.

இதையும் படிக்கலாமே :

முஸ்தாக் அலி டி20 தொடர் : கெயிலை மிஞ்சிடுவார் போல இருக்கே ஷ்ரேயாஸ் ஐயர் 147 ரன்கள் குவித்தார். எத்தனை சிக்ஸ் தெரியுமா ? அணியின் ஸ்கோர் எவ்வளவு ? என பிரமிப்பூட்டும் தகவல் உள்ளே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்