Gayle : மீண்டும் தனது அதிரடியை காட்டி ஒருநாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்து சாதனை

Chris
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது மே.இ தீவுகளில் நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று கிரினடா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 50 ஓவர்களில் 418 ரன்களை குவித்தது.

Gayle

பிறகு 419 என்கிற நம்ப முடியாத இமாலய இலக்கினை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரரான கெயில் 97 பந்துகளில் 162 ரன்களை குவித்தார் இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 389 ரன்களை குவித்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் தோல்வி பெற்றது.

- Advertisement -

கெயில் அடித்த இந்த 162 ரன்கள் மூலம் அவர் ஏகப்பட்ட சாதனைகளை செய்துள்ளார். லாராவிற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரராக 2 ஆவதாக ஒருநாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்தார், சர்வதேச அளவில் 14 ஆவது வீரராகவும் 10000 ரன்களை கடந்தார். மேலும், சர்வதேச போட்டிகளில் 500 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையினை பெற்றார். மேலும், ஒருநாள் போட்டியில் இவர் அடிக்கும் 25 ஆவது சதமாகும்.

Chris 1

39 வயது ஆகும் கெயில் சிலவாரத்திற்கு முன் தனது ஓய்வு உலககோப்பை தொடருக்கு பின்னர் என்று அறிவித்தார். ஆனால், அவரது அதிரடியை இந்த தொடரிலும் பார்த்துவருவதால் அந்நாட்டு ரசிகர்கள் அவரை ஓய்வு முடிவினை திரும்ப பெறுமாறு கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

MS Dhoni : முழுக்காலையும் நீட்டி தனது விக்கெட்டை பாதுகாத்த தோனி – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Gayle creates a New world record

- Advertisement -